ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200

'தள்ளி நறுக்கு!’

எங்கள் வீட்டுக்கு வாடிக்கையாக பூ கொண்டுவரும் பெண்மணியிடம், அவர் பூவை முழம் போடும்போது '’கொஞ்சம் தள்ளி (கூடுதலாக) நறுக்கும்மா...' என்பார் என் மாமியார். எங்கள் வீட்டு வாண்டு பாவனாவின் ஐந்தாவது பிறந்த நாளின்போது கேக் வெட்டி முடித்து, எல்லோருக்கும் கேக்கை துண்டுகளாக்கி, தட்டில் வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ’அம்மா! பாட்டிக்கு மட்டும் கேக்கை கொஞ்சம் தள்ளி நறுக்கித்தாம்மா...' என்று பாவனா குறும்பாக சொல்லவும்... வீடே சிரிப்பால் நிறைந்தது.

- விஜயலட்சுமி ரவீந்திரன், ஈரோடு

உப்பு நோய்!

”என் மாமனாருக்கு நீரிழிவு நோய் இருப்பதால், சர்க்கரை இல்லாத அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட உணவாகச் சமைக்க வேண்டியுள்ளது. மாமியாருக்கு ரத்தக் கொதிப்பு என்பதால், உப்பு குறைத்து செய்ய வேண்டியுள்ளது'' என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் குட்டி மகள் பாரதி, ’தாத்தாவுக்கு சர்க்கரை நோய்னுதானே சொன்னே?' எனக் கேட்டாள், ”நீரிழிவுக்கு இப்படியும் ஒரு பெயர்'' என்று பதில் சொன்னேன். ’அப்படினா, பாட்டிக்கு, உப்பு நோயா?' அடுத்த கேள்வி பிறந்தது சுட்டியிடமிருந்து! ’பி.பிக்கு ஒரு புதுப் பெயர் வெச்சுட்டா என் பேத்தி!' என்று சொல்லிச் சொல்லி சிரித்தார் என் மாமியார்!

- ஆர்.பத்மப்ரியா, சேலம்

தொலைத்ததை தேடுமிடம்... கூகுள்!

சமீபத்தில் எங்கள் அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அண்ணனின் பேத்தி அம்பிகா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவள், அப்போது கம்ப்யூட்டரில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தனது மூக்குக் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்ட அண்ணி, அதை தேடித்தருமாறு கேட்க, வீட்டில் இருந்தோர் தேடுவதைப் பார்த்து அம்பிகாவும் தன் பங்குக்கு சிறிது நேரம் தேடி, கண்ணாடி கிடைக்காமல் போக... மீண்டும் கம்ப்யூட்டரில் மூழ்கினாள். ”என்ன அம்பிகா... கண்ணாடியைத் தேடலையா?'' என எங்கள் அண்ணி வினவ... ”கூகுளில் தேட வேண்டியதுதான் பாட்டி!'' என அம்பிகா 'பட்’ என்று சொன்னதும்... சுற்றிலும் ஒரே சிரிப்புதான்!

- கே.எஸ்.பிரணதார்த்திஹரன், திருச்சி

ஓவியங்கள்: சேகர்