Published:Updated:

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

Published:Updated:

ஒரு டெக் சாட்

கோவை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுடன் சோஷியல் மீடியா பற்றி ஒரு டெக் சாட். அதாவது, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், டிவிட்டர், டெலிக்ராம்... இதுல எது பெஸ்ட்னு கேர்ள்ஸ் கலந்துரையாடின கலகல டிஸ்கஷன்!

ஐ ஹேட் ஃபேஸ்புக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உசுரக் கொடுத்து செமையா ஒரு ஸ்டேட்டஸ் போட்டாலும், ஷேர் பண்ணினாலும் ஒருத்தர்கூட லைக் பண்ண மாட்டேங்கிறாங்க. மேற்கொண்டு, கலாய் கமென்ட் போட்டு மானத்தை வாங்குறாங்க. அதுவும் இந்த போட்டோ கமென்ட் வந்த பிறகு, வாங்குற பல்புல வீட்டுல ஒரு பல்பு கடை... இல்ல, குடோனே வெச்சிடலாம் போல! இதுல 'டிஸ்லைக்’ ஆப்ஷன் வேற வரப்போகுதாம். இப்போவே கண்ணக் கட்டுதே!''னு ஷோபனா அலறல் போட்டாங்க.

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

லைக் வேணுமா... லைக்!

''நாங்களும் கொஞ்சம் கருத்து சொல்லிக்குறோம் யுவர் ஆனர்!''னு என்ட்ரி ஆனார் ஸ்ருதி. ''எஃப்.பில லைக்ஸ் வாங்க, சில தந்திரங்கள் எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கணும். உதாரணமா, எல்லாத்துக்கும் ஒரு பிரைவேட் மெசேஜ் அனுப்பியாச்சும், லைக்ஸ் பிச்சை எடுக்கணும். அதேபோல, இருக்கவே இருக்கு டேக் ஆப்ஷன். ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற எல்லாருக்கும் நம்ம ’போஸ்ட்'டை டேக் பண்ணினா, தேவையான லைக்ஸ் கிடைச்சிரும்!''னு ஸ்ருதி சொல்ல, ''இதெல்லாம் ஒரு பொழப்பு..?!''னு அவங்களை அடிச்சு மொத்தினாங்க தோழிகள்.

டிவிட் அண்ட் டிஸ்கஸ்!

டிவிட்டர் பற்றி பேச வந்த மோனிகா, '' டிவிட்டர் எல்லாம் செலிப்ரிட்டிகளுக்கான மேட்டருங்க. ஆனாலும், அதுல நாம என்ஜாய் பண்றதுக்கான ஸ்பேஸும் இருக்கும். பில்கேட்ஸோட அடுத்த மூவ் என்னனு, அவரோட ட்வீட் வெச்சேகூட சொல்ல முடியும். அப்படி சில படா பார்ட்டிகளோட டிவீட்களைப் பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட அதைப் பத்தி டீப் டிஸ்கஷன் பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும்''னு அடுக்கினவங்க...

''என்னதான் ஃபேஸ்புக், டிவிட்டர் பத்தி எல்லாம் சொன்னாலும், இதெல்லாம் இப்போ

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

வாட்ஸ்ஆப்'க்கு அப்புறம்தான்ங்கிறதை எல்லாரும் ஒப்புக்குவாங்கனு நினைக்கிறேன். இருந்தாலும், எங்க தலைவிகிட்ட கேட்டுக்குவோம்!''னு அஸ்வினியைக் கை காட்டினாங்க மோனிகா.

எங்கள் வோட்டு, ’வாட்ஸ்ஆப்'புக்கே!

''இப்போ உலகத்துலயே அதிகமான பேர் பயன்படுத்துறது,

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

வாட்ஸ்ஆப்'தான். இதுல போன்லயே இமேஜ், வீடியோனு ஒருத்தருக்கு ஒருத்தர் பெர்சனலாவும் அனுப்பிக்க முடியும், குரூப்லயும் ஷேர் பண்ணிக்க முடியும். வாட்ஸ்ஆப்ல குரூப்புக்கு 100 பேர் வரைக்கும் சேத்துக்க முடியும். காலேஜ் கிளாஸ்மேட்ஸ் எல்லோரும் ஒரு குரூப், ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் ஒரு குரூப், சொந்தக்காரங்க எல்லோரும் ஒரு குரூப், கலாய்க்க ஒரு குரூப்னு இதுல பல குரூப்களில் சேர்ந்துட்டா, ஒரே ஜாலிதான்ஜி!

சோஷியல் மீடியாவில் ’முதல்வன்’ யாரு?

வாட்ஸ்ஆப்'பை அடிச்சுக்க முடியாது!''னு அடிச்சு சொன்னாங்க அஸ்வினி.

காந்திஜி... மோடிஜி... ஹைக்ஜி!''ஹைக், அதைவிட பெஸ்ட் மா!''னு குரல் கொடுத்த கீர்த்தனா, ''ஹைக், இந்தியன் மேடு. காந்திஜில இருந்து மோடிஜி வரைக்கும் ’இந்தியன் மேடு' தான் பயன்படுத்தச் சொல்றாங்க. லோக்கல் லாங்குவேஜ் ஸ்டிக்கர்ஸ், இதோட ஹைலைட். அதை அப்டேட் பண்ணிட்டே இருக்காங்க. 'ஐ’ பட 'மெர்சலாயிட்டேன்’ பாட்டு ஸ்டிக்கர், இப்போ அதிரிபுதிரி ஹிட்! டைப் பண்ணாம ஸ்டிக்கர்ஸ வெச்சே ஜமாய்ச்சுடலாம். நீங்க டேட்டாவை ஆன் பண்ணினவொடன வர்ற முதல் மெஸேஜ், ஹைக்ல இருந்து வர்றதா தான் இருக்கும். நிறைய ஸ்டிக்கர்ஸ் அனுப்பினா, ஃப்ரீ எஸ்.எம்.எஸ் ஆட் ஆகும். இதுக்கு மேல என்னங்க வேணும்?!''  கண் சிமிட்டி கேட்டாங்க.

சீக்ரெட் சாட்!

''டெலிக்ராம் பத்தி பேச யாருமே இல்லைனு நினைச்சீங்களா... நான் இருக்கேண்டா!''னு பன்ச் டயலாக் பேசிக்கிட்டே வந்தார் ஷாலினி. ''இதுல சீக்ரெட் சாட்னு ஒரு செமையான மேட்டர் இருக்கு. நாம அனுப்புற மெசேஜ் எல்லாம் ரெண்டு பக்கமும் கொஞ்ச நேரத்துல காணாமப் போயிடும். என்னையும் மோனிகாவையும் மாதிரி இருக்கிற பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸுக்கு, இது ரொம்பப் பிடிச்ச விஷயம். செக்யூரிட்டி எல்லாம் குட். ஆனா,  இண்டியன் ஆப்னு சொல்லி அதை புரமோட் பண்ணினது பிடிக்கல. நெற்றிக்கண் திறப்பினும்!''னு கண்களை உருட்டினாங்க ஷாலினி.

''இதனால இந்த 18 பட்டிக்கும் சொல்ற வர்ற தீர்ப்பு என்னன்னா, இப்போ இருக்கிற சோஷியல் மீடியாவுல, ’வாட்ஸ்ஆப்'தான் பெஸ்ட்!''னு கடைசியா கேர்ள்ஸ் எல்லோரும் சேர்ந்து ஓட்டுப் போட, முடிந்தது டெக் சாட்!

பா.குமரேசன்   படம்: அ.நவின்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism