Published:Updated:

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

Published:Updated:

புதுச்சேரியில் ஜாலி டே!

அவள் விகடன், சத்யா வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம் மற்றும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இணைந்து, மார்ச் 1-ம் தேதி புதுச்சேரியில் நடத்திய 'ஜாலி டே’ திருவிழா, டாக் ஆஃப் த டவுன்!

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிப்ரவரி 28 அன்று மெஹந்தி, ரங்கோலி, ஹேர் ஸ்டைலிங், பாட்டுக்குப் பாட்டு, உல்டாபுல்டா டான்ஸ், வினாடி வினா என பல போட்டிகளுக்கும் முன்தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் 1 அன்று புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள சுபலட்சுமி திருமண மண்டபத்தில் ஜாலி டே!  

வரவேற்பு நிகழ்ச்சிகளாக பாக்கியா குழுவினரின் பரதமும், விஜயஸ்ரீயின் அறுமுகண கச்சேரியும் அம்சமாக முடிந்து, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுபாஷினி மேடை ஏறியதும் அரங்கமே உற்சாகமானது. 'ஆன் த ஸ்பாட்’ கேள்விகளுக்குப் பதில் சொல்ல 'நான் நீ’ என்று 'மைக் போட்டி’ நடந்தது. தொடர்ந்து வினாடி வினா, பாட்டுக்குப் பாட்டு என பரபரப்பு கூடிக் கொண்டே போனது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 'உல்டாபுல்டா’ நடனப் போட்டி அறிவிக்கப்பட்டபோது, 'ஹெவி லஞ்ச்சுக்குப் பிறகு எப்படி ஆடுவார்கள்?’ என்று பார்த்தால், 'நீங்க எந்தப் பாட்டை எப்படிப் போட்டாலும் கலக்குவோம்ல!’ என்று சவால் விட்டு அசத்த, 'நாங்களும் ஆடுவோம்ல!’ என்று மொத்த அரங்கமும் துள்ளலாட்டம் போட்டது.

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

இடைப்பட்ட நேரத்தில், ஜாலி டேயை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள சத்யா ஷோ ரூமில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற வாசகிகளுக்கும், ஜிஆர்டி ஜுவல்லரி நடத்திய வளையல் போட்டியில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட... களிப்பில் திளைத்தனர் தோழிகள்.

விழா நடந்து கொண்டிருக்கும்போது திடீர் என்று பெண்களின் ஆரவாரம் அதிகரித்தது. காரணம், ரேகா குமார் மற்றும் பிரகாஷ்ராஜனின் என்ட்ரி! 'தெய்வமகள்’ தொடரில் ஜோடி போட்டு கலக்கி வரும் இவர்களிருவரும் சிறப்பு விருந்தினர்களாக மேடையேறி, ஒரு குட்டி நாடகம் நடித்து அரங்கத்தை வசப்படுத்தினார்கள். 'இதயத்தில் ஏதோ ஒன்று’ என்ற மெலடிக்கு ரேகா ஆட, 'என்னப்பா? குத்துப் பாட்டு இல்லாம ஒரு டான்ஸா?' என்று பிரகாஷ்ராஜன் கேட்க, 'டங்காமாரி’ பாடல் ஸ்பீக்கரில் அதிர்ந்தது; ரேகா குமாரோடு சேர்ந்து வாசகிகளும் ஆட, விழாவின் உற்சாகம் உச்சம்.

தொகுப்பாளர் சுபாஷினி, ''என்ன பிரகாஷ், அவங்கள மட்டும் ஆடச் சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆகலாம்னு பாக்கறீங்களா? போடுங்க ஒரு டான்ஸை!'' என்று கேட்க, 'டங்காமாரி’க்கு இருவரும் டூயட் குத்தாட்டம் போட்டதும், அப்ளாஸ் அள்ளியது!

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

விழா நிறைவாக வெற்றியாளர்கள் பட்டியலை நடுவர்கள் அறிவிக்க, கை கொள்ளாமல் பரிசுகளைப் பெற்றுச் சென்றனர் தோழிகள். இறுதியாக, சத்யா வழங்கிய பம்பர் பரிசான ஃப்ரிட்ஜை பெறவிருக்கும் அதிர்ஷ்டசாலி வாசகி யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அனைவரும் காத்திருந்தனர். சிறிது சஸ்பென்ஸுக்குப் பின், புதுச்சேரியைச் சேர்ந்த பாத்திமா என்ற பெயர் அறிவிக்கப்பட்டது. இரண்டு நிமிடங்களுக்கு ஆயிரம் கண்களைத் தன்னை தேடவிட்டுவிட்டு, பின்னர் அவசரமாக ஓடி வந்த பாத்திமா, ''நிஜமாவே எனக்குதான் பம்பர் பரிசு கிடைச்சிருக்குனு நம்ப முடியல; ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்று மகிழ்ச்சியின் எல்லையில் துள்ளினார்.  

தோழிகள் அனைவரும் மன நிறைவுடன் விடைபெற... ''எங்களுக்கே எங்களுக்குனு இந்த ஒரு நாளைக் கொடுக்க, பல நாட்கள் வேலை பார்த்த அவள் விகடனுக்கு நன்றி!'' என்று பூரித்த கண்களுடன் சொல்லிப் போனார் ஒரு இளம் வாசகி!

அறுமுகணத்தில் அசத்திய விஜயஸ்ரீ!

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

ஆறு முகங்களைக் கொண்ட அழகிய தோல் கருவியின் பெயரே அறுமுகணம். இந்த இசைக்கருவியை விடாமல் வாசித்து மொத்த அரங்கத்தையும் தன் வசப்படுத்தினார் விஜய. மருத்துவக் கல்லூரி மாணவியான இவர் வாசித்ததைப் பார்த்து அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் தலையாட்டி தொடையை தட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தனர். வெவ்வேறுவிதமான தாளத்தை ஒரே நேரத்தில் இவர் மாற்றி மாற்றி வாசிக்க, கச்சேரி முழுக்க களைகட்டியது.

'நண்பேண்டா!'

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

முன்பு புதுவையில் நடந்த ஜாலி டே நிகழ்ச்சியில் அறிமுகமாகிக் கொண்ட ஹேமா மற்றும் பிரியா, இன்று நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். இந்த ஜாலி டே மேடை ஏறிய தோழிகள், '2011 ஜாலிடேவில்தான் அறிமுகமானோம். தொடர்ந்து பேசிப் பேசி, இப்போ ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இதுக்கு காரணமான அவள் விகடனுக்கு நன்றி'' என்று வார்த்தைக்கு வார்த்தை நெகிழ்ந்தார்கள்.

நெகிழ்ச்சியான தருணம்!

உற்சாகம்... உல்லாசம்... நெகிழ்ச்சி!

நிகழ்ச்சியின் மற்றொரு நெகிழ்ச்சித் தருணமாக, கணவனை இழந்த, இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட, நம் இளம் வாசகி வசுமதி, வீட்டு வேலை செய்யும் தன் அம்மாவுடன் மேடையேறி பாட்டுப் பாடினர். முதலில் சோக பாடல் ஒன்றை அவர் பாட, அரங்கமே அமைதி ஆனது. சிறப்பு விருந்தினர்கள் ரேகா குமார்   பிரகாஷ்ராஜன் இருவரும் தன்னம்பிக்கையோடு இருக்கச் சொன்னதோடு, ஜாலியான பாடல் ஒன்றை பாடச் சொல்ல, கவலைகளை மறந்த அந்தப் பெண், குத்துப்பாட்டு பாட, அரங்கமே அதிர்ந்தது.

பொன்.விமலா, சு.கற்பகம், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism