Published:Updated:

ட்ரீம் புரபோசல்... டீல் புரபோசல்!

ட்ரீம் புரபோசல்... டீல் புரபோசல்!

ட்ரீம் புரபோசல்... டீல் புரபோசல்!

ட்ரீம் புரபோசல்... டீல் புரபோசல்!

Published:Updated:

''பொண்ணுங்களோட 'ட்ரீம் புரபோசல்’ என்ன?’, 'பிடிக்காத புரபோசல் வந்தா, பதிலடி என்ன?’

இந்த இரண்டு கேள்விகளையும், சென்னையைச் சேர்ந்த கல்லூரிப் பெண்கள் சிலரிடம் கேட்டோம்!

'என் ஃப்ரெண்டுக்கு நடந்த ஒரு க்யூட்டான புரபோசல் அது! ஒரு 'மால்’ல, என் ஃப்ரெண்டோட அப்பா, அம்மா இருந்தாங்க. அங்க தன் அப்பா, அம்மாவோட வந்தான் அவளை லவ் பண்ணின பையன். திடீர்னு அந்தப் பொண்ணைச் சுத்தி நாலஞ்சு பசங்க 'ஃப்ளாஷ் மாப்’ (Flash Mob) மாதிரி டான்ஸ் ஆடினாங்க. என்ன நடக்குதுனே புரியாம அந்தப் பொண்ணு முழிக்க... அவளோட அப்பா  அம்மாகிட்ட, தன்னோட அப்பா  அம்மாவை நிறுத்திட்டு, எல்லார் முன்னாடியும் அந்தப் பொண்ணுகிட்ட மண்டிபோட்டு, ரோஸ் கொடுத்து புரபோஸ் பண்ணினான். சூப்பர்ல! அட ஆமாங்க... 'அந்நியன்’ அம்பி ஸ்டைல்ல, முதல்ல அப்பா, அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு புரபோஸ் பண்ணினா, க்ரீன் சிக்னல் காட்டிட வேண்டியதுதானே'' என்று சிரிக்கிறார், கரிஷ்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்ரீம் புரபோசல்... டீல் புரபோசல்!

''ம்ம்ம்...'' என்று நீண்ட நேரம் யோசித்து, ஒரு கனவைக் கண்டுபிடித்தார் திவ்யா. 'பொண்ணுங்க பலபேருக்கும் நாய்க்குட்டினா ரொம்பப் பிடிக்கும். அதனால, பையனை பொண்ணுக்கும் பிடிக்கணும்னா, அவன் இப்படி புரபோஸ் பண்ணினா வாய்ப்பிருக்கு. எப்படீனா, அழகான அந்த தோட்டத்தோட புல் தரை முழுக்க நிறைய நாய்க்குட்டிங்க இங்கயும் அங்கயுமா ஓடிட்டு இருக்கு. அதைப் பார்த்து ரசிச்சிட்டு இருக்கும்போது, பொண்ணு கையில அழகான நாய்க்குட்டியைக் கொண்டு வந்து கொடுத்து, அந்த மென்மையை உள்ளங்கைகளில் பொண்ணு உணர்ந்திட்டிருக்குற வேளையில, 'ஐ லவ் யூ!’னு சொன்னா, அந்த நிமிஷமே 'மீ டூ!’ சொன்னாலும் சொல்லிடுவாங்க!''.

'பிறந்தநாள் அன்னிக்கு நடக்கணும் அந்த வைபவம்! சரியா ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி விஷ் பண்ணணும். 'வாட் எ சர்ப்ரைஸ்!’னு கேட்க, 'போன்ல பேசினதே சர்ப்ரைஸா... உன் வீட்டு வாசல்ல கொஞ்சம் எட்டிப்பாரு!’னு சொல்ல, பால்கனிக்கு ஓடிப் போய்ப் பார்த்தா, கடுங்குளிர்ல கையில ஒரு கிரீட்டிங் கார்டோட அவன் நின்னுட்டு இருக்கணும். அப்புறம் பொண்ணுக்கு பிடிச்ச இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டுப் போய், பிடிச்ச மாதிரி நடந்துகிட்டு, அவளுக்காகவே அந்த நாள் முழுக்க செலவழிச்சுட்டு, கடைசியா 'பை’ சொல்றதுக்கு முன்ன சொல்லணும்... ஐ லவ் யூ!'' என்று சொன்ன வர்ஷினி, "தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டுப்போன மாதிரி இருக்குல்ல'' என்று தனக்குத் தானே டெயில் கேள்வியும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, தங்களை புரபோஸ் செய்தவர்களை டீலில் விட்ட அனுபவங்களைக் கொட்டினார்கள் கேர்ள்ஸ். இருவரின் 'டீல்’ மட்டும் இங்கே...

ட்ரீம் புரபோசல்... டீல் புரபோசல்!

''தினமும் நான் போற ஷேர் ஆட்டோவில்தான் அந்தப் பையனும் வருவான். நான் இறங்கும் ஸ்டாப்லதான் அவனும் இறங்குவான். இதைத் தவிர, அவனைப் பத்தி எனக்கு எந்த விவரமும் தெரியாது. திடீர்னு ஃப்ரெண்ட்ஸ் டே அன்னிக்கு ஒரு கிரீட்டிங் கார்டு கொடுத்தான். பிரிச்சுப் பார்த்தா, புரபோசல் கார்டு. தலையில அடிச்சுக்கணும் போல இருந்தது. எதுவும் பதில் பேசாம கிளம்பிட்டேன். அடுத்த ரெண்டு வாரம் கழிச்சு ரக்‌ஷா பந்தன் வந்துச்சு பாருங்க... அவன் கையில ராக்கி கட்டி, 'அண்ணா இந்தத் தங்கச்சியை வாழ்த்துங்கண்ணா!’னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்!'' என்று சுவாரஸ்யமாக கதை சொன்னார் ஸ்வேதா.

'அய்யோ... இந்த ஃபேஸ்புக்ல வர்ற புரபோசல்ஸுக்கு ஃபுல்ஸ்டாப்பே இல்லையா? என்னை யாருன்னே தெரியாது. சும்மா என்னோட போட்டோ பார்த்துட்டு, ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்புவானுங்க. அப்புறம், ஃப்ரெண்டா இருக்க விரும்புறேன்னு ஆரம்பிப்பானுங்க. அப்படியே, 'உங்க போட்டோ ஸ்மார்ட், க்யூட், லவ்லி, பியூட்டிஃபுல்’னு பிதற்றுவானுங்க. அடுத்த ஸ்டெப், 'ஐ லவ் யூ’ சொல்றது தான். இது எதுக்குமே ரிப்ளை பண்ணலைனா, திட்டி மெசேஜ் அனுப்புவானுங்க. அதையும் கண்டுக்காம விட்டுட்டா, 'இந்தப் பொண்ணு தேறாது!’னு விட்டுருவானுங்க!'' என்று அனுபவத்துடன் டிப்ஸும் சொல்கிறார் அனுஷா!

அ.பார்வதி, படங்கள்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன், ச.ஹர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism