Published:Updated:

"எங்க ஊர்ல ஜாலி டே!”

வெளுத்துக் கட்டிய வேலூர் வாசகிகள்மு.வாசு, சு.ராஜா, படங்கள்: க.முரளி

"எங்க ஊர்ல ஜாலி டே!”

வெளுத்துக் கட்டிய வேலூர் வாசகிகள்மு.வாசு, சு.ராஜா, படங்கள்: க.முரளி

Published:Updated:

வள் விகடன் - 'சத்யா’ வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம் மற்றும் 'சூப்பர் வாஷிங் பவுடர்’ நிறுவனம் கைகோத்து, ஜனவரி 31-ம் தேதி அன்று வேலூரில் நடத்திய 'ஜாலி டே’ படு கலக்கல்!

தண்டபாணி முதலியார் மண்டபத்தில் ஆனந்த அலைகளுடன் நடந்த இந்தத் திருவிழாவின் துவக்கமாக சுவாதிஆர்த்தி இணைந்து பரதநாட்டியம் ஆட, லீலாவதி  கரகாட்டம் ஆட, கூட்டத்தின் வைப்ரேஷன் எடுத்ததுமே எகிறியது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சுபாஷினி மேடையைப் பொறுப்பேற்றுக்கொள்ள, அரங்கம் ஆர்வமானது!  

"எங்க ஊர்ல ஜாலி டே!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உல்டா புல்டா’ நடனப் போட்டியில், மாற்றி மாற்றி இணைக்கப்பட்டிருந்த எதிர் துருவப் பாடல்களுக்கு... கால் மாற்றி, கை மாற்றி, முகபாவம் மாற்றி என திறமையை வெளிப்படுத்தினார்கள் தோழிகள். குறிப்பாக, 60 வயது இளைஞி மகாலட்சுமி 'அட்ரா அட்ரா நாக்க முக்க’ பாட்டுக்கு குத்தாட்டம் போட, அரங்கமே குஷியாகி, கீழே 'தாண்டியா' ஆடினார்கள் வாசகிகள்!

வினாடிவினா, சிகை அலங்காரம், மெஹந்தி என ஜோடிப் போட்டிகளில் போட்டியாளர்கள் கலகலவெனக் கலக்கிக்கொண்டிருக்க, நடுவர்கள் மும்முரமாக மதிப்பெண்கள் அளித்துக் கொண்டிருந்தனர்.

மதிய உணவுக்குப் பின், கூடுதல் ஆர்ப்பாட்டத்துடன் இருந்தது அரங்கம். இறுதிப் போட்டிகள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில், போட்டியில் பங்கேற்ற தோழிகள் அனைவரும் பதற்றமும் பரவசமுமாக இருந்தனர்.

"எங்க ஊர்ல ஜாலி டே!”

இடைப்பட்ட நேரத்தில், 'ஜாலி டே’யை முன்னிட்டு, வேலூர் காந்திநகரில் உள்ள 'சத்யா’ ஷோரூமில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற வாசகிகளுக்கு மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன. 'சூப்பர் வாஷிங் பவுடர்’ சார்பில் நடத்தப்பட்ட, திருக்குறளில் ஒவ்வொரு வார்த்தைக் கும் இடையே, சூப்பர் என்ற வார்த்தையை சேர்த்துச் சொல்லும் போட்டிகான பரிசுகளும் வழங்கப் பட்டன!

நிறைவாக, 'ஜாலி டே’ போட்டிகளில் வென்றவர்களின் பட்டியலை நடுவர்கள் அளித்ததும்... கைதட் டல்கள் அதிர, கைநிறைய பரிசு பெற்றார்கள் வெற்றியாளர்கள். இறுதியாக, சத்யா வழங்கிய பம்பர் பரிசான ஃப்ரிட்ஜை பெறவிருக்கும் அதிர்ஷ்டசாலி வாசகி யார் என்று தெரிந்துகொள்ளும் நிகழ்ச்சியின் பரபர நிமிடங்கள்! சிறிது நேர சஸ்பென்ஸுக்குப் பின், வேலூரைச் சேர்ந்த வெங்கட்டாபாய் பெயர் அறிவிக்கப்பட... ஆச்சர்யமாகி, ஆனந்தமாகிப் பரிசை பெற்றுக்கொண்டார் வெங்கட்டாபாய்!

''15 வருஷத்துக்கு முன்ன இதே வேலூர்ல நடந்த 'ஜாலி டே’ நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அப்போ பரிசு எதுவும் கிடைக்கல. இப்போ பம்பர் பரிசே கிடைச்சிருக்கு. கடை வைக்கிற யோசனையில் இருந்த எங்களுக்கு, ஒரு ஃப்ரிட்ஜ் தேவைப்பட்டுச்சு. அதை இப்போ அவள் விகடனே பரிசா கொடுத்திருச்சு!'' என்றார் கண்களில் ஆனந்தத் துளிகளுடன்!

வெங்கட்டாபாய் ஹேப்பி அக்காச்சி!

நெகிழவைத்த ஆட்டோக்காரர்! 

"எங்க ஊர்ல ஜாலி டே!”

விழா நடந்து கொண்டிருந்தபோது, அனுமதி பெற்று மேடை ஏறிய ஆட்டோ ஓட்டுநர் முனிர், ''இந்த விழாவுக்கு என் ஆட்டோவில் வந்த ஒருத்தர், அவங்களோட பையைத் தவறவிட்டுட்டாங்க'' என்று சொல்லி, தொகுப்பாளினி சுபாஷினியிடம் ஒப்படைக்க, தங்கள் கரவொலியால் அவரின் நேர்மைக்கான பாராட்டைத் தெரிவித்தனர் தோழிகள். பைக்குச் சொந்தக்காரர், ராணிப்பேட்டை வாசகி ஸ்ரீவித்யா என்பதை உறுதிபடுத்திக்கொண்டு, அவரிடம் அது ஒப்படைக்கப்பட்டது!

'காயத்ரி’... 'வினோதினி’... கலக்கல் நிமிடங்கள்!

விழாவின் ஹைலைட்டாக, 'தெய்வ மகள்’ தொடரின் வில்லிகளான ரேகாகுமார் மற்றும் சுகாசினி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, 'ஜாலி டே’ மேடையை இன்னும் கலகலப்பாக்கினார்கள். 'வினோதினி’யான சுகாசினி மைக் பிடித்து புஃரொபஷனல் பாடகி போல பாட, கூட்டத்துக்கு இன்ப அதிர்ச்சி!

"எங்க ஊர்ல ஜாலி டே!”

அதை ரசித்த கையோடு, 'காயத்ரிம்மா என்ன பெர்ஃபார்ம் பண்ணப் போறாங்க..?!’ என்று ஆவலுடன் ரேகாவை நோக்க, 'எனக்கு ஆடவே தெரியாது!’ என்று சமாளிக்கப் பார்த்து, இறுதியாக ரேகா கலக்கலாக ஆடினார் அப்படி ஒரு ஆட்டம்! ''நிஜமாவே ஆடத் தெரியாது. என் பொண்ணுதான் எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தா!'' என்று ரேகா சொல்ல, கைதட்டல்கள் அரங்கத்தின் சுவர்களில் மோதித் தெறித்தன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism