Published:Updated:

இந்தி பேசணுமா... ரொம்ப ஈஸி!

இந்தி பேசணுமா... ரொம்ப ஈஸி!

இந்தி பேசணுமா... ரொம்ப ஈஸி!

இந்தி பேசணுமா... ரொம்ப ஈஸி!

Published:Updated:

''எழுத்துக்கள் கத்துக்கத் தேவையில்லை என்ற சலுகையோட, ஸ்போக்கன் இந்தி வகுப்புகள் எடுக்கிறேன். 40 மணி நேரம் வகுப்புகள். முடிச்சா, நீங்க நல்லா இந்தி பேசிடுவீங்க!''

சுவாரஸ்யமாக தமிழில் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த விமலா ராதாகிருஷ்ணன்.

இந்தி பேசணுமா... ரொம்ப ஈஸி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஒன்பது வருடங்களாக இந்தி வகுப்புகள் எடுத்து வருபவர், அதை ஆரம்பித்த புள்ளியிலிருந்து பேசினார்.

''22 வயசுல கல்யாணமாகி கணவர்கூட பஞ்சாப் போனப்போ, மொழிப் பிரச்னையால சிரமப்பட்டேன். எல்லா வெளி வேலைகளுக்கும் தனியாதான் அனுப்புவார் கணவர். யார்கிட்டயும் சொல்லிப் புலம்பக்கூட முடியாது. அதுக்கும் இந்தி தெரிஞ்சிருக்கணுமே! ஆனா, ரெண்டு வருஷம் முடிஞ்சப்போ, இந்தியில் சரளமா பேச ஆரம்பிச்சுட்டேன்.

டிரான்ஸ்ஃபர் காரணமா சென்னை வந்தப்போ, அக்கம்பக்கத்தில் இருந்தவங்க, 'ஏதோ தாய்மொழி மாதிரி இந்தி பேசுறீங்க. இந்தி கிளாஸ் எடுக்கிறீங்களா?’னு தங்களோட குழந்தைகளுக்காகக் கேட்டாங்க. பாடச் சுமையில, மேலதிக பாரமா இந்தியை எழுத்துக்கள், இலக்கணம்னு சொல்லிக் கொடுக்காம, நேரடியா ஸ்போக்கன் இந்தியை தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களின் மூலமே உச்சரிப்பு, அர்த்தம்னு கற்றுத்தர முடிவு பண்ணினேன். இப்ப நிறுவனங்கள், கல்விப் பயிற்சி மையங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள்னு பல தரப்பினருக்கும் வகுப்புகள் எடுக்கிறேன்.

நீங்களும் சம்ஸ்கிருதம், ஸ்லோகங்கள், ஆங்கிலம், தமிழ், பக்திப் பாடல்கள், ஆர்ட் வகுப்புகள்னு உங்களுக்கு என்ன தெரியுமோ கொஞ்சம் மெருகேற்றலோட தாராளமா பயிற்சி வகுப்புகளா எடுக்கலாம். மற்ற வகுப்புகளில் இருந்து வித்தியாசப்படுத்த, ஒரு புது ஐடியா பிடிங்க. நாளைக்கே உங்க வீடும் ஒரு டியூஷன் சென்டர்தான்!'' எனும் விமலா, இன்னும் பல அனுபவ டிப்ஸ்களை, 'வழிகாட்டும் ஒலி’யில் வழங்குகிறார்.

மார்ச் 10 முதல் 16 வரை 044 - 66802912* இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்

கே.அபிநயா, படம்:  தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism