Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

லியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் எதிர்வீட்டு தாத்தா பாட்டியை சிறுவயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நமக்குள்ளே...

சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால் போதும்... அந்தக் குழம்புச் சட்டியையே தூக்கிப் போட்டு உடைத்துவிடுவார் தாத்தா. தலைமுடிக்கு தாத்தா டை அடித்தால், ஊரையே கூட்டி 'இளமை ஊஞ்சலாடுதாக்கும்’ என ஒப்பாரி வைக்கத் துவங்கிவிடுவார் பாட்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சண்டை இன்று, நேற்று ஆரம்பித்ததல்ல... கல்யாணம் ஆன புதிதிலிருந்தே ஆரம்பமாகிவிட்ட நெடுந்தொடர்தான்! இருவருக்கும் மூன்று ஆண் பிள்ளைகள். அவர்களின் முன்பாகவும் சதா சண்டையிட்டு, பிள்ளைகளை அழவிடுவதும் வாடிக்கையே!

காலங்கள் உருண்டோட, பிள்ளைகள் மூவரும் திருமணம் முடிந்து, மூன்று திசைகளாக பிரிந்துவிட, தாத்தா பாட்டி தற்போது தனியாக வசிக்கிறார்கள். இப்போதெல்லாம் அந்த வீட்டில் காலையில் சுப்ரபாதம் பாடல் சத்தமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. 'ஏம்மா... ஒரு கப் காபி கொண்டு வரவா’ என கொல்லையில் கீரை பறித்துக் கொண்டிருக்கும் பாட்டியிடம் ரொமான்டிக்காக தாத்தா பேசுவது அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் அழகாக ஒலிபரப்பாகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசாமல், 'கடமையே’ என்றுதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், குழந்தைகளின் பிரிவு கொடுத்த துயரம், காலம் கடந்து அவர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. எப்போதும் சண்டையிட்டு கொண்டிருந்தவர்கள், இப்போது அந்நியோன்னியமாக வாழ்வதைப் பார்த்து தெருவே வியந்துகொண்டிருக்கிறது.

இப்படி ஒரு நிஜக்கதையை சமீபத்தில் கேள்விப்பட்டதும், அந்த தம்பதிக்கு போன் போட்டு வாழ்த்து சொன்னேன்.

'கல்யாணத்துக்கு முன்பு வருவதற்கு பெயர்தான் காதல் என்று பலரும் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வயோதிகத்தின் கடைசி நொடி வரை துணையின் மடி சுகம் கிடைக்கப் பெற்றவர்கள், பாக்கியசாலிகள்’ என எப்போதோ படித்தது நினைவிலாடியது.

'காதலர் தினம்’ என்று ஒரு நாளை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளாமல், ஈகோவை தூர எறிந்துவிட்டு, தினம் தினம் காதலை சுவாசிக்கலாம்தானே தோழிகளே!

வாழ்த்துகள்!

உரிமையுடன்,

ஸ்ரீ..

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism