Published:Updated:

‘ஐ ஹேட் காதல்!’

அட, இதுவும் இளம்ரத்தங்கள்தான்

‘ஐ ஹேட் காதல்!’

அட, இதுவும் இளம்ரத்தங்கள்தான்

Published:Updated:

லகமே காதலைக் கொண்டாடுகிறது. ஆனால், 'ஐ ஹேட் காதல்!’, என்று எகிறும் இளம்ரத்தங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'அட ஏம்ப்பா..?!’ என்று அவர்களின் பல்ஸ் பிடித்ததில் கிடைத்த சிக்ஸர்கள் இங்கே. பேட் பிடித்தவர்கள், சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த மாண்புமிகு மாணவமாணவிகள்!

‘ஐ ஹேட் காதல்!’

 நரேஷ்குமார், பி.இ, இறுதியாண்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காதல்னா என் அகராதியில கெட்ட நேரம் நெருங்குதுனு அர்த்தம். காதலிக்காக மீசை வெச்சு, தலனுக்காக ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை குளோஸ் பண்ணி, காதலனுக்காக நண்பனை க்விட் பண்ணி, காதலியால குடும்பத்தையே மறந்துனு... லவ்வர்ஸ், இந்த காதல் டார்ச்சரால இழக்கற விஷயங்கள், செய்ற தியாகங்கள், ஏத்துக்குற அடிமைத்தனங்கள் எக்கச்சக்கம். எதுக்கு இந்த கேடுகெட்ட காதல்ங்கிறேன்?!''

ஹேமாவதி, பி.சி.ஏ, இறுதியாண்டு

''நான் பார்த்த காதல் ஜோடிகள் யாருமே சந்தோஷமா இருந்ததில்லைங்க. பொசஸிவ்னெஸ்னு ஒரு பூதம் அவங்களை சந்தோஷமா இருக்க விடுறதே இல்ல. முக்கியமா, தங்களோட சுதந்திரத்தைக் குழி தோண்டிப் புதைச்சுதான் அது மேல எல்லாரும் காதல் செடி வளர்த்துட்டு இருக்காங்க. சுயத்தையே இழக்க வைக்குற அந்தக் காதல் நமக்கெதுக்கு?!''

பிரியங்கா, பி.சி.ஏ, இறுதியாண்டு

''அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி, ஃப்ரெண்ட்ஸ்னு எவ்ளோ சந்தோஷமா இருக்கோம்? ஆனா, காதல்ல விழுந்துட்டா, மொபைலே கதினு மொத்த உலகத்தில் இருந்தும் விலகி இருக்க வேண்டியதுதான். அப்படி கும்பலுக்கு நடுவிலும் தீவா திண்டாடிட்டு இருக்குற லவ்வர்ஸை எல்லாம் பார்க்கும் போது, 'அய்யோ பாவம்!’னு பரிதாபமா இருக்கும். சந்தோஷமா இருக்கணும்னுதானே காதலிக்கிறீங்க? ஆனா, காதலிச்சதுக்கு அப்புறம் உங்களோட சந்தோஷம் செத்துப் போயிருச்சுங்கிறதுதான் உண்மை. மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க!''

பிரசாத், பி.எஸ்ஸி, இறுதியாண்டு  

''நம்ம தமிழ் சினிமா, 'ரெண்டாவது காதல், மூன்றாவது காதல் எல்லாம் தப்பே இல்ல’னு சொன்னது கூடப் பரவாயில்ல... ஒரே நேரத்துல ரெண்டு காதல் வரலாம்னு வேற சொல்லிக் கொடுத்திருக்கு. கேட்டா, அதுதான் நிதர்சனம்னு சொல்றாங்க. அடப் போங்கப்பா!''

‘ஐ ஹேட் காதல்!’

அனு சோஃபியா, பி.எஸ்ஸி, இரண்டாமாண்டு

''நண்பனா, காதலனா? என்ற குழப்பம் 20 வருஷமா நடக்குற விஷயம்தான். ஆனா... இன்றைய யூத் அதை குழப்பமா இல்லாம, தங்களுக்கு வசதியா பயன்படுத்திக்குறாங்க. அதாவது, காதல் புளிச் சதுனா, காதலனை பாய்ஃப்ரெண்ட் ஆக்கி, காதலியை கேர்ள்ஃப்ரெண்ட் ஆக்கி, ஹேப்பியா 'பை’ சொல்லிடு றாங்க. முன்ன எல்லாம் ஒரு காதல் முறிஞ்சா, அது எவ்வளவு வலியா இருக்கும்?! ஆனா. 'பிரேக் அப்’க்கு பார்ட்டி கொடுக்குற யுகம்ப்பா இது. ஸோ, ஐ ஹேட் காதல்!''  

சண்முகராஜா, பி.எஸ்ஸி, விஸ்காம், மூன்றாமாண்டு

''இந்த மொபைல் கம்பெனிக் காரனுங்களுக்கு எல்லாம் சோறு போடுறது யாருனு நினைக்குறீங்க? காதலர்கள்தான்! சரி, அதுல உனக்கு என்ன கடுப்புனு கேட்குறீங்களா? காதல்ல விழுந்த என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் இருக்காய்ங்க. அப்பப்போ போன் பண்ணி, 'மச்சி ஈசி ஏத்துவிடு மச்சி’னு, ஏதோ சந்திரமண்டலத்துல நிக்கும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் தீர்ந்துபோன மாதிரி கதறுவாய்ங்க. நம்ம பையிலேயே பத்து, இருவதுதான் இருக்கும். பய பாவம்னு அதையும் அவனுக்காக தியாகம் செஞ்சு ஈசி ஏத்திவிட்டா, அதுக்கு அப்புறம் அடுத்த முறை பேலன்ஸ் தீர்ற வரை அந்தப்பயகிட்ட இருந்து ஒரு போன்கூட வராது. அட்லீஸ்ட், 'ஈசி ஏறிடுச்சுடா!’னாச்சும் ஒரு மெசேஜ் பண்ணி கன்ஃபார்ம் பண்ணலாம்ல? இப்படி ரீசார்ஜ் பண்ணியே காண்டான பசங்களுக்கு எப்படிங்க காதல் பிடிக்கும்?!''

‘ஐ ஹேட் காதல்!’

பிரீத்திராணி, பி.எஸ்ஸி, விஸ்காம் மூன்றாமாண்டு

''சாதி, அந்தஸ்துனு காதலர்களைப் பிரிக்க ரெண்டு கொடூரன்கள் விஸ்வரூபமா எழுந்து நிப்பாங்க. எல்லாத்தையும், எல்லாரையும் எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அந்த ரெண்டு பேரும் தங்களோட ரெண்டு குடும்பத்தையும் இழக்கணும். பெரும்பாலும் வீட்டுக்கு வெளியேவே வளர்ற பசங்களுக்கு அது பரவாயில்ல. ஆனா, பெற்றோரோட உள்ளங்கை கதகதப்புலயே வளர்ந்த பொண்ணுங்களுக்கு, அந்த நிராகரிப்பு எவ்வளவு வலியா இருக்கும் தெரியுமா? முக்கியமா, டெலிவரி சமயத்துல, தான் அம்மாவாகும்போது, தன்னோட அம்மா பக்கத்துல இல்லாத நிலைமை, கொடுமை. இவ்ளோ கஷ்டத்தையும் தரும் காதல் தேவையா?!''

பாயின்ட்டு!

ஜெ.பாரதி, ம.மாரிமுத்து

படங்கள்: ச.வெங்கடேசன், சே.சின்னத்துரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism