Published:Updated:

நேற்று, 118 கிலோ எடை... இன்று, ‘மிஸஸ் கோவை’!

நேற்று, 118 கிலோ எடை... இன்று, ‘மிஸஸ் கோவை’!

நேற்று, 118 கிலோ எடை... இன்று, ‘மிஸஸ் கோவை’!

நேற்று, 118 கிலோ எடை... இன்று, ‘மிஸஸ் கோவை’!

Published:Updated:

- 'பாடி ஸ்கல்ப்டிங்’ ஜெயா

''உடலைக் குறைக்க பயிற்சிக்கு செல்பவர்களுக்கு, பெரும்பாலும் டயட் கட்டுப்பாடு இருக்கும். ஆனால், என் 'பாடி ஸ்கல்ப்டிங்’ பயிற்சியில், உணவுக் கட்டுப்பாட்டை வலியுறுத்துவதில்லை. இந்தப் பயிற்சி, உடலில் குறிப்பிட்ட தசைகளைக் குறைத்து 'இன்ச் லாஸ்’ ஏற்படுத்துவதால், அழகான தோற்றம் கிடைக்கப்பெறலாம்!'' என்று, நளினமாகப் பேசுகிறார் கோவையைச் சேர்ந்த ஜெயா மகேஷ். இவர், உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளச் செய்யும் 'பாடி ஸ்கல்ப்டிங்’ என்ற பயிற்சி வகுப்புகளை 20 வருடங்களாக எடுத்து வருபவர்!

நேற்று, 118 கிலோ எடை... இன்று, ‘மிஸஸ் கோவை’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கணவர், குழந்தைகள்னு எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்து கொடுத்தாலும், தங்களோட நல்லதுக்குனு  எதுவும் செய்துக்க மாட்டாங்க, பெண்கள். ஆனா, அவங்க ஆரோக்கியமா இருந்தாதான், மற்றவங்களைப் பார்த்துக்க முடியும். நான் நோய்வாய்ப்பட்டப்போ இந்த உண்மையை உணர்ந்தேன். உணவு, உடற்பயிற்சினு தேடித் தேடிக் கத்துக்கிட்டேன்.

அதாவது, எனக்குக் குழந்தை பிறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமா, பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டிய சூழ்நிலை. அப்போ வைரஸ் பாதிப்பால கண்பார்வையும் குறைஞ்சிடுச்சு. வீட்டிலேயே முடங்கிட்டேன். பெற்றோரும், கணவரும் தந்த ஊக்கத்தால அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் எடுத்தேன். 118 கிலோ இருந்த நான், உடல் எடையைக் குறைக்க பல பயிற்சிகளை எடுத்தேன். என்னோட பிரச்னைகளில் இருந்து படிப்படியா மீண்டதோட, தொடர் உடற்பயிற்சி செய்ததன் பலனா, 36 வயதில் 'மிஸஸ் கோயம்புத்தூர்’ ஆக தேர்வானேன். 'மிஸஸ் இந்தியா’வா ஷார்ட் லிஸ்ட் ஆனேன்!'' என்று வியக்க வைத்த ஜெயா, 'பாடி ஸ்கல்ப்டிங்’ பற்றி பேச்சைத் திருப்பினார்.

நேற்று, 118 கிலோ எடை... இன்று, ‘மிஸஸ் கோவை’!

''வெளிநாட்டில் வசிக்கும் என் அக்கா வீட்டுக்குப் போனப்போ, 'ஃபேஷியல் ஸ்கல்ப்டிங்’ பயிற்சி பற்றி தெரிய வந்தது. பொதுவா பெண்கள் உடல் எடையைக் குறைப்பதிலேயேதான் கவனம் கொடுப்பாங்க. முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. இதனால, உடல் கட்டுக்கோப்பா இருந்தாலும் முகத்தில் விழும் சுருக்கங்கள் முதிர்ச்சியான தோற்றத்தை உருவாக்கும். அதைத் தவிர்க்க, முகத்துக்குப் பிரத்யேகப் பயிற்சி கொடுக்கும் வகுப்பு இது.

இந்த பயிற்சிகளை தேடித் தேடிக் கத்துக்கிட்டு, என்னை நானே சோதிச்சுப் பார்ப்பேன். இந்த ஸ்டெப் செய்தா எங்கே வலிக்கும், எங்க வலியிருந்தா எப்படி ஸ்ட்ரெட்ச் கொடுக்கணும்னு, இந்தப் பகுதியில் இருக்கும் சதையைக் குறைக்க எந்த மாதிரியான ஸ்ட்ரெட்ச் தேவைனு ஒவ்வொண்ணா செய்து பார்த்து, கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ஸ்ட்ரெச்சஸ் உருவாக்குனேன். அதுதான் நான் கண்டுபிடிச்ச 'பாடி ஸ்கல்ப்டிங்’. இந்தப் பயிற்சிகள் மூலமா தசைநார்கள், எலும்பு வலுப்பெறும். யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிதான் இதுவும். இதுல இசை இருக்காது. ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம்னு, 15 நாட்கள் பயிற்சி இருக்கும். அப்புறம் வீட்டில் அவங்களாவே தொடர்ந்து செய்யலாம்'' என்ற ஜெயா, தொடர்ந்தார்.

''இங்கு சொல்லித்தரப்படும் வொர்க் அவுட்ஸ் எல்லாம் இஞ்சுரி ஃப்ரீ. அதாவது சுளுக்கு, தசைப் பிறழ்வு, காயம்னு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத எளிமையான பயிற்சிகள். எல்லா தினங்களும் பயிற்சி ஒரே மாதிரி இருக்காது. அப்படி செஞ்சா, உடல் அதுக்குப் பழகிடும். அதனால தினமும் வொர்க் அவுட்ஸை மாத்திட்டே இருப்பேன். உடல் டோனிங் மற்றும் டைட்டனிங் இந்தப் பயிற்சியோட சிறப்பம்சம்.

நேற்று, 118 கிலோ எடை... இன்று, ‘மிஸஸ் கோவை’!

தீராத நோய் காரணமா பல வருடங்களா சிகிச்சை எடுத்தும், அறுவை சிகிச்சைதான் தீர்வுனு சொல்லி அனுப்பிய நிலையில், பல பெண்கள் என்கிட்ட வந்திருக்காங்க. அவங்களைக்கூட பயிற்சி மூலம் குணமாக்கியிருக்கேன்'' என்று ஜெயா சொல்ல, பயிற்சிக்கு வந்திருந்த பெண்களிடம் பேசினோம்.

புவனேஸ்வரி, ''மெனோபாஸ் பிரச்னையில் ஆரம்பிச்சு கால்வலி, மூட்டுவலினு வரிசையா அவஸ்தைகள். கீழே உட்கார்ந்து எழ முடியாத நிலையில் வந்த எனக்கு, இங்கே முதலில் கொடுத்தது 'என்னால் முடியும்’ என்ற பாஸிட்டிவ் திங்க்கிங். ரெண்டாவது நாளே நான் தரையில் அமர்ந்து எழுந்தது, எனக்கே ஆச்சர்யம்!'' என்றார் உற்சாகமாக.

''உடல் எடையைக் குறைக்கத்தான் இங்க வந்தேன். ஜிம், வாக்கிங், எக்ஸர்சைஸ்னு இதுவரை நான் செய்த எந்த முயற்சியும் கொடுக்காத பலனா, இப்போ அஞ்சு கிலோ வரை குறைஞ்சிருக்கேன்!'' என்றார் அஞ்சனா,  துள்ளல் சந்தோஷத்துடன்.

ந.ஆஷிகா  படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism