Published:Updated:

காதல் இளவரசனுக்கு நோ காதலி!

ரிமோட் ரீட்டாகேபிள் கலாட்டா!

காதல் இளவரசனுக்கு நோ காதலி!

ரிமோட் ரீட்டாகேபிள் கலாட்டா!

Published:Updated:

சின்னத்திரை ஸ்டார்ஸ் கூட, கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் பேசினேன்! என்னதான் போட்டு வாங்கினாலும், பயபுள்ளைங்க பயங்கர சுதாரிப்புதான்!

முதல் போணி, விஜய் டிவி. 'ஆபீஸ்’ சீரியல்ல 'விஷ்ணு’வா நடிக்கிற விஷ்ணு.

காதல் இளவரசனுக்கு நோ காதலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விஷ்ணுவுக்கு நிறைய பொண்ணுங்க ஃபேன்ஸ் போல? உன்னை சின்னத்திரை காதல் இளவரசன்னு எல்லாம் சொல்றாங்க!''

'வயசுப் பையன் அழகா இருந்தா, அப்டிதான்!''

'இளவரசரே... உங்க இளவரசி பத்தி சொல்லுங்க!''  

''பார்க்க மைதா மாவு கலர்ல இருக்கிறதால, நிறைய பேர் என்னை நார்த் இண்டியனானு கேட்கிறாங்க ரீட்டா. நான் பக்கா சென்னைப் பையன். ஆனா, வளர்ந்தது எல்லாம் நார்த் இண்டியன் ஏரியாதான். அட, பாரீஸ் கார்னர்லதான் நம்ம வீடுனு சொல்ல வந்தேன்...''

''நான் கேட்டது உன் லவ்வர் பத்தி...''

''பொறுமையா கேளு ரீட்டா. ப்ளஸ் ஒன்ல பாய்ஸ் ஸ்கூல்ல சேர்ந்தப்புறம்தான், பொண்ணுங்க நம்ம வாழ்க்கையில எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சது. அதுல இருந்து நானும் 'எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா’னு தேடுறேன். இன்னும் கிடைச்ச பாடில்ல. கேர்ள் ஃப்ரெண்டுக்கே இப்படினா, காதலி எல்லாம் நமக்கு எப்பத்தான் கிடைக்கிறது? நான் காதல் பாடத்துல கே.ஜி பையன் ரீட்டா. இனி ஸ்கூல் முடிச்சு, காலேஜ் போய், யூ.ஜி., பி.ஜி., பிஹெச்.டி எல்லாம் முடிச்சிட்டுதான், காதல் பண்ணவே ஆரம்பிக்கணும்!

என் கவனம் எல்லாம் கேரியர்லதான். இப்போ விமல், அஞ்சலி நடிக்கிற 'மாப்பிள்ளை சிங்கம்’ படத்துல நானும், நம்ம 'ஆபீஸ்’ சீரியல் 'லஷ்மி’, அதான் மது... ரெண்டு பேரும் சேர்ந்து செகண்ட் ஹீரோ, ஹீரோயின் கேரக்டர் பண்ணிட்டிருக்கோம். 'படம் முடியுற வரை வேற யாரோடயும் கமிட் ஆகிடாதம்மா... அப்புறம் நடிப்புல நம்ம கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாம போயிடும்!’னு மினி அக்ரிமென்ட் போட்டிருக்கேன். அப்புறம், இன்னொரு பிரபல டீமோட சேர்ந்து ஹீரோவா ஒரு படம் பண்ணிட்டிருக்கேன். இன்னும் டைட்டில் முடிவாகல.

கேரியர்ல இப்படியே போய் நஸ்ரியா, நயன்தாரா, ஹன்சிகாவோட எல்லாம் சேர்ந்து நடிச்சுட்டு, அப்படியே 'ஹன்சிகாவுடன் விஷ்ணு ரகசிய சந்திப்பு’, 'நயன்தாராவுடன் விஷ்ணு நயாகரா ஃபால்ஸில் மீட்டிங்’னு மீடியாவுக்கு நியூஸ் கொடுக்குற அளவுக்கு ஃபீல்டுல நின்னுட்டு, அப்புறமா லவ் பத்தி எல்லாம் பார்த்துக்கலாம்.

அய்யய்யோ! ஓட்டா வாய்டா விஷ்ணு உனக்கு. ரீட்டா மேடம்... ஒரு கூல்ட்ரிங்ஸ் சொல்லவா..!'

''நோ தேங்க்ஸ்..!''

''சின்னச் சின்ன சர்ப்ரைஸ்!''

'சன் மியூஸிக்’ அஞ்சனா... சின்னத்திரை த்ரிஷா! ஃபீல்டுக்கு வந்து ரொம்ப நாளானாலும் பீக்லயே இருக்குற சிக் பியூட்டி.

''ரீட்டா... காதலர்தின ஸ்பெஷலுக்கு பார்க்க வந்திருக்கேன்னா, உங்கிட்ட கவனமாதான் பதில் சொல்லணும்!''

''சரி, ஒரே ஒரு கேள்விதான். உன் லவ்வர் பத்தி சொல்லு!''

''அடிப்பாவி! அப்படி ஒருத்தர் இருந்தாதானே சொல்றதுக்கு?''

''ஏன் அப்படி ஒருத்தர் இல்லை?''

''ஏன்னா, அப்படி ஒருத்தரை நான் இன்னும் பார்க்கலை!''

''ரொம்ப பழைய பதில் அஞ்சனா...''

''நீ கேட்டதும் ரொம்ப பழைய கேள்வி ரீட்டா!''

''சரி, டீலுக்கு வருவோம். அஞ்சனாவை கரெக்ட் பண்ணணும்னா... என்ன பண்ண

ணும்?!''

காதல் இளவரசனுக்கு நோ காதலி!

'ஒரு பையனைப் பாத்தவுடனே, ஒரு கனெக்ட் தோணணும் ரீட்டா. அழகனா, திறமைசாலியா இருக்கணும். ஆனா, கர்வத்துக்கு ஸ்பெல்லிங்கூட தெரியாதவனா இருக்கணும். புரபோஸ் பண்ணுற விதம், ரொம்ப முக்கியம். டிரமாடிக்கா, எமோஷனலா இல்லாம, 'விடிவி’ சிம்பு மாதிரி, என் மேல இருக்குற அன்பை இயல்பான வார்த்தைகளில் சொல்லணும். என் லைஃப் பார்ட்னரா வரப்போற பையனுக்கு, 'இந்த உலகத்துலயே நாமதான் அதிர்ஷ்டசாலி!’னு அவன் சந்தோஷப்படுற அளவுக்கு, என்னோட அன்பை சின்னச் சின்ன சர்ப்ரைஸ்களால உணர்த்திட்டே இருப்பேன்!''

''பயங்கர ரொமான்டிக்கா பேசுற. கேட்டா, 'நோ’ சொல்ற. நம்ப முடியலையே..?!''

''இதுக்குத்தான் உங்கிட்ட கவனமா பேசணும்னு சொன்னேன். இடத்தை காலி பண்ணும்மா!''

டாட்டா!

'சின்னத்தம்பி’ குஷ்பு!

காதல் இளவரசனுக்கு நோ காதலி!

வேந்தர் டி.வி 'புத்தம் புது காலை’ நிகழ்ச்சியை ஃப்ரெஷ்ஷா நடத்தும் கீர்த்திகா, செம வாயாடி!

'கீர்த்தி... வேலன்டைன்ஸ் டேக்கு என்ன பிளான்?''

''உனக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லணும் ரீட்டா.

எங்க அண்ணா ரொம்ப பாசக்காரன். அவன்கூடதான் நான் ஸ்கூலுக்குப் போவேன். பசங்க பார்வையே என் மேல படாம பொத்திப் பொத்தி வளர்த்தான். அவனுக்குப் பயந்தே யாரும் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்கமாட்டாங்க. அப்படியும் எவனாச்சும் என் ஃப்ரெண்ட்டுகிட்ட லெட்டர் கிட்டர் கொடுத்து அனுப்பிட்டா... அவனை உண்டு, இல்லைனு பண்ணிடுவான்!''

'அவ்ளோதானா... இல்லை, ஒரு பக்கம் மொட்டை, ஒரு பக்கம் மீசை இந்த மாதிரி ஏதாச்சும்..?'

'கலாய்க்கிறியா? நான் என்ன 'சின்னத்தம்பி’ குஷ்புவா?'

'கோவப்பட்டு அண்ணன்கிட்ட போட்டுக் கொடுத்துடாதம்மா! சரி, அண்ணன் இல்லாத நேரத்துல யாராச்சும் வந்து 'ஐ லவ் யூ’ சொன்னா?''

'அதுக்குதான் இருக்கே 'ஆபரேஷன் 3’!''

'அதென்ன அது..?!''

''ஒண்ணு... 'எங்க அண்ணன்கிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்!’னு பயமுறுத்துவேன். ரெண்டு, 'நான் ஏற்கெனவே கமிட்டட்!’னு சொல்லிப் பார்ப்பேன். அதுக்கும் போகலைனா, மூணாவதா, 'நான் அந்தளவுக்கு வொர்த் இல்ல. வேணும்னா நானே உனக்கு ஏத்த ஒரு பொண்ண கண்டுபிடிச்சு தரவா?’னு கேட்டுடுவேன்!'

உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சுருக்கு!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150

கலாசார சீரழிவு!

''தொலைக்காட்சிகளில் வரும் பண்டிகைக் கால சிறப்பு நிகழ்ச்சிகளில் பலவும் கலாசார சீரழிவை நோக்கியே செல்கின்றன. கல்லூரி மாணவிகள் 30, 40 பேரை அழைத்து அவர்களுடன் பிரபல நடிகர்களில் ஒருவரை அழைத்து வந்து கூத்தடிக்கின்றனர். அப்போது, நடிகர் மாணவிகளின் மீது செல்லமாக அம்பு விடுவது, மாணவிகள் ஒவ்வொருவராக நடிகருக்கு இனிப்பு ஊட்டுவது, காதல் வசனங்களைப்  பரிமாறிக் கொள்வது, கைகோத்து நடனமாடுவது, உச்சகட்டமாக பூங்கொத்து கொடுத்து 'ஐ லவ் யூ கூறுவது’ போன்ற செயல்களைப் பார்க்க அவமானமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. நமது பண்பாட்டை சீரழிக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை அடியோடு நிறுத்த வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் சென்னை, கொளத்தூரில் இருந்து பிரேமா கார்த்திகேயன்.

தமிழ் காக்கும் தரமான நிகழ்ச்சி!

"புதிய தலைமுறை சேனலில் தினமும் காலை 8:30 மணி செய்தியின் முடிவில் 'மொழியறிவோம்’ என்ற நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அதில், நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களுக்கு, தூய தமிழ் வார்த்தைகளைக் கூறுகின்றனர். உதாரணமாக, மிக்ஸிக்கு மின் அம்மி, பாராசூட்டுக்கு வான்குடை என்று தமிழில் பொருள்படுகிறதாம். இதுபோன்ற தூய தமிழை காக்கும் நிகழ்ச்சிகள் தேவை'' என்கிறார் மதுரையில் இருந்து என்.சாந்தினி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism