Published:Updated:

நிலவொளியில் திளைக்கும் கேமரா காதல்!

பொன்.விமலா  

நிலவொளியில் திளைக்கும் கேமரா காதல்!

பொன்.விமலா  

Published:Updated:
நிலவொளியில் திளைக்கும் கேமரா காதல்!

ந்தியாவின் முன்னணிப் புகைப்படக் கலைஞர்களுள் ஒருவர், கார்த்திக் சீனிவாசன். 'மூன் ஸ்ட்ரக்' (Moon Struck) என்கிற காதல் கான்செப்ட்டில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் ஸ்பெஷல் கேலண்டர், 'ரொமான்டிக்!’, 'லவ்வபிள்!’, 'வாவ்!’ என காண்போர் அனைவராலும் பேசப்படுகிறது. மாடல் ஜோடிகளை மட்டுமே வைத்துப் புகைப்படம் எடுக்காமல், திரையுலகில் மின்னும் ரீல் மற்றும் ரியல் ஜோடிகளை தன் ரொமான்டிக் கேமராவில் சிறைப்பிடித்திருக்கிறார் கார்த்திக்!

நிலவொளியில் திளைக்கும் கேமரா காதல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எட்டு வருஷமா தொடர்ந்து இந்த கேலண்டர் கான்செப்ட் உருவாக்கி வெளியிட்டுட்டு இருக்கோம். 2015-க்கான கான்செப்ட்தான், 'மூன் ஸ்ட்ரக்’. அதாவது ஒரு நிலா வெளிச்சத்தில் மூழ்கித் திளைக்கும் காதல்னு சொல்லலாம். இந்த கான்செப்ட்டை முடிக்கிறதுக்கு ஒரு மாசம் எடுத்துக்கிட்டோம். இந்த தீம்ல சினேகாபிரசன்னா, அருண்விஜய்ஆர்த்தி, பரத்ஜெஸ்லி, காந்த்வந்தனானு ரியல் தம்பதிகளோட, விஜய் சேதுபதிஐஸ்வர்யா ராஜேஷ், அசோக் செல்வன்ஜனனி ஐயர், விஷ்ணுரஜினி நட்ராஜ், கௌதம் கார்த்திக்பிரியா ஆனந்த்னு ரீல் ஜோடிகளையும் சேர்த்து, வித்தியாசமான ஸ்டைலோடவும் லுக்கோடவும் கொடுத்திருக்கோம்.

நிலவொளியில் திளைக்கும் கேமரா காதல்!

நிறைய பாராட்டுகள் வந்துட்டு இருக்கு. படங்கள்ல பாத்த ஸ்டார்ஸ் எல்லோரும் மொத்தமா வேற ஒரு கான்செப்ட்ல மாறி இருக்குறதைப் பார்த்து, தாங்களும் அதேமாதிரி போட்டோ எடுத்துக்கணும்னு பலரும் ஆசைப்பட்டுக் கேட்குறாங்க. காதலில் இருக்கும் அனைவருக்கும் இந்த கேலண்டர் நிச்சயம் பிடிக்கும்!''  ரொமான்டிக் லென்ஸ்காரர் லவ்லியாகச் சிரிக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism