Published:Updated:

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

Published:Updated:

ராமாயணத்தில் ராமபிரான் தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காக வனத் துக்குச் செல்லத் தயாராக இருக்கிறார். அருகில் மகாலக்ஷ்மியின் அவதாரமான சீதாபிராட்டியாரும் உடன் செல்லத் தயாராக இருக்கிறாள். அந்த நேரத்தில் இளையாழ்வான் லக்ஷ்மணன் அங்கே வருகிறான். எப்போதும் ராமனைப் பிரியாமல் அவனுடைய நிழலைப் போல் இருப்பவனாகிய லக்ஷ்மணன், வனத்துக்குச் செல்லும் ராமனுடன் தானும் சென்றுவிட விரும்புகிறான். ஆனாலும், ராமன் மறுத்துவிடுவாரோ என்று அவனுக்குள் ஒரு தயக்கம். என்ன செய்வது என்று யோசித்தவன், ராமர் தனியாக இருக்கும்போது சென்று தன்னுடைய விருப்பத்தைக் கூறுவதைவிடவும், சீதா பிராட்டியாருடன் அவர் சேர்ந்திருக்கும் நேரம் பார்த்துக் கூறுவதே சரியாக இருக்கும் என்று நினைத்தான். அதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். சீதாபிராட்டியாரின் அனுக்கிரஹத்தை முதலில் பெற்றுவிட்டால், ராமரின் அனுக்கிரஹம் சுலபமாகக் கிடைத்துவிடும் என்பதுதான் காரணம்.

ராமபிரானும் சீதாபிராட்டியாரும் வனத் துக்குச் செல்லத் தயாரான நிலையில், முதலில் ராமரைப் பார்க்காமல், சீதாபிராட்டியாரை பார்த்து நமஸ்காரம் செய்து அவளுடைய அனுக்கிரஹத்தை பெற்றுக்கொண்டான் லக்ஷ்மணன். அதன்பிறகே ராமரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தான்.

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீதாபிராட்டியாரின் அனுக்கிரஹத்தைப் பெற்றுவிட்ட லக்ஷ்மணனின் விருப்பத்தை ராமரால் மீறமுடியுமா என்ன? முதலில் சீதாபிராட்டியாரின் அனுக்கிரஹத்தைப் பெற்றதுமே அவனுக்கு ராமபிரானின் அனுக் கிரஹமும் கிடைத்துவிடுகிறதே!

பகவானுடைய அனுக்கிரஹம் நமக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவேதானே மகாலக்ஷ்மி பிராட்டி, பகவானின் திருமார்பினையே தன்னுடைய வசிப்பிடமாக வசப்படுத்திக்கொண்டாள்! மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் நமக்குக் கிடைத்து விட்டால், நாம் செய்யும் ஒரு சிறிய புண்ணியச் செயல்கூட ஒன்றுக்கு ஆயிரம் மடங்காக பகவானுக்குத் தெரியுமாம்! அவளுடைய கடாக்ஷம் நமக்குக் கிடைக்காத நிலையில் நாம் செய்யும் சிறு பாவமும்கூட பகவானுக்கு பிரமாண்டமாகத் தெரியுமாம்!

ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், ஆழ்வார்திருநகரி என்னும் திருத்தலத்தில் காரி  உடையநங்கை தம்பதிக்கு மகனாக அவதரித்தவர்.  உடையநங்கை, நாகர் கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் திருவண்

பரிசாரத்தில் (திருப்பதிசாரம் என்று தற்போது அழைக்கப்படுகிறது) பிறந்தவர். தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டி திருப்பதிசாரத்தில் அருள்புரியும் திருவாழ்மார்பன் என்ற திருநாமம் கொண்ட பெருமாளை வேண்டி பெற்ற பிள்ளைதான் நம்மாழ்வார். இவர், தம் தாயாரின் பிறந்த ஊரான திருப்பதிசாரத்தில் அருளும் பெருமாளை ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்து இருக்கிறார்.

வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்

திருவாழ்மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வது என்?

உருவார்சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு

ஒருபாடுழல்வான் ஓரடியானும் உளனென்றே

ஆனால், இந்த ஒரே பாடல் பெருமாளுக்கு ஆயிரமாகத் தோன்றுகிறதாம். காரணம், மகாலக்ஷ்மி தாயாரின் கடாக்ஷம் அவருக்குப் பரிபூரணமாகக் கிடைத்திருந்தது.

மகாலக்ஷ்மி பிராட்டி அவ்வப்போது பகவானை விட்டுப் பிரிவது உண்டு. அப்போதுதான் பகவானால் துஷ்டர்களை நிக்கிரஹம் செய்யமுடியும். கூடவே இருந்தால் பிராட்டியாரின் கடாக்ஷம் அவர்களைக் காப்பாற்றிவிடுமே! எனவே, ராமனை விட்டு சீதை ராவணனால் பிரித்து சிறை வைக்கப்பட்ட பிறகுதான், ராவண வதம் நிகழ்ந்தது.

தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னித்து அருள்புரியும் கருணைத் திறம் கொண்டவள் மகாலக்ஷ்மி பிராட்டியார். மகாலக்ஷ்மி சீதையாக அவதரித்தபோது, ராமனும் சீதையும் ஏகாந்தமாக இருந்தபோது, காகாசுரன் என்பவன் சீதையைத் துன்புறுத்த, அதனால் கோபம் கொண்ட ராமர்,  பிரம் மாஸ்திரத்தை ஏவுகிறார். அதற்கு பயந்து காகாசுரன் எங்கெங்கோ ஓடி ஒளியப் பார்க் கிறான். கடைசியில் ராமனிடமே வந்து தஞ்சம் அடைகின்றான். கருணையே வடிவானவளும், பகவானை எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டும்படியாகச் செய்பவளுமாகிய மகாலக்ஷ்மியின் அவதாரம் தான்  சீதாபிராட்டி. அவள்  அருகில் இருந்தபடியால் ராமபிரான் அவனை மன்னித்துவிடுகிறார். ஆனால், பிரம்மாஸ்திரம் தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டுமே! எனவே, அது காகா சுரனுடைய ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டது.

மகாலக்ஷ்மி பிராட்டியார் பெருமாளின் திருமார்பினை விட்டு அகன்ற நிலையில்தான் அவரால் நரஸிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை சம்ஹாரம் செய்ய முடிந்தது. அப்படி பகவானைப் பிரிந்த மகாலக்ஷ்மி பிராட்டி, திரும்பவும் அவருடைய திருமார்பில் சேர்வதற்காக தவம் புரிந்த தலம்தான் இந்த திருவண்பரிசாரம். மகாலக்ஷ்மி தேவியின் தவம் கண்டு மனம் குளிர்ந்த பகவான், பிராட்டியைத் தம் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். அதனால் இந்தக் கோயிலில் தாயாருக்கு தனிச் சந்நிதி இல்லை.

மகாலக்ஷ்மி தாயார் நம்மைப் போன்றவர்களை கடாக்ஷிக்கவேண்டும் என்பதற் காகவேதான் இப்படி பகவானின் திருமார்பை விட்டுப் பிரியாமலும் இருக்கிறாள்.

அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் போனால் நமக்கு பகவானின் அனுக்கிரஹம் கிடைக்காது. எனவே, மகாலக்ஷ்மி பிராட்டியாரின் கடாக்ஷம் நமக்கு எப்போதுமே அவசியமாகிறது.

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

அடுத்த இதழுடன் நிறைவடைகிறது

தொகுப்பு: க.புவனேஸ்வரி

வேளுக்குடி கிருஷ்ணன்  ஓவியம்: சங்கர்லீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism