Published:Updated:

`என் காளான்!’

`என் காளான்!’

`என் காளான்!’

`என் காளான்!’

Published:Updated:

கல்லூரிப் பெண்களின் கலக்கல் பிசினஸ்!

''சென்னை, எத்திராஜ் கல்லூரியின் 'எனாக்டஸ் எத்திராஜ்’ என்னும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் உறுப்பினர்கள் நாங்க. பொருளாதார விளிம்பில் இருக்கும் மக்களின் முன்னேற்றத்துக்காக சர்வதேச அளவில் இயங்கும் 'எனாக்டஸ் இன்டர்நேஷனல்’ என்ற தொழில்முனைவோர் அமைப்பின் அங்கம்தான் 'எனாக்டஸ் எத்திராஜ்’. இதுல வருஷத்துக்கு ஒரு புராஜெக்ட் செய்யணும். குறிப்பிட்ட ஒரு கம்யூனிட்டிக்கு வருமானம் வர்ற மாதிரி வேலை கொடுக்கிறதோட, அவங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் அளவுக்கு அந்தத் தொழில்ல பயிற்சியும் கொடுக்கணும். எங்க காலேஜுக்குப் பக்கத்திலேயே கிரீம்ஸ் ரோட்டில் இருக்கிற குடிசைப் பகுதி பெண்கள்தான் நாங்க தொழில்பயிற்சி கொடுக்கிற கம்யூனிட்டி. இதுக்காக நாங்க தேர்ந்தெடுத்த தொழில், சிப்பிக் காளான் வளர்த்தல்!''

பெரிய முன்னுரை தந்துவிட்டுத்தான் நிறுத்தினார், முதலாமாண்டு பி.எஸ்ஸி படிக்கும் ஸ்ரீநிதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாம் ஆண்டு பி.காம் படிக்கும் பேஜ்னா, தங்கள் புராஜெக்ட்டை செயல்படுத்தும் முறையை விளக்கினார்.

`என் காளான்!’

''காளான் வளர்ப்புல எக்ஸ்பர்ட் ஆன ரகுபதி சார்தான் எங்களுக்கு ஏ டு இஸட் சொல்லிக் கொடுத்து, காளான் விதைகளையும் விநியோகிச்சார். தொழிலை ஆரம்பிக்க, கல்லூரியிலிருந்து முதல்ல 2 லட்ச ரூபாய் நிதி கொடுத்தாங்க. எங்க சேர்மன் முரளிதரன் சார், பிரின்ஸிபால் நிர்மலா மேம், புராஜெக்ட் கோஆர்டினேட்டர் சுமதி மேம் வழிகாட்டலோட, ஜனவரி மாசம்தான் ஆரம்பிச்சோம். ரெண்டே மாசத்தில் எங்க முன்னேற்றத்தை நீங்களே வந்து பாருங்க!'' என்று படபடவென பேசியபடியே நம்மை அழைத்துச் சென்றார்.

''ப்ளீஸ், செருப்பைக் கழட்டிட்டு, இந்த டெட்டால் தண்ணியில் கால், கைகளைக் கழுவி சுத்தம் பண்ணிட்டு வாங்க!'' என்று நம்மிடம் அறிவுறுத்திய யூத் பட்டாளம், தாங்களும் அவ்வண்ணமே உள்ளே நுழைய, ''கிருமித் தொற்றைத் தடுக்கவும், காளான்களை நிறம் மங்காம சுகாதாரமான நிலையில அறுவடை செய்யவும்தான் இந்த 'சானிட்டேஷன்’!'' என்று விளக்கம் தந்தார் முதலாண்டு பி.காம் படிக்கும் பத்மஸ்ரீ கல்லூரி வளாகத்திலேயே 600 சதுர அடியில் கூரை வேயப்பட்ட குடிசை அது. அதன் ஒரு பகுதி காளான் வளர்ப்புக்கு; இன்னொரு பகுதியில் அறுவடை செய்த காளான்கள் நறுக்கி, பேக் செய்யப்படுகிறது. குடிசையில் கீழே மண்தரை, சுற்றிலும் வேயப்பட்டிருக்கும் கீற்றுகளில் கட்டியிருக்கும் கோணிச்சாக்கு திரை... எல்லாவற்றிலும் தண்ணீர் ஸ்பிரே செய்யப்பட்டு, 'ஜில்’லென்ற சூழ்நிலை. உள்ளே வரிசை வரிசையாக, திண்டுகள் போல பிளாஸ்டிக் பைகள் தொங்கின. ஒரு பையைக் காண்பித்தார் இறுதியாண்டு பி.காம் படிக்கும் காஞ்சி.

`என் காளான்!’

''இது உள்ளே ஈரப்பதத்தோட இருக்கிற வைக்கோல் படுக்கையை ஒரு லேயர் போட்டு, அது மேல காளான் விதைகள் (spawns) தூவி விட்டுருவோம். அதுக்கு மேல வைக்கோல், அப்புறம் விதைகள், திரும்பவும் வைக்கோல், விதைகள்னு அடுக்கடுக்கா வைக்கோல் படுக்கைக்கு நடுவில் சாண்ட்விச் பண்ணி, இறுக்கமா கட்டித் தொங்கவிடணும். இருட்டும், ஈரப்பதமான ஜில் சூழ்நிலையும்தான் காளான் வளர்றதுக்கு தேவை. குடிசைப் பகுதிப் பெண்கள் எட்டு பேரைத் தேர்ந்தெடுத்து அடிப்படை பயிற்சி கொடுத்திருக்கோம். இப்போ அவங்களே எல்லா வேலைகளையும் செய்றாங்க'' என்று காஞ்சி சொல்லிக் கொண்டிருந்தபோதே, எப்படி அறுவடை செய்வது என்று 'டெமோ’ காண்பித்தார் காலிஸ்மேரி என்ற பணியாளர். இவர், குடிசைப் பகுதியில் வாழும் பெண்மணி.

''வழக்கமா கடைகள்ல கிடைக்கிற பட்டன் காளானைவிட சிப்பிக் காளான், விலை கொஞ்சம் அதிகம். இதில் இருக்கிற ஊட்டச்சத்துக்களும் அதிகம். 200 கிராம் பாக்கெட்டின் விலை 45 ரூபாய். முதலில் எங்க காலேஜ் கேன்டீனுக்கும் காலேஜுக்குள்ளேயும் மட்டுமே விற்பனை பண்ணினோம். இப்போ நிறையவே கிடைக்கிறதால, சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். வர்ற லாபத்துல, இந்தப் பெண்களுக்கான சம்பளம் போக மீதியை முதலீடா பயன்படுத்துறோம்!'' என்றார் இறுதியாண்டு பி.காம் படிக்கும் சஞ்சனா, படபடவென!

''எங்களுக்கு இதனால மாசாமாசம் வருமானம் வருது. அதோட நம்மளாலயும் ஒரு தொழில் செஞ்சு பொழச்சுக்க முடியும்னு தன்னம்பிக்கையும் தைரியமும் வந்திருக்கு. எல்லாத்துக்கும் இந்தப் புள்ளைங்கதான் காரணம்!'' என்று அங்கு வேலையில் இருந்த பெண்கள், நெகிழ்ச்சியுடன் சொல்ல,

''எங்க தயாரிப்புக்கு நாங்க வெச்சுருக்குற பெயர் 'என் காளான்’... எப்படி எங்களுக்கு 'குட்’ சொல்லலாம்தானே?!'' என்று யூத் பெண்கள் கோரஸாகக் கேட்க, ''சூப்பர்!'' என்றோம் கைகுலுக்கி!

மித்ரா, படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism