Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

Published:Updated:

ந்த முறை, நம்ம 'கேர்ள்ஸ் புரொஃபைல்’ பகுதியை கலர்ஃபுல் ஆக்குறாங்க... நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாணவிகள்!

'ஆர்.ஜே' அலப்பறை!

தினமும் மூணு மணி நேரம் 'ஆர்.ஜே'வா அலப்பறையைக் கொடுக்குறாங்க, இறுதியாண்டு டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவி பிரியங்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''ஒரு பக்கம் கிளாஸ் டாப்பர், இன்னொரு பக்கம் எங்க கல்லூரி எஃப்.எம். ஸ்டேஷன் 'ஆர்.ஜே'னு பரபரப்பா போயிட்டிருக்கு வாழ்க்கை. ஹாஸ்டல் ஸ்டூடென்ட் என்ப தால, காலையில கிளாஸ் ஆரம் பிக்குறதுக்கு முன்ன ஒரு மணி நேரம், மாலையில காலேஜ் முடிஞ்சதும் ரெண்டு மணி நேரம்னு நிறைய நேரத்தை 'ஆர்.ஜே'வா செலவழிக்க முடியுது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட லைவ் ஷோஸ் பண்ணிருக்கேன். 'உன்னால் முடியும் பெண்ணே’, 'சிந்திப் போமா’, 'நலமுடன் வாழ’, 'மகளிர்  மட்டும்’, 'காலைத் தென்றல்’னு நான் தொகுத்து வழங்கும் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் ஏராளம். டெரகோட்டா, பேப்பர் க்வில்லிங் ஜுவல்ஸ் செய்து விற்பது, என்னோட இன்னொரு பார்ட் டைம் ஜாப். டெயில் பீஸ்... கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்!''

ரொம்ப நல்லா வரணும்மா!

வைரமுத்தம்மா!

றுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் சரண்யா, மேடைப்பேச்சுல முக்கியப் புள்ளி. கவிதை நடைக்காகவே 'லேடி வைரமுத்தம்மா’னு பெட் நேம் வாங்கியிருக்காங்க.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''இதுவரை 50-க்கும் மேற்பட்ட மேடைகளில் என் கவிதை முழக்கத்தையும், பேச்சுத் திறமையையும் காட்டியிருக்கேன். பேச்சுப் போட்டியில மாநில அளவுல ரெண்டு முறை முதல் பரிசும், தொடர்ந்து மூன்று ஆண்டுகளா ஈரோடு மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசும் வாங்கியிருக்கேன். பெண்களையும், சமூகத்தையும் உயர்வா சித்திரிக்கும் தலைப்புகளில்தான் அதிகம் பேசுவேன். என் ஜூனியர்களுக்கு கவிதை மற்றும் பேச்சுத் திறமைக்கு பயிற்சி கொடுத்துட்டு வர்றேன். இப்போ, 'பெண்ணின் எண்ணம்’ என்ற தலைப்புல, ஒரு பெண்ணோட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைத் தொகுத்து எழுதிட்டிருக்கேன். வரும் மகளிர் தினத்தன்று எங்க கல்லூரியில் பெரிய அளவுல நூல் வெளியீட்டு விழா நடக்க இருக்கு. கட்டாயம் வந்துருங்க!''

வராம!

கதக் சுஜீதா!

சுஜீதாவுக்கு பூர்விகம் கேரளா. படிக்குறது ஃபைனல் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ். திறமை... நடனம்.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''பள்ளி நாட்களில் இருந்து டான்ஸ் போட்டிகளில் பரிசு வாங்கிட்டு வர்றேன். கேரளாவில் புகழ்பெற்ற, 'கேரள சமாஜ'த்தில் நடைபெறும் நடனப் போட்டியில், ஐந்து முறை பரிசு வாங்கியிருக்கேன். கதக் டான்ஸ் தெரியும்னாலும், ஃபோக்தான் என் ஃபேவரைட். கண்டாங்கி கட்டிக்கிட்டு நான் ஆடினா, காலேஜே விசில் அடிச்சு கைதட்டும். ஈரோட்டில் நடைபெறும் ரயில்வே காலனி நடனப் போட்டியில பல வருஷங்களா முதல் பரிசு சுஜீதாவுக்குதான்!''

'மானாட மயிலாட’, 'ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சிக்கு எல்லாம் வாங்க மக்கா!

நூறு சர்டிஃபிகேட்ஸ்!

ஸ்போர்ட்ஸ், டிராயிங், பேச்சுப் போட்டினு பல திறமைகளுக்கும் சொந்தக்காரர், இறுதியாண்டு சிவில் படிக்கும் இந்த வாசுகி.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''எங்க காலேஜ் வாலிபால் டீம் கேப்டனான நான், மாநில அளவிலான போட்டிகளில் ஏராளமான கோப்பைகள் வாங்கியிருக்கேன். யாரோட போட்டோவையாவது கொடுத்து வரையச் சொன்னா, தத்ரூபமா வரைஞ்சிடுவேன். ஓவியப் போட்டிகளிலும் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.பேச்சுப் போட்டிகளிலும் ஆர்வமா கலந்துப்பேன். 'அரட்டை அரங்கம்’, 'அகடவிகடம்’னு நிறைய மேடைகள் பார்த்தாச்சு. இப்படி பரிசுகள் வாங்கி, 100 சர்டிஃபிகேட்ஸுக்கும் மேல சேர்த்திருக்கேன். அதெல்லாம் எனக்குப் பொக்கிஷம்!''

சக்சஸ் அன்லிமிட்டட்!

ஜூனியர் ஜானகி!

.சி.இ இறுதியாண்டு படிக்கும் கௌதமியை, 'ஜூனியர் ஜானகி’னுதான் ஃப்ரெண்ட்ஸ் கூப்பிடுறாங்க. அப்படியோர் இனிய குரலரசி!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''எங்க கல்லூரியின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நான் தான் கடவுள் வாழ்த்துப் பாடுவேன். 10-க்கும் மேற்பட்ட காலேஜ் கல்ச்சுரல்ஸில் பரிசுகள் வாங்கியிருக்கேன். கொங்கு மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடைப்பட்ட போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு வாங்கியிருக்கேன். எங்க காலேஜில் நாலு வருஷமா நான்தான் பாட்டுப் போட்டியில் வின்னர். அப்பப்போ எங்க ஊர் சமூக நிகழ்ச்சிகளில் பாடவும் எனக்கு அழைப்புகள் வரும். சினிமாவில் பிளே பேக் சிங்கராகணும். அது தான் என் ஆசை. அதுக்காகத் தான் இப்போ கர்னாடிக் மியூஸிக் கத்துட்டு இருக்கேன்!''

குயில்பாட்டு!

தொகுப்பு: கு.ஆனந்தராஜ் படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism