Published:Updated:

காதல் சொல்லும் கேக்குகள்!

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

காதல் சொல்லும் கேக்குகள்!

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:

ந்த வருட 'வேலன்டைன்ஸ் டே’வுக்கான காதல் உலகின் கேக்குகளைத் தயார் செய்து கொண்டிருந்தார், மரியா! தன் காதலி/ மனைவிக்குப் பிடித்தமான விஷயங்களை ஆண்களும், தன் காதலன்/கணவனுக்குப் பிடித்த விஷயங்களை பெண்களும் கேக்கிலேயே  செய்துகொடுக்கச் சொல்லி, மரியாவுக்கு ஆர்டர்கள் வந்து சேர... சென்னை, சேத்துப்பட்டில் உள்ள அவரின் 'அடோனியா (Adoniya)’ கேக் ஷாப்பில் 'ஹாய்!’ சொன்னோம் மரியாவுக்கு!  

காதல் சொல்லும் கேக்குகள்!

''திருமணத்துக்கு அப்புறம் பொட்டீக் வெச்சிருந்தேன். ஷோரூமுக்கு குழந்தைகளோட வரும் பெண்களை, அந்த குட்டீஸ் தொந்தரவு செய்தபடியே இருக்க, அவங்களால நிம்மதியா ஷாப்பிங் பண்ண முடியாது. அதனால, அம்மாக்கள் ஷாப்பிங் பண்ற வரைக்கும், குட்டீஸ்களை அமைதியா உட்கார வைக்க, நானே செய்த கப் கேக்குகளை கொடுக்க ஆரம்பிச்சேன். அதுக்குக் கிடைச்ச ஆரவார வரவேற்புதான், மூணு வருஷத்துக்கு முன்ன, 'அடோனியா’வை ஆரம்பிக்க வெச்சது.  'அடோனியா’னா மிகமிக அழகான என்று அர்த்தம். இப்போ ஆழ்வார்ப்பேட்டை, பெசன்ட் நகர்னு ரெண்டு கிளைகள் வரை வளர்ந்திருக்கேன்!'' என்ற மரியா, அந்த சீரான வெற்றி சாத்தியமானது பற்றிச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கேக் என்பது, விசேஷ நாளுக்கான ஆர்டராதான் இருக்கும். அதை சிறப்பா செய்து கொடுத்துட்டோம்னா, விசேஷத்துக்கு வந்திருக்குற விருந்தினர்கள் எல்லாருக்குமே நாம விசிட்டிங் கார்டு கொடுத்த மாதிரி. அடுத்த ஆர்டர் சுலபமா கிடைச்சிடும். அதோட, ஃபேஸ்புக்ல அடோனியா என்கிற என்னோட பேஜ்ல, பிளாக்பெரி, புளூபெரி, வொயிட்பெரி, ஃபிரஷ்கிரீம், பைனாப்பிள், சீஸ் கேக், சாக்லெட் கேக், டிசைனர் கேக்னு பல சுவைகளில், வடிவங்களில், டிசைன்களில் கேக் போட்டோக்கள் போஸ்ட் பண்ண, 'இப்படி எல்லாம்கூட கேக் செய்ய முடியுமா?!’னு அதில் கவரப்பட்டும் ஆர்டர்கள் குவிஞ்சது.

காதல் சொல்லும் கேக்குகள்!

'என் குழந்தைக்கு இந்த சாக்லேட் ரொம்ப பிடிக்கும், இந்த டாய்ஸ் ரொம்ப பிடிக்கும்... என் லவ்வருக்கு இந்தமாதிரி நகைகள் பிடிக்கும்'னு ஒவ்வொருவரும் விரும்புற விஷயங்களை எங்ககிட்ட சொல்லி போட்டோ கொடுத்துட்டாங்கனா, அப்படியே கேக்ல வடிவமைச்சுக் கொண்டுவந்துடுவோம். வெளிநாடுகள்ல இருக்கவங்க, ஃபேஸ்புக் மூலமா, சென்னையில இருக்கற உறவினர்களுக்கு கேக் ஆர்டர் பண்ணுவாங்க. ஹோம் டெலிவரிக்கு ஏ.சி கேப் ஏற்பாடு செய்து கொடுப்போம்!'' என்ற மரியா, குக்கரி வகுப்புகளும் எடுக்கிறார்.

கிட்டத்தட்ட 25 பணியாளர்களுக்கு முதலாளியாக இருக்கும் மரியா, ''என் கணவர் சன்வீர்தான், என் முழு பலம்!'' என்றபோது, புன்னகை அவர் முகத்தில். சனா, சானியா என்ற இரண்டு குழந்தைகளின் இந்த மம்மி, தன் கடையின் சிறப்பம்சமான 'வேலன்டைன்ஸ் டே’ கேக் பற்றிச் சொன்னார்.

காதலும், கிரீமும் மிகுந்த கேக்குகள் தயாராக இருக்க, பிசினஸில் பரபரப்பாகிறார் மரியா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism