Published:Updated:

நல்ல வருமானம் தரும் நான்-ஓவன் பேக்ஸ்!

கே.அபிநயா, படங்கள்: தி.ஹரிஹரன், மீ.நிவேதன்

நல்ல வருமானம் தரும் நான்-ஓவன் பேக்ஸ்!

கே.அபிநயா, படங்கள்: தி.ஹரிஹரன், மீ.நிவேதன்

Published:Updated:

''மெஷினரி தயாரிப்பு, பசைத் தயாரிப்பு, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பிரஷ்கள் தயாரிப்பு... இது மூணும் என் கணவர் ஆரம்பித்த தொழில்கள். அவருக்கு உதவியா இருந்த நானும், இந்தத் தொழில்களைக் கத்துக்கிட்டேன். 5 வருஷத்துக்கு முன்ன அவர் தவறினப்போ, இந்தத் தொழில்களை விடக்கூடாது என்ற உறுதிதான், நானும் தொழில்முனைவோர் ஆன கதை!’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த வசந்தி, உழைப்பைத் துடுப்பாக்கி கரைசேர்ந்த பெண்களில் ஒருவர்.

நல்ல வருமானம் தரும் நான்-ஓவன் பேக்ஸ்!

''அந்த மூணு தொழில்களில், மெஷினரி தொழிலை மட்டும் என்னால தொடர முடியல. பசை தயாரிப்பு மற்றும் பிரஷ் தயாரிப்பை தொடர்ந்து செய்தேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, 'நான்ஓவன்' பேக்குகள் (non - woven- bags) தயாரிப்பையும் கையில் எடுத்தேன். இந்த மூணு பிசினஸும் நல்லவிதமா போயிட்டிருக்கு. குறிப்பா, வணிக இடங்களில் பொருட்கள் டெலிவரிக்குப் பயன்படுத்துற 'நான்ஓவன் பேக்', பசை தயாரிப்பு இது ரெண்டும் செய்றதுக்கு எளிமையான தொழில்கள்'' என்ற வசந்தி, அவை பற்றிய தகவல்களைத் தந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான்ஓவன் பேக் தொழிலுக்கு ஒரு லட்சம் முதலீடு தேவைப்படும். ஆனா, இது ஆயுளுக்குமான முதலீடு. ஆர்டர்கள் வாங்கும்போது, அவங்க விலையைக் குறைச்சுக் கேட்டா, அப்போ நீங்க ஆர்டரை அதிகமா கேட்கணும். அதாவது, 1,000 பேக்ஸ் கேட்குற இடத்துல, 1,500 பேக்ஸ் எடுத்துக்கோங்கனு சொல்லணும். இதனால, அவங்களுக்கு குறைந்த விலையும், நமக்கு லாபமும் கிடைக்கும். ஏற்கெனவே போட்டிகள் நிறைந்த ஏரியாவில் தொழில் தொடங்க வேண்டாம். கஸ்டமரை கவரும் வகையில், நிறைய மாடல்கள் வெச்சிருக்கணும். விளம்பரங்கள் முக்கியம். நியூஸ் பேப்பரில் விளம்பரம் செய்வதுடன்... கோயில்கள், கேட்டரிங் போன்ற இடங்களில் நேர்ல போய் வாய்ப்பு கேட்கலாம். எல்லா செலவுகளும் போக, 10 பர்சன்ட் லாபம் கிடைக்கும்!'' என்ற வசந்தி, பசை தயாரிப்புத் தொழிலின் அறிமுகமும் தந்தார்.

நல்ல வருமானம் தரும் நான்-ஓவன் பேக்ஸ்!

''பசை தயாரிக்கும் தொழிலுக்கு மூலப் பொருட்கள், மெஷினரிகள் எல்லாம் விலை அதிகம் என்பதால், குறைந்தபட்சம் 2 லட்சம் முதலீடு தேவை. நிறைய உழைப்பை போட்டா, 20 பர்சன்ட் லாபம் தரும் தொழில் இது. போட்டிக் குறைவு என்பது, இந்தத் தொழிலோட ப்ளஸ் பாயின்ட். நான் செய்யும் இந்த மூணு தொழில்கள், எனக்கு மாதம் 35,000 ரூபாய் வருமானம் தருது. என் மூணு புள்ளைகளையும் நான் படிக்க வெச்சு ஆளாக்கினது, இந்த சுயசம்பாத்திய தெம்புலதான்!''

தொழில்முனைவோராகப் பேச்சைத் தொடங்கி, அம்மாவாக நிறைவு செய்த வசந்தி, பசை தயாரிப்பு மற்றும் 'நான்ஓவன்' பேக்குகள் தயாரிப்பு தொழில்களைப் பற்றி 'வழிகாட்டும் ஒலி’யில் பிப்ரவரி 10 முதல் 16 வரை உங்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்!

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண் 044 - 66802912.

உழைப்பு பாதி... மார்க்கெட்டிங் மீதி!

''அலுவலகத்திலோ, தொழிற்கூடத்திலோ வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்கள், சுயமாக தொழில் தொடங்கி முதலாளியாகும் உத்வேகம் பெற வேண்டும்!'' என்று தன்னம் பிக்கை தரும் வார்த்தைகளைத் தருகிறார், சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறு மற்றும் குறுதொழில் சங்கத்தின் துணைத்தலைவர், சி.கே.மோகன்.  

நல்ல வருமானம் தரும் நான்-ஓவன் பேக்ஸ்!

''ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன், அந்தத் தொழிலின் எல்லா நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டு இறங்கினால், ஆரம்பகட்ட தடுமாற்றங்களை வெற்றிகரமாக சமாளிக்கலாம். முக்கியமான விஷயம், மார்க்கெட்டிங். ஏனென்றால், உற்பத்தியில் உழைப்பைக் கொட்டினாலும், மார்க்கெட்டிங் திறனே அதற்கான பலனைப் பெற்றுத் தரும். ஒவ்வொரு வகை தொழிலுக்கும் ஒவ்வொரு விதமான மார்க்கெட்டிங் யுக்தி இருக்கிறது.

மார்க்கெட்டிங்கில் கவனம் கொடுக்க வேண்டிய ஏரியா, செய்யக் கூடாத விஷயங்கள், அணுக வேண்டிய நபர்கள், செய்துகொள்ள வேண்டிய ஒப்பந்தம்... இப்படி பல சூட்சுமங்கள் உள்ளன. அதைப் பற்றிய புரிதலும் தெளிவும் மிகமிக அவசியம்!'' என்ற மோகன், பிப்ரவரி 17 முதல் 23 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் சுயதொழில்களுக்கான மார்க்கெட்டிங் விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.  

044- 66802912 என்ற எண்ணுக்கு போன் போடுங்கள். மார்க்கெட்டிங் சூட்சுமங்களை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism