Published:Updated:

கேமரா கேர்ள்ஸ்!

கேமரா கேர்ள்ஸ்!

கேமரா கேர்ள்ஸ்!

கேமரா கேர்ள்ஸ்!

Published:Updated:

சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவிகளிடம், ''நீங்க எடுத்த 'த பெஸ்ட்’ போட்டோ கலெக்‌ஷனைப்  பார்க்கலாமா?!'' என்றோம். ''ஷ்யூர்!'' என்றவர்கள், கவர்ந்திழுக்கும் புகைப்படங்களைக் கண்கொள்ளாமல் தர... பல பல மனிதர்கள், முகங்கள், சிரிப்புகள், சந்தோஷங்கள், ஏக்கங்கள், கலைகள் என... உயிரோட்டமாகவும், உணர்வுபூர்வமாகவும் பேசின அந்தப் படங்கள்.

''தமிழ், மலையாளம், கன்னடம்னு நிறைய சினிமாப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, போட்டோகிராஃபிதான் என் பேஷன். அது சார்ந்த கதைகளில் நடிக்கத்தான் ஆசை. அதனால ஒதுங்கியிருக்கேன். எனக்கு நிறைய பாராட்டுகள் வாங்கிக் கொடுத்த புகைப்படங்கள், நான் நேப்பாள் போயிருந்தப்போ ஷூட் பண்ணினதுதான்!'' என்கிறார் விஸ்காம் மாணவி ஷ்ரவந்தி. இவர், 'லைஃப் ஆஃப் பை’ என்ற ஆங்கிலப் படத்தில் தமிழ்ப்பெண்ணாக நடித்தவர்.

கேமரா கேர்ள்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எனக்கு ஆர்ட், வைல்டு லைப் போட்டோகிராஃபிதான் ரொம்ப பிடிக்கும். ஜெய்ப்பூர், துபாய்னு போய் நான் எடுத்த போட்டோஸ் எல்லாம் நீங்க பார்த்தீங்கதானே? எனக்கு ஒளிப்பதிவில் நல்ல எதிர்காலம் இருக்குனு உங்க உள்மனசு சொல்லுமே? அதுக்காகத்தான், போட்டோகிராஃபியை இன்னும் ஆழமா கத்துக்க மாஸ்டர் டிகிரி படிக்கப் போறேன்!'' அதிக ஆர்வத்துடன் சொல்கிறார் விஜயதா.

''கோயம்புத்தூர் பொண்ணு நான். படிப்புக்காக சென்னை வந்தேன். போட்டோகிராஃபிக்காக நிறைய டிராவல் பண்ணியிருக்கேன். எல்லாம் புதுமையான அனுபவங்கள். கோர்ஸை முடிச்சுட்டு விளம்பரத் துறையில் இறங்கப் போறேன்!'' என்று இலக்கு சொல்கிறார் யாழினி.

''எங்க கல்லூரியைப் பொறுத்தவரை, ஜஸ்ட் ஒரு மார்க் ஸ்டேட்மென்ட் கோர்ஸா இல்லாம, நிறைய களம் அமைத்துத் தர்றாங்க; ஊக்கப்படுத்துறாங்க. இங்க நீங்க பார்க்கிற புகைப்படங்கள் எல்லாம், எங்க துறை சார்பா நடத்தின புகைப்படக் கண்காட்சிக்குத் தேர்வான எங்களோட கிளாஸிக் படங்கள்!'' என்று கல்லூரிக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் அனுஷா.

''எல்லாரும் வெளி மாநிலம், வெளிநாடுனு போய் போட்டோஸ் எடுக்க, நான் மட்டும் மதுரை, சிறுமலைனு உள்ளூர்ல கேமராவைத் தூக்கிட்டுப் போனேன். அதுக்குக் கிடைச்ச பாராட்டு, என்னோட ரசனை சரினு உறுதிப்படுத்துச்சு. சினிமாதான் என் ஃப்யூச்சர்!'' என்று நிவேதா சொல்ல, ''நான் பரதநாட்டியக் கலைஞர். வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதெல்லாம் என் கேமராவையும் எடுத்துட்டுப் போயிடுவேன். எனக்குள்ள இருக்கும் போட்டோகிராஃபருக்கு, இப்படி எப்பயுமே தீனி போட்டுட்டே இருப்பேன்!'' என்று அபிநயத்துச் சொல்கிறார் காவ்யா.

ச்சீ...ஸ்!

கு.முத்துராஜா, படங்கள்: பா.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism