Published:Updated:

என் டைரி - 350

என் டைரி - 350

என் டைரி - 350

என் டைரி - 350

Published:Updated:

இனிமை தருமா இரண்டாவது திருமணம்?

ல்லூரிக் காலத்தில் உடன் படித்த ஒருவரைக் காதலித்தேன். எவ்வளவோ போராடியும், ஜாதியைக் காரணம் காட்டி இருவீட்டிலும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் இருவரும் பிரிவது என்று பேசி முடிவு செய்தோம். "இங்கே இருந்தால் உன் நினைவுகள் என்னைத் துரத்தும். அதனால், வெளிநாடு செல்கிறேன்’' என்று சென்றுவிட்டார் அவர். எங்கள் வீட்டினர் என்னை வற்புறுத்தி, தாங்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு மணம் முடித்தனர்.

என் டைரி - 350

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய காதலின் எச்சங்களை மனதில் வைத்து, கணவராக வந்தவரின் வாழ்வையும் கெடுத்துவிடக் கூடாது என்று, அவரை மனதார ஏற்றேன்;அழகாக குடும்பம் நடத்தினோம். இந்நிலையில், முன்னாள் காதலர் பற்றி யாரோ என் கணவரிடம் சொல்லிவிட்டார்கள். அதிலிருந்து என் நாட்கள் நரகமாயின. 'யாரு அவன்?’, 'இன்னும் பேசிட்டுதான் இருக்கியா?’, 'எங்க சந்திச்சுப்பீங்க?’ என்று, தினம் தினம் என்னைத் துன்புறுத்த ஆரம்பித்தார். எங்களுக்குள் எழுந்த இந்தப் பிரச்னையாலேயே கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதற்கிடையில் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க, 'இது எனக்குப் பிறந்த குழந்தை இல்ல’ என்று அதை ஒருமுறைகூட வந்து பார்க்கவில்லை. பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு வந்தவள், அங்கேயே தங்கும்படியானது. துயரங்களில் எல்லாம் பெருந்துயரமாக, குழந்தைக்கு ஒரு வயதானபோது, குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்தில் உயிரை இழந்தார் கணவர்.

மாமியார் வீட்டில், 'உன்னாலதான் என் புள்ளை வாழ்க்கையே போச்சு’ என்று கூறி... என்னையும், என் பிள்ளையையும் தள்ளி வைத்தனர். பெற்றோர் அரவணைப்பில், தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்துக் கொண்டே இரண்டு வயதாகும் என் குழந்தையை வளர்த்து வருகிறேன். அஞ்சல் வழியில் மேற்கல்வி படிப்பதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறேன். இந்நிலையில், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் 'விசிட்டிங்’ என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்களில், என் முன்னாள் காதலரும் ஒருவராக இருந்தது, அதிர்ச்சி தந்தது. அவருக்கும் அதே அதிர்ச்சி.

தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி, என் வாழ்க்கை எப்படிப் போகிறது எனக் கேட்டார். நான் அனைத்தையும் சொன்னதும், "வா... நாம கல்யாணம் பண்ணிக்கலாம். புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.  ஊருக்கும் உறவுக்கும் பயந்து இரண்டாவது தடவையும் வாழ்க்கையில நாம தோற்க வேண்டாம்!'' என்றார் அவர்.

'இனி  துணையே வேண்டாம் என்று குழந்தையுடனேயே இருப்பதா? பழைய காதலரை ஏற்றுக்கொள்வதா? பின்னாளில் அவரும், 'என்னை விட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டுப் போனவதானே நீ?’ என்று குத்திக்காட்டிப் பேசினால் என்ன செய்வது?' என்று குழப்பத்தில் தவிக்கிறேன்.

கேள்விகள் துரத்துகின்றன... பதில் தந்து உதவுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 349-ன் சுருக்கம்

என் டைரி - 350

'அக்கா, உங்களுக்குக் கிடைச்ச மாதிரியே எங்களுக்கும் கணவர் கிடைக்கணும்!' என்று என் உறவுப் பெண்கள் கூறும் அளவுக்கு, அன்புக் கணவர் என்னவர்! என்னையும், பிள்ளைகளையும் நிறைவுடன் பார்த்துக் கொள்கிறார். தாம்பத்யத்திலும் எந்தக் குறையும் இல்லை. மகிழ்ச்சிகரமான என் வாழ்க்கை, இன்று சந்தேகச் சுழலில் சிக்கியுள்ளது. ஆம்... சமீபநாட்களாக அவர் யாருடனோ மணிக்கணக்கில் பேசுகிறார், சாட்டிங் செய்கிறார். கேட்டால் 'ஃப்ரெண்ட்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பதில் வருகிறது. அதற்குமேல் கேட்கலாம் என்றால், 'அவர் தவறு செய்யாத பட்சத்தில், நான் மீண்டும் மீண்டும் கேட்டு எங்கள் வாழ்வில் விரிசல் வந்துவிடுமோ?’ என்ற தயக்கம் தடுக்கிறது. 'கேட்காமல் விட்டால்... அவர் என்னிடமிருந்து விலகி, வேறு பெண்ணுடன் நெருக்கமானால்...’ என்ற அச்சம் ஆட்டிப்படைக்கிறது. பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்கள்... என் கணவரை ஒரு பெண்ணுடன் பார்த்ததாகச் சொல்லவே, இதை முளையிலேயே கிள்ளி எறியச் சொல்கிறது மனம். 'டிடெக்டிவ் ஏஜன்ஸியிடம் செல்லலாமா?’ எனும் யோசனைகூட வருகிறது. என்ன செய்வது தோழிகளே?!''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  '100

லாகவம் தேவை!

ரு நல்ல புத்திசாலி மனைவியால், தன் கணவனிடம் ஏற்படும் மாற்றங்களை, தவறுகளை சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். முள்ளின் மீது விழுந்த துணியை எடுக்கும் லாகவத்துடன் பிரச்னையைக் கையாண்டால், சுமுக தீர்வு கிடைக்கும். டிடெக்டிவ் ஏஜென்ஸி போன்ற மூன்றாம் நபர் தலையீடு இன்றி, நீங்களே உங்கள் கணவருடன் பேசி அவர் மனதில் உள்ளதை0........... வெளிக் கொண்டு வாருங்கள். அவர்மீது தவறு இருப்பின், பொறுமையுடன் பேசி,  தவறை உணர வையுங்கள். அவர் பக்கம் தவறில்லை, நீங்கள்தான் சந்தேகப்படுகிறீர்கள் என்றால், கொஞ்சமும் தாமதிக்காமல், மன்னிப்பு கேளுங்கள். பிரச்னையை முற்றவிடாமல், மனம் விட்டுப் பேசி, மறப்போம் மன்னிப்போம் என்று விட்டுக் கொடுப்பதன் மூலம் சந்தோஷத்தை தழைக்கச் செய்யுங்கள்!

- இந்துமதி தியாகராஜன், கோவை

அப்படியே விட்டால் பெரிதாகும்!

'சந்தர்ப்பம் கிடைக்காதவனே ராமனாக வாழ்கிறான்’ என்பது ஆண்களுக்கான ஒரு பழமொழி. ஆகவே தோழியே... ராமனாக இருந்த உங்கள் கணவருக்கும் இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கலாம். அவரிடம் நீ காணும் மாற்றம் பற்றி அவரிடமே விடை காணலாம். தவறிருப்பின் நியாயமாக பேசித் திருத்தலாம். நிலைமை சரியாகும். புண்ணை அப்படியே விட்டால் பெரிதாகிவிடும். ஊசியால் குத்தி ஜலம் நீக்கினால் விரைவில் குணம் காணலாம்.

- யோ.ஜெனட், கோவை

அன்பால் வெல்லலாம்!

ன் மனதில் சந்தேகம் என்னும் கொடிய நோய் ஆட்டிப்படைக்கிறது. 'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என்கிற பழமொழி உனக்குத் தெரியாதது அல்ல. போனில் நண்பரிடம் பிசினஸ் விஷயமாகக்கூட பேசலாம். அதை தவறாக நினைப்பது தவறு. மாறாக, கணவரிடம் முன்பைவிட அதிகமாக அன்பு, பாசம் காட்ட ஆரம்பித்தால், உன் சந்தேகம் விலகுமளவு அவர் தன்னை மாற்றிக்கொள்வார்.

- ச.லட்சுமி, கரூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism