Published:Updated:

‘‘இது, ஆடம்பரம் இல்ல... அத்தியாவசியம்!’’

‘‘இது, ஆடம்பரம் இல்ல... அத்தியாவசியம்!’’

‘‘இது, ஆடம்பரம் இல்ல... அத்தியாவசியம்!’’

‘‘இது, ஆடம்பரம் இல்ல... அத்தியாவசியம்!’’

Published:Updated:

- ஃபேஷன் டிசைன் மாணவிகள் கலகல

''பி.இ படிக்கிறவங்க எல்லாம் படிப்பை முடிச்சுட்டு வேலைக்குப் போவாங்க. ஆனா, நாங்க 'அதுக்கும் மேல’. படிக்கும்போதே எங்க கிரியேட்டிவிட்டியால போர்ட்ஃபோலியா முதல் பொட்டீக் ஆரம்பிப்பது வரை அசத்துவோம்!'' என்று 'சியர் அப்’ பேசினார்கள், கோவை, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜி மாணவிகள்.

''இது மட்டுமா... இன்னும் கேளுங்க..!'' என்று கேர்ள்ஸ் அள்ளிவிட்ட கெத்து மேட்டர்கள்... ப்ப்ப்பா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மத்த படிப்புகளுக்கும் எங்களுக்கும் ஒரு மெல்லிசான கோடுதான் வித்தியாசம். கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிறவங்க சர்க்யூட், தியரி, மெஷின் அப்படினு மக்கப் பண்ணி மண்டையை உடைச்சுக்கும்போது, நாங்க கலர்ஃபுல்லா, காக்டெய்லா, கிரியேட்டிவ்வா படிக்கிறோம்!'' என செம பன்ச்சோடு தொடங்கி வைத்தார் ஷர்மிளா பானு.

‘‘இது, ஆடம்பரம் இல்ல... அத்தியாவசியம்!’’

''நாங்க ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறோம்னு சொன்னா, இந்த ஆன்ட்டீஸ் எல்லாம், 'அப்படினா எனக்கொரு பிளவுஸ் தைத்து கொடு!’னு சொல்றாங்க. ஆனா, எங்க படிப்புக்கு நாசாவில் இருந்து தீயணைப்புப் படை வரைக்கும் வேலை இருக்கு. இந்த இடத்தில் நீங்க 'எப்படி?’னு கேட்கணும்...'' என்று தனிஷா சொல்லி நிறுத்த,

''அப்படியா?! எப்படி..?!'' என்று நாமும் அவர் எதிர்பார்த்தபடியே ஆச்சர்யமானோம்.

''விண்வெளி வீரர்களுக்கு அவங்க விண்வெளியில் நடமாடும்போது, அந்த தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடை வடிவமைக்கணும். அதைவிட கஷ்டம், தீயணைப்புப் படையினருக்கு உடை வடிவமைக்கிறது. காற்று உள்ளே போகாதபடி, வெப்பம் தாக்காதபடி வடிவமைக்கணும். அது மட்டுமா? புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்ற பல பாதுகாப்பு உடைகளும் எங்க கை பட்டுதான் தயாராகணும்!'' என்று பேசிக்கொண்டே சென்ற தனிஷா, ''அதாவது, எங்க கோர்ஸ் ஆடம்பரத்துக்கு மட்டுமானதல்ல... அத்தியாவசியத்துக்கும்தான்!'' என்கிறார்.

பேப்பரில் ஆடைகளை வடிவமைப்பதில் கில்லிகள் நீரஜாவும், தீப்தியும். ''நாங்க வடிவமைச்சதில் பிடிச்ச ஆடைகளைப் பொம்மைக்கு போட்டு கூடநின்னு போட்டோவுக்கு போஸ் கொடுப்போம்!'' என்ற கண்டிஷனோடு வந்தவர்கள், ''முன்பு போல, ஃபேஷன் டிசைனிங் மாணவிகள் வடிவமைச்ச ஆடைகளை, அவங்களே போட்டுட்டு வரணும்னு கட்டாயம் இப்போ இல்ல. அதை டம்மிக்கு டிரேப் (Drape) செய்யலாம். அப்படி இதுவரை நாங்க உருவாக்கி டிரேப் செய்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதால, சீக்கிரமே பொட்டீக் ஆரம்பிக்கும் ஐடியாவுல இருக்கோம்!'' என்கிறார்கள், பேப்பரையே வண்ண ஆடைகளாக்கி பொம்மையைக்கூட அழகுபடுத்துபவர்கள்.

''அடுத்துப் பேசப் போறது, ஸ்கெட்சிங் செய்வதில் கில்லி, கிளாஸ் டாப்பர். 'மகளிர் சக்தி’ என்ற பெயர்ல கோவை ரெசிடென்சி ஹோட்டல்ல இவ நடத்தின ஓவியக் கண்காட்சி, நாளிதழ் செய்தி ஆனது...'' என்றெல்லாம் கேர்ள்ஸ் முன்னுரை கொடுத்து முடிக்க, 'அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என்பது போல அமைதியாக, அடக்கமாகப் பேசினார் மெலிண்டா.

''எனக்கு சின்ன வயசுல இருந்தே ஸ்கெட்சிங்கில் பெரிய ஆர்வம். அதனால ரொம்ப ஆசையோட இந்தக் கோர்ஸ் எடுத்தேன். உலகத்துல இருக்கிற மிகப்பெரிய பிராண்டுகள் எல்லாம் ஒரு டிசைனராலதான் உருவாக்கப்பட்டது. அதுபோல, தமிழ்நாட்டோட அடையாளமா ஒரு பிராண்டை உருவாக்கணும்; அதுதான் என் கனவு. டீசல், லெவீஸ் போன்ற பிராண்டட் ஆடைகள் திருப்பூரில்தான் தயாராகுது. ஆனா, இங்க ஒரு சரியான பிராண்டை நிறுவ முடியாததால இன்னும் ஏற்றுமதி மட்டுமே செய்துட்டு இருக்கோம். ஒரு டிசைனரா, நான் அதை மாற்றணும்!'' என்று மெலிண்டா சொல்ல,

''தலைவிக்கு ஒரு சோடா சொல்லுங்கப்பா!'' என்று தோழிகள் கலாய்க்க... பை பை!

- மு.பாரதிமனோன்மணி, படங்கள்: மு.குகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism