Published:Updated:

``கேட்டுக் கேட்டு காதே செத்துப் போச்சு!''

நொந்து நூடுல்ஸாகும் காதலர்களின் ஃப்ரெண்ட்ஸ்ந.ஆஷிகா, படங்கள்: இரா.யோகேஷ்வரன்

``கேட்டுக் கேட்டு காதே செத்துப் போச்சு!''

நொந்து நூடுல்ஸாகும் காதலர்களின் ஃப்ரெண்ட்ஸ்ந.ஆஷிகா, படங்கள்: இரா.யோகேஷ்வரன்

Published:Updated:

காதலிப்பவர்களின் நண்பராக, தோழியாக, காதலிக்காத ஒருவர் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?! அந்த கோப, சோக கீதங்களைச் சொன்னார்கள், சென்னையைச் சேர்ந்த இந்த இளம்பெண்கள்!

''எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல பலரும் லவ் பண்றாங்க. நான் எவ்ளோ நொந்து நூடுல்ஸ் ஆயிட்டு இருப்பேன்னு இப்போவே உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே?!''

அனிதாவின் வார்த்தைகளில் செல்லக் கோபம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``கேட்டுக் கேட்டு காதே செத்துப் போச்சு!''

''எல்லோருமா இருக்கும்போது, ஒவ்வொருத்தியும் தன்னோட மொபைல்லயே மூழ்கிக் கிடப்பாளுங்க. பேசக்கூட ஆள் இல்லாம, நான் மட்டும் போர் அடிச்சு கிடப்பேன். அப்படியே எல்லோரும் பேசிச் சிரிக்கும்போதுகூட, ஒவ்வொருத்தியும் அவ லவ்வர் வாங்கிக் கொடுத்த கிஃப்ட், அவங்க போட்டுக்கிட்ட சண்டை, அவுட்டிங் போன இடம்னுதான் பேசுவாளுங்க. கேட்டுக் கேட்டு என் காதே செத்துப் போச்சு!''

கையெடுத்துக் கும்பிடு போட்டார்.

''என்னைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இருக்குமே..? என் பேருகூட பாவனாதான்!'' என்று நம்மை சிரிக்க வைத்த பாவனா, ''லவ் பண்றேங்கிற பேர்ல இவங்க பண்ற விஷயம் எல்லாம், சத்தியமா என் சிற்றறிவுக்குப் புரியவே இல்ல. முன்ன எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து அவுட்டிங் கிளம்பினா, பேரன்ட்ஸ்கிட்ட பெர்மிஷன் வாங்கணும். இப்போ லவ்வர்கிட்டயும் அனுமதி வாங்கணும்னு அடம் பண்ணுவாங்க. பொசஸிவ்னெஸ்ங்கிற பேர்ல சீரியல் வில்லி மாதிரி நடந்துப்பாங்க. 'அய்யோ.. பிரேக் அப்தான் போல'னு நினைச்சோம்னா, அடுத்த நாளே கிஃப்ட் கொடுத்துப்பாங்க. இவங்களோட எல்லா கிறுக்குத்தனங்களையும் பொறுத்துக்கிட்டு ஃப்ரெண்ட்ஷிப் மெயின் டெயின் பண்றது... ரொம்பக் கஷ்டம். ஆனாலும், ஃப்ரெண்டா போயிட் டாங்களே!''  தலையில் அடித்துக் கொண்டார்!

''அந்த அரைக்கிறுக்குங்களைப் பத்தி கேட்குறீங்களா?!'' என்று சிரித்த பிரியங்கா, ''பின்ன என்னங்க... பக்கத்துலயே உட்கார்ந்து கத்தினாலும் கேட்காம, வேற ஒரு உலகத்துல இருப்பாங்க. ஆனா, அவங்க லவ்வர் மனசுல நினைக்குறது 13 கிலோ மீட்டர் தாண்டி இருக்குற இவங்களுக்குக் கேட்டிருமாம். அவங்க பேக், ஒரு மினி குப்பைத்தொட்டியாதான் இருக்கும். அவன் வாங்கிக் கொடுத்த சாக்லேட் பேப்பர், அவனோட போன சினிமா டிக்கெட், அவன் கொடுத்த கிஃப்ட் கவர்னு... 'த்ரீ மச்'சா பண்ணுவாங்க!'

- சீறித் தள்ளினார்.

``கேட்டுக் கேட்டு காதே செத்துப் போச்சு!''

அடுத்து பேசிய நந்தினி, ''நமக்கு ரெக்கார்டுக்கு ஒரு கோடு போட்டுத் தரக் கேட்டோம்னா, மாட்டாங்க. ஆனா, அவங்க லவ்வருக்கு ஃபுல் ரெக்கார்ட் பக்காவா ரெடி பண்ணிக் கொடுப்பாங்க. சில சமயங்கள்ல எழுதின ரெக்கார்டுக்கு டிராயிங், அண்டர்லைன் எல்லாம் நாமளும் போட்டுக் கொடுக்கணும். இவங்களை கழுவிக் கழுவி ஊத்தினாலும் கோபமே வராது. ஆனா, லவ்வரை ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும்... சொர்ணக்காவா பொங்கி எழுந்திருவாங்க. காதலாமாம். அடப் போங்கப்பா!''

- அலுத்துக்கொண்டார்!

''என் ஃப்ரெண்டுங்கள்ல ஒருத்தியும்  அவ லவ்வரும் மொக்கை போட, என் மொபைல் காசு போற கொடுமையைக் கேளுங்க..!'' என்று மனு கொடுத்தவர், கீர்த்தனா.

''அவ வீட்டுல மாட் டிக்கக் கூடாதுனு என் மொபைல் நம்பருக்குக் கூப்பிடுவா. அப்புறம் எங்கிட்ட கெஞ்சி, கதறி அவ லவ்வருக்கு என்னை கான்ஃபரன்ஸ் போடச் சொல்லுவா. மூணு பேரும் லைன்ல இருக்க, அவங்க ரெண்டு பேரும் மட்டும் பேசிட்டே இருப்பாங்க. திடீர்னு நடுவுல நடுவுல 'இந்த அசைன்மென்ட் முடிச்சிட்டியா?’, 'பேஜ் நம்பர் சொல்லு’னு சப்ஜெக்ட் ரிலேட்டட் கேள்விகள் வரும். நானும் பதில் சொன்னா, 'அட மண்டு... பேசிட்டு இருக்கும்போது அம்மா வந்துட்டாங்க. அதான் 'பிட்'டை போட்டேன். அதுக்குப் போய் சீரியஸா பதில் சொல்லிட்டு இருக்கியே!’னு அவ என்னை கிண்டல் பண்ண, அவ லவ்வர் கடகடனு சிரிக்க... எவ்ளோ காமெடி பீஸ் ஆகுறோம் பாருங்க!

ஒருதடவை ஷாப்பிங் மால் போயிருந்தப்போ, பதற்றமா ஒரு பொண்ணு வந்து, 'ப்ளீஸ்... என் ஃப்ரெண்ட்னு சொல்லிப் பேசுங்க. எங்கம்மா லைன்ல இருக்காங்க. நான் பாய்

ஃப்ரெண்ட்கூட வந்திருக்கேன்’னு கேட்க, எவ்வளவோ பண்ணிட்டோம்... இதைப் பண்ணமாட்டோமானு அன்னிக்கு அந்த சேவையையும் பண்ணினேன். என் முகத்துல ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா..? அவ்வ்வ்!'' என்று கீர்த்தனா சொன்னதும், நாம் கடகடவெனச் சிரிக்க, ''நீங்களுமா..?!'' என்று இன்னொரு முறை சொன்னார்... ''அவ்வ்வ்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism