Published:Updated:

வீட்டிலேயே தயாரிக்கலாம்... மின்சாரம், எரிவாயு!

வீட்டிலேயே தயாரிக்கலாம்... மின்சாரம், எரிவாயு!

வீட்டிலேயே தயாரிக்கலாம்... மின்சாரம், எரிவாயு!

வீட்டிலேயே தயாரிக்கலாம்... மின்சாரம், எரிவாயு!

Published:Updated:

சுமை விகடன், அவள் விகடன் மற்றும் 'அக்கறை’ அறக்கட்டளை இணைந்து திருவண்ணாமலையில் பிப்ரவரி 28-ம் தேதி ஏற்பாடு செய்திருந்த 'வீட்டிலேயே செய்யலாம் விவசாயம்’ என்ற ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்... மின்சாரம், எரிவாயு!

வீட்டுத்தோட்டத் தொழில்நுட்பங்கள் பற்றி தன் அனுபவத்திலிருந்து பேசிய அனிதா கிறிஸ்டினா, ''நம் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் குளியலறை தண்ணீர், பாத்திரம் கழுவும் தண்ணீர் என கழிவுநீரையே சுத்தப்படுத்தி, செடிகளுக்குப் பயன்படுத்தலாம். கழிவுநீரை சுத்தம் செய்யும் ஆற்றல் கல்வாழை, சேப்பங்கிழங்கு, வாழைக்கு உள்ளது. என் வீட்டில் உயிரி எரிவாயு அமைப்பு ஒன்றை சிறிய அளவில் அமைத்துள்ளேன். இதன் மூலம் சமையலறை கழிவுகள் மற்றும் கழிப்பறை கழிவுகளில் இருந்து வெளிவரும் வாயுவையும் பயன்படுத்தி, வீட்டுச் சமையலுக்கு தேவையான எரிவாயு எடுத்துக்கொள்கிறேன். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்றாலும் முடிந்தவர்கள் முயற்சி செய்தால், வீட்டுக்குத் தேவையான எரிவாயு மற்றும் மின்சாரம் கிடைத்துவிடும். மனது வைத்தால் மொட்டை மாடியில் பப்பாளி மரங்களை வளர்க்கலாம், வீட்டுக்கழிவில் இருந்து கேஸ் தயாரிக்கலாம், மின்சாரம் தயாரிக்கலாம்!' என்றார் அழுத்தமாக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பணம் கொட்டும் பால்காளான் வளர்ப்பு!’ என்ற தலைப்பில் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட முன்னோடி காளான் பண்ணையாளர் சேகரன், 'காளானில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பால்காளான் தனிமதிப்பு கொண்டது. பிளாஸ்டிக் கவர்களில் பயிரிட முடியும் என்பதால், காளானை வீடுகளில் வளர்ப்பது மிக எளிது' என்றபடி செயல்முறை விளக்கமும் தந்தார்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்... மின்சாரம், எரிவாயு!

மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருள் தயாரிப்பு பற்றி 'ஹோம் எக்ஸ்னோரா’ அமைப்பின் தலைவர் இந்திரகுமாரும், 'அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் சதீஷும் தங்களுடைய அனுபவங்கள் மூலமாக தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். நெட்டஃபிம் இரிகேஷன் நிறுவனம், நிகழ்ச்சிக்கான உணவு உபசரிப்பை பொறுப்பேற்றுக்கொண்டது.

கருத்தரங்கில் கலந்துகொண்ட திருவண்ணாமலை, ஐங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி, 'நாங்க குழுவா இணைந்து இயற்கை விவசாயம் செய்றோம். இன்னிக்கு எங்களுக்கு வழிகாட்டும்விதமா பல விஷயங்களை இங்கே கத்துக்கிட்டோம்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறியது, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நமக்கு மேலும் உத்வேகம் கொடுப்பதாக இருந்தது!

காசி.வேம்பையன், ரா.கீர்த்திகா, படங்கள்: கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism