Published:Updated:

ஆர்டர்ஸ்... பிளானிங்... டெலிவரி...

காலேஜ் பெண்ணின் பிசினஸ் ஃபார்முலா!

ஆர்டர்ஸ்... பிளானிங்... டெலிவரி...

காலேஜ் பெண்ணின் பிசினஸ் ஃபார்முலா!

Published:Updated:

பாக்கெட் மணிக்காக அப்பா, அம்மாகிட்ட மல்லுக்கட்டின காலம் மாறி, படிக்கும்போதே மாணவர்கள் சம்பாதிக்கும் 'பார்ட் டைம் ஜாப்’ யுகம் வந்தாச்சு. இன்னும் சிலர், சொந்தமா, குட்டியா ஒரு தொழில் செய்தும் சம்பாதிக்குறாங்க. அப்படி 'தன் கையே தனக்கு உதவி’னு, மாணவ தொழிலதிபரா களம் இறங்கிக் கலக்கிட்டு இருக்காங்க, ஹரிணி!

ஆர்டர்ஸ்... பிளானிங்... டெலிவரி...

''ஒரு கஸ்டமர் கால் வெயிட்டிங்ல இருக்காங்க. 10 நிமிஷத்துல வந்துடறேன்’னு சொல்லிட்டுப் போன ஹரிணி, சில நிமிடங்களில் வந்து கை கொடுத்தாங்க. டெரக்கோட்டா மற்றும் பேப்பர் ஜுவல்லரி பிசினஸில் கலக்கிட்டிருக்குற இவங்க, சென்னை, எஸ்.டி.என்.பி  வைஷ்ணவ் கல்லூரியில் எம்.ஃபில் காமர்ஸ் படிக்கும் கெட்டிப்பொண்ணு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சும்மா ஆர்வத்தில்தான் பேப்பர் ஜுவல்லரி செய்ய ஆரம்பிச்சேன். மிகப் புதுமையான டிசைன்களில் செய்யவே, எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவங்க பாராட்டோட, அடுத்ததா டெரக்கோட்டா நகைகள் செய்யவும் கத்துக்கிட்டேன். இதுவும் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நிறைய காம்ப்ளிமென்ட்ஸ் வாங்கிச்சு. 'பேசாம இதை நீ பிசினஸா செய். சூப்பரா பிக் அப் ஆகும்!’னு என் சொந்தக்காரங்க, சொன்னாங்க. அதுக்காக ஃபேஸ்புக் பேஜ் ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. மாசத்துக்கு குறைந்தது ஐந்து ஆர்டர்களாவது கிடைச்சிரும்.

பொதுவா ஆயிரம் ரூபாய்க்கு மெட்டீரியல்ஸ் வாங்கினா, ரெண்டாயிரம் ரூபாய் லாபம் பார்க்கலாம். ஆபீஸ் போற பெண்கள் மத்தியில இப்போ டெரக்கோட்டா ஜுவல்ஸுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. ஆர்டரின் பேரில் அவங்க குர்தா, புடவைக்கு மேட்சிங்கா வும் செய்து கொடுப்பேன். ஒரு டெரக்கோட்டா செட் பண்ண குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும். என் உழைப்பு, பொருளின் வேலைப்பாட்டை பொறுத்து விலையை நிர்ணயிப்பேன்.

ஆர்டர்ஸ்... பிளானிங்... டெலிவரி...

காலேஜ் பொண்ணுங்க மத்தியில பயங்கர டிரெண்டா இருக்கிறது, ஜும்காஸ் (jumkas).அதனால, ஜும்கா ஆர்டரும் வந்துட்டே இருக்கும். அதுல 150-ல இருந்து 500 ரூபாய் வரைக்கும் ஒரு பீஸுக்கு விலை வைக்கலாம். செயின், தோடு அடங்கின ஒரு ஃபுல் செட் 500 - 2000 ரூபாய், அதுக்கு மேலயும் விலை போகும்.

ஆர்டர்ஸ்... பிளானிங்... டெலிவரி...

படிப்பையும் தொழிலையும் குழப்பிக்க மாட்டேன். எக்ஸாம் நேரத்துல பிசினஸுக்கு லீவ் விட்டிருவேன். தீபாவளி, பொங்கல், கல்யாண சீஸன்களில் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். எல்லாத்தையும் வாங்கிப்போட்டு, முடிச்சுக் கொடுக்க முடியாம திணறிப் போய் கஸ்டமர்கள்கிட்ட கெட்ட பெயர் வாங்காம, அழகா பிளான் பண்ணி, கச்சிதமா வேலைகளை முடிச்சிடுவேன். தொழில்ல சொன்ன நேரத்துல டெலிவரி கொடுக்குறது ரொம்ப முக்கியம்ல?!'' என்று அழுத்தம் கொடுக்கும் ஹரிணி, "என்னோட ஜுவல்லரிகள் சென்னை, மதுரை, திருச்சி, லக்னோ, பாம்பேனு உள்நாட்டிலும், நியூஜெர்சி, துபாய்னு வெளிநாடுகளிலும் கலக்கிட்டு இருக்கு. பிசினஸை இன்னும் விரிவுபடுத்தணும்!''

விரல்களில் 'வி’ காட்டுகிறார்!

அ.பார்வதி, படங்கள்: இரா.யோகேஷ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism