Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

பொன்.விமலா, ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

பொன்.விமலா, ஷாலினி நியூட்டன்

Published:Updated:

ஸ்ரேயா டும் டும்!

பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல்... தமிழ், இந்தி உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களைப் பாடியிருக்கிறார். உலக அளவில் ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் அதிகம். அதிக சம்பளம் பெறும் பாடகிகளின் பட்டியலில் ஸ்ரேயா கோஷலுக்கு எப்போதும் இடமுண்டு. சமீபத்தில் வெளியான 'ஐ’ திரைப்படத்தில் பாடிய 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடல் ஹிட்.

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஹிட் நாயகி... கடந்த வியாழன் அன்று திடீரென கல்யாணம் கட்டிக்கொண்டுவிட்டார். ஸ்ரேயாவுக்கும், அவருடைய  இளம் வயது நண்பரும் தொழிலதிபருமான ஷிலாதித்யாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இத்தகவலை தனது டுவிட்டரில் படத்துடன் வெளியிட்டுள்ளார் இந்த மெலடி குயின்.

திருமணத்துக்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களைத் தவிர, வேறு யாரையும் ஸ்ரேயா அழைக்கவில்லை.

நலம் வாழ எந்நாளும் நம் வாழ்த்துகள்!

ஒபாமா வரவு!

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

ம் குடியரசுதின விழாவில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி சகிதமாக இந்தியாவுக்கு வந்தாலும் வந்தார்... இணையமே ஒபாமா மயமாக மாறிப்போனது. ஒருபக்கம் 'ஒபாமா இன் இந்தியா’ என டிரெண்டாக, இன்னொரு பக்கம், 'இவரு இப்போ இங்க எதுக்கு வந்தாரு?’ என நெட் உலகமே மீம்ஸ், ஸ்டேட்டஸ், ட்வீட் என ஒபாமாவைப் புரட்டியது. குறிப்பாக, ஒபாமா  மோடி டீ சாப்பிடும் புகைப்படம், இப்போது வரை நெட்டில் சுற்றி வருகிறது!

வாங்க... பழகலாம்!

ஆசிரியைகளுக்கும் துப்பாக்கி பயிற்சி!

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

டந்த டிசம்பரில் பாகிஸ்தான், பெஷாவர், ஆர்மி பப்ளிக் பள்ளியில், 132 குழந்தைகள் உட்பட 150 பேருக்கு மேற்பட்டோர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. தற்போது அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியைகளில் சரியான ஆட்களைத் தேர்வு செய்து, துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 'எங்கள் மாணவர்களைக் காப்பாற்ற எங்களுக்கு ஆயுதப் பயிற்சி தேவைதான்’ என, ஆசிரியைகள் பலரும் முன்வந்து பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள்! இதேபோல மற்ற பள்ளிகளிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆய்த எழுத்து!

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

டந்த ஜனவரி 29-ம் தேதி அன்று முகநூல் உலகம் முழுக்க 15 நிமிடங்களுக்கும் மேல் வேலை செய்யாது போக, சமூகவலைதளவாசிகள் பலரும் சிரமங்களை எதிர்கொண்டனர். பொழுதுபோக்கு தளம்தானே என்று எண்ண முடியாத அளவுக்கு, இன்ஸ்டாக்ராம், லிங்க்டு இன் உள்ளிட்ட 1,000க்கும்

மேலான அப்ளிகேஷன்கள் முகநூலையும் அடிப்படையாகக் கொண்டு வேலை செய்கின்றன. மேலும் தொழில்ரீதியாகவும் முகநூல் அவசியமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அன்றைய தினத்தில் பலருக்கும் பொருளாதார நஷ்டமும் ஏற்பட்டது.

பின்னர் சேவையைச் சீராக்கிய முகநூல், இந்த இடையூறுக்காக பயனாளர்களுக்கு ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்பது... டூ பேட்! இதனால் கடுப்பான இணையவாசிகள் #facebookdown என ட்விட்டரில் டிரெண்டாக்கிவிட்டனர்.

தவறு நேர்ந்தால், மன்னிப்புக் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் மார்க்ஜி!

சாகச பார்பி!

ஹிட்ஸ்...  ஹிட்ஸ்...

பார்பி பொம்மைகள் என்றாலே அழகு தேவதைகள் என்பதுதான் இதுவரையிலான பிம்பம். ஆனால், இப்போது பெண்கள் தைரியசாலிகளாகவும், சாகச வீராங்கனைகளாகவும் மாறி வருவதைப் பிரதிபலிக்கும் பொருட்டு, சூப்பர் பவர் பார்பிகள் இந்த வருடம் முதல் விற்பனைக்கு வர உள்ளன. ஜெர்மனியில் உள்ள நியூரெம்பெர்க்கில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பார்பி பிரின்சஸ் பவர் பொம்மையில், ஒரு பட்டன் இருக்கிறது. அதை அழுத்தினால், பார்பி அணிந்திருக்கும் அழகிய ஸ்கர்ட், சடாரென சூப்பர் பவர் சிறகுகளாக விரிகிறது. பிங்க் கிரீடம், அடையாளம் மறைக்கும் முகமூடி ஆகிறது. மொத்தத்தில், சாஃப்ட் பார்பி டால், நொடியில் சூப்பர்ஹீரோயினியாக உருமாற்றம் பெறுகிறது!

'ஒய் ஷுட் பாய்ஸ் ஹேவ் ஆல் த அட்வென்சர்ஸ்?!’ என்று கேட்கும் பெண் குழந்தைகளுக்கான பக்கா பரிசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism