Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

Published:Updated:

இந்த முறை 'கேர்ள்ஸ் புரொஃபைலில்' கலக்க வர்றவங்க, ஈரோடு நவரசம் கல்லூரியின் நவரச நாயகிகள்!

''ஃபிஸிக்ஸோட எனக்கு நல்ல கெமிஸ்ட்ரி!''

கேர்ள்ஸ் புரொஃபைல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.எஸ்ஸி., இயற்பியல் இறுதியாண்டு மாணவி கீத்பிரியா, கல்லூரி அசோஸியேஷனில் பி.ஜி ரெப்.

''எங்க கல்லூரியின் எல்லா விழாக்களிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நான்தான். யு.ஜி படிக்கும்போது, இசை மற்றும் நடன மன்றத்தின் துணைச் செயலாளரா இருந்திருக்கேன். கோவை கொடிசியா ஹாலில் நடந்த இன்டர் காலேஜ் நடனப் போட்டியில் இரண்டாவது இடம், கோவை கே.ஜி கல்லூரியில் நடந்த மாநில அளவிலான இன்டர் காலேஜ் மீட்ல முதல் பரிசுனு, ஒரே கலக்கல்தான்! நான், வாலிபால் பிளேயரும்கூட! படிப்புலயும் டிஸ்டிங்ஷன். தமிழகத்தின் பல கல்லூரிகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிச்சிருக்கேன். ஃபிஸுக்ஸுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகும். இயற்பியல் துறையில டாக்டர் பட்டம் வாங்கணும்கிறதுதான் லட்சியம்!''

பெஸ்ட் ஆஃப் லக்!

தங்கமகள்!

இளங்கலை தமிழில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கோல்ட் மெடலிஸ்ட்... எம்.ஏ., தமிழ் இறுதியாண்டு படிக்கும் நித்யா.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''அதுக்குக் காரணம் என் தோழிகள்தான். 'எங்க நித்யாதான் ஃபர்ஸ்ட் மார்க் வருவா... என்ன பெட்?’னு அவங்க என் மேல அவ்வளவு நம்பிக்கை வைக்கும்போது, அதைக் காப்பாத்துறதுக்காகவே சின்சியரா படிச்சேன். இப்போ எங்க துறையோட பி.ஜி ரெப் நான். தமிழ் மன்றத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நான்தான் தொகுப்பாளர். விவேகானந்தா கல்லூரி மற்றும் பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பங்கேற்றது, நல்ல அனுபவம்!''

வணக்கம்!

படிக்கிறது இங்கிலீஷ்... பிடிக்கிறது தமிழ்!

பி.ஏ., ஆங்கிலம் இரண்டாமாண்டு படிக்கிறாங்க, வெண்ணிலா.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''பத்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே கவிதைகள் எழுதுவேன். எங்க கல்லூரியின் எல்லா துறை நிகழ்ச்சிகளிலும் ஒரு அங்கமா, என்னோட கவிதை வாசிப்பு இருக்கும். எங்க கல்லூரி கவிதைப் போட்டிகளில், வெண்ணிலாவோட பேர் நிச்சயம் வெற்றியாளர்கள் பட்டியலுக்குப் போயிடும். பாரதியார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில 'வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற என் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. வைரமுத்து, ரவீந்தர் சிங், சேட்டன் பகத்னு தேடி, விரும்பிப் படிப்பேன். ஆங்கிலத்துலயும் தமிழ்லயும் ஒரு நல்ல எழுத்தாளராகணும்!''

வா... வெண்ணிலா!

’கோ கோ' கேர்ள்!

'கேப்டன் கூல்’  இப்படித்தான் கூப்பிடுறாங்க, கல்லூரி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளரான மூன்றாமாண்டு பி.எஸ்ஸி., தகவல் தொழில்நுட்பம் படிக்கும் விமலாதேவியை. பொண்ணு விளையாட்டு வீராங்கனை.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''கல்லூரி ’கோ கோ'அணியின் கேப்டன் நான். ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே ’கோ கோ' போட்டிகளில் விளையாடிட்டு இருக்கேன். நாலு வருஷமா மாநில அளவிலான ’கோ கோ' போட்டியில், முதலிடம், இரண்டாமிடம்னு மாறி மாறி வாங்கிட்டு இருக்கேன். காலிகட் யுனிவர்சிட்டி மற்றும் மங்களூர் யுனிவர்சிட்டியில் தென் மாநில அளவிலான ’கோ கோ' போட்டிகளில் பரிசுகள் வாங்கியிருக்கோம். வருங்காலத்தில் சிறந்த ’கோ கோ' கோச் ஆகணும்னு ஆசை!''

விளையாட்டுப் பிள்ளை!

டான்ஸ் மச்சி டான்ஸ்!

கமலப்பிரியா, பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாங்க.

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''ஆரம்பத்துல கிளாசிக்கல் டான்ஸ் கத்துக் கிட்டேன். என்னோட குரு மாலினி ஜி, 'உனக்கு கிளாசிக்கலைவிட வெஸ்டர்ன் டான்ஸ் நல்லா வருது’னு மடை மாற்றிவிட்டாங்க. அதுக்கப்பறம் ராக், ஃபோல்க், ஹிப்ஹாப், சால்சா, பிரேக் டான்ஸ்னு எல்லாம் கத்துக்கிட்டேன். எல்லா இன்டர் காலேஜ் மீட்களிலும் நடனத்தில் பரிசை அள்ளிடுவோம். குறிப்பா, ஸ்ரீராம் கல்லூரியில சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி நான் ஆடின நடனத்துக்கு முதல் பரிசு கிடைச்சது, சூப்பர் அனுபவம். பட்டிமன்றப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா மேம் கையால வாங்கின பரிசு, மறக்க முடியாதது. எங்க கல்லூரியின் 'முத்தமிழுக்கு முடிசூட்டுவோம்’ நிகழ்ச்சியில நான் கண்ணை உருட்டி உருட்டி ஆடின மோகினி ஆட்டம், செம ஹிட்! பாண்டிச்சேரில பிறந்ததால, எனக்கு ஃப்ரெஞ்ச் தெரியும். யாரையாச்சும் கலாய்க்கணும்னா, ஃபிரெஞ்ச்ல பேசிடுவேன். போன்ஜூர்!''

க்யூட் மோகினி!

பா.குமரேசன், படங்கள்: அ.நவின்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism