Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

மீபத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நான் கண்ட காட்சி ஆச்சர்யத்தின் உச்சம். அங்கிருந்த விளையாட்டு தளத்தில் பட்டாம்பூச்சிகளாய் பல வண்ணங்களில் விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணிக்கும், ஒரு குழந்தைக்கும் நடந்த அழகான அந்த உரையாடல்தான் நான் சொல்ல வரும் ஆச்சர்ய சங்கதி!

நமக்குள்ளே...

பெரியதாக இருந்த வாத்து பொம்மை ஒன்றின் மீது உட்கார்ந்து ஆடியபடி, 'சாய்ந்தாடம்மா... சாய்ந்தாடு... சாயக்கிளியே சாய்ந்தாடு... குத்துவிளக்கே சாய்ந்தாடு’ என்று பாடிக்கொண்டிருந்தது குழந்தை. அந்த பெண்மணிக்கோ குழந்தையின் தமிழ் உச்சரிப்பைக் கண்டு ஆச்சர்யம். ’வாவ்... சூப்பர்! எனக்காக நெக்ஸ்ட் ஒரு சாங் பாடு பாப்போம்’ என்று அவர் சொல்ல,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

’எனக்காக இன்னொரு பாட்டு பாடுனுதான் சொல்லணும். ஆங்கிலம் பாதி தமிழ் பாதினு கலந்து பேசக் கூடாது’ என்று அந்தக் குழந்தை கண்டிப்புக் குரலில் சொன்னதும், வியப்பு கொள்ளவில்லை இவருக்கு.

’அப்ப உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என இவர் கேட்க, ’தமிழ், தெலுங்கு, ஃபிரெஞ்சு, ஆங்கிலம்னு 4 மொழிகள் தெரியுமே...’ என்று வியப்பு கூட்டினாள் மழலை. ’நீ எங்கே படிக்கிறாய்?’ என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் இவர் கேட்க, ’செட்டிநாடு வித்யாஸ்ரம்ல படிக்கிறேன்’ என்று அப்போதும் அசத்தலாக பதில் சொன்னது தமிழிலேயே!

’இப்படி அழகான, சுத்த தமிழில் பேசச் சொல்லி உனக்கு யார் சொல்லித் தந்தது?’

’அதுதானே தாய்மொழி...’ என்று குழந்தை சொன்னதும், அப்படியே வாரி எடுத்து முத்தம் கொடுத்துவிட்டு வந்தேன்.

இன்று குழந்தைகள் பலருக்கும் பிரிஞ்ஜால் என்றால் என்னவென்று தெரியும். ஆனால், கத்திரிக்காயை தெரியாது. காரணம்... ஆங்கிலம் ஒன்றே உயர்ந்த மொழி என்றபடி ஆங்கிலத் திணிப்பில் ஈடுபடும் நம்முடைய மனோபாவம்தான்.

குழந்தைக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என ஆசைப்படுவதில் தவறே இல்லை. சொல்லப்போனால், குழந்தைப் பருவத்தில்தான் ஐந்தாறு மொழிகளைக்கூட அசாத்தியமாக கற்றுக்கொள்ள முடியும்... விருப்பத்தின் பேரில். திணிப்பதால் அல்ல! ஆகவே, இந்தக் குழந்தையின் பெற்றோர் போல, அழகிய தாய்மொழியையும் சேர்த்தே கற்றுக் கொடுக்கலாம்தானே தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism