Published:Updated:

‘‘மரம் வெட்டுங்கள்!’’

- ஆச்சர்ய மெசேஜ் சொல்லும் மாணவர்கள்

‘‘மரம் வெட்டுங்கள்!’’

- ஆச்சர்ய மெசேஜ் சொல்லும் மாணவர்கள்

Published:Updated:

'மரம் நடுங்கள்!’ என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். 'மரங்களை வெட்டுங்கள்!’ என்ற வாக்கியம் பதித்த துண்டுப் பிரசுரங்களை அந்த இளைஞர்கள் நம் கையில் கொடுக்க, ஆச்சர்யமாகி விசாரித்தோம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 'தோள் கொடு தோழா’ குழுவின் உறுப்பினர்களான கவாஸ்கர், கோபிநாத், விக்னேஷ், சாந்தகுமார் மற்றும் சரண்யா ஆர்வமாகப் பேசினார்கள்!

'' என்னைத் தவிர, மற்ற அனைவரும் மாணவர்கள். வெவ்வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள். நான் வேலை பார்க்கிறேன்!'' என்று அறிமுகம் தந்த கவாஸ்கர், தானும், எம்.எஸ்.டபிள்யூ படிக்கும் கோபிநாத், விக்னேஷ் மற்றும் சாந்தகுமாரும், பி.காம் படிக்கும் சரண்யாவும் வேறு வேறு தளத்தில் இருந்து வந்து ஒருங்கிணைந்ததைச் சொன்னார்...

‘‘மரம் வெட்டுங்கள்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சமூக சேவை என்ற மையப்புள்ளியே எங்களை இணைத்தது. சென்னை, கோவை, ராணிப்பேட்டை, ஆற்காடு, சிதம்பரம் என பல ஊர்களுக்கும், பல்வேறு சேவைகளுக்காகச் சென்றபோது சந்தித்து, நண்பர்கள் ஆனோம். ரத்ததானம், கண்தானம் என்று விழிப்பு உணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தோம். கிராமங்களுக்குச் சென்று, பெண்களுக்கான சட்டங்கள் பற்றி எடுத்துரைத்தோம். அந்த வகையில்தான், தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு ஏற்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தோம்'' என்று கவாஸ்கர் நிறுத்த, கோபிநாத் தொடர்ந்தார்.

''முதல் படியாக, தண்ணீர் பஞ்சம் போக்க மரம் நடுதல் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல அதைப் பற்றிய தகவல்களைத் திரட்டியபோது தான், சில மரங்களின் தீமைகள் பற்றியும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக, சீமைக்கருவேல் (வேலிக்காத்தான், வேலிக்கருவை) நம் நாட்டின் இயற்கை வளத்தை சிதைத்துக்கொண்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிந்தது. இதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதே எங்களின் 'தோள் கொடு தோழா’ அமைப்பு!'' என்ற கோபிநாத், பெற்றோர் தரும் பாக்கெட் மணியை இதற்காக செலவிடுவதாகச் சொல்லி பூரித்தார்.  

''இந்த அமைப்பின் சார்பாக, சீமைக்கருவேல மரங்களின் தீமைகளை எடுத்துச் சொல்லும் பிட் நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கியும், எடுத்துச் சொல்லியும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, 'வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள்' என்று வெளியிட் டுள்ள பட்டியலில் முன்னணியில் இருப்பது, இந்தக் சீமைக்கருவேல மரம்தான். இவை எந்த வறட்சியிலும் நன்கு வளரக்கூடியவை. மழை பெய்யாமல் போனாலும், தன் இலைகளை வாட விடாமல் பார்த்துக்கொள்ளும். நிலத்தடி நீரை உறிஞ்சி, அந்தப் பகுதியையே வறட்சியாக்கி விடும்'' என்று விக்னேஷ், சாந்தகுமார் தந்த அதிர்ச் சித் தகவல்களை மேலும் தொடர்ந்தார், சரண்யா.

''தமிழ்நாட்டில் விறகுகளுக்கு இந்த மரத்தை வளர்க்கிறார்கள். ஆனால், இயற்கை மற்றும் மனித குலத்துக்கு பேராபத்தை தரக்கூடியவை என்பதால்தான் 'மரங்களை வெட்டுங்கள்’ என்ற பிரசாரமாக நாங்கள் முன்னெடுத்துச் செய்துகொண்டிருக்கிறோம்.

இப்போதைக்கு வேலூர், சென்னை மாவட்ட அளவில்தான் கொண்டு சேர்த்துள்ளோம். வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக, சீமைக்கருவேல மரங்களால் கடுமையான வறட் சிக்கு உள்ளாகியிருக்கும் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் எங்கள் பணியை விரிவு படுத்துவோம்!''    

காகிதங்களை மக்களின் கைகளில் சேர்த்துக் கொண்டிருந்தவர்களிடம் விடைபெற்றோம்!

ஜெ.பாரதி, படம்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism