Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

Published:Updated:

இது பெண்களுக்கான தளம்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

அமெரிக்காவில், வேலைக்குச் செல்லும் பெண்களுக் கென தனி இணையதளம் செயல்பட்டு வருகிறது ( (http://www.inhersight.com). புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் பெண், அந்த நிறுவனம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த இணைய தளத்திலிருந்து அள்ளிக் கொள்ளலாம். ஊதியம், பெண்களுக்கான பாதுகாப்பு, வசதிகள், ஆண்  பெண் சமத்துவம், விடுமுறை என அந்நிறுவனங்களின் அனைத்து அம்சங்களும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் பணியாளர்களிடம் இருந்து திரட்டப்பட்டு இதில் வழங்கப்பட்டுள்ளன. ஒருவேளை குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னை எனில், இந்தத் தளத்தின் வாயிலாகவே அவர் ரகசியக் கடிதம்கூட எழுதிவிடலாம். சம்பந்தப்பட்ட நிறுவனம் இதற்கு பதிலும் சொல்லித்தான் ஆகவேண்டும். இதை நடத்துபவர், ஊர்சுலா என்ற பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைவி... உலகம் முழுக்க கிளை கொண்டுவாருங்கள்!

தலிபான்களை எதிர்க்கும் பெண்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் பெண்களுக்கு விதித்திருக்கும் தடைகள், பிரச்னைகள் எல்லாம் உலகறிந்ததே. இந்தக் கொடுஞ்சூழலிலும், சாராபாய் என்ற 38 வயது பெண், கடந்த 10 வருடங்களாக வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார். இதற்காக இவர் மீது பல முறை தலிபான்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆனால், இதைக் கண்டெல்லாம் அஞ்சாத சாராபாய், 'என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் சம்பாதித்துதான் ஆக வேண்டும். டிரைவர் பணி மூலமாக தினமும் எனக்கு 1,200 ரூபாய் கிடைக்கிறது’' என்று துணிச்சலாகச் சொல்கிறார். தலிபான்களிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியும் வைத்திருக்கிறார்.

சல்யூட் பெண்ணே!

பள்ளிகளில் கேமராக்கள்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க தினமும் பல நடவடிக்கைகள் முடுக்கப்படுவது நன்முயற்சி. இதன் அடுத்தகட்டமாக, பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால், அங்கு மாணவிகளுக்கு நேரும் பாலியல் தொல்லைகளைத் தடுக்கலாம் என்று கே.கே.ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில், வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

வரவேற்கிறோம்!

டிரெண்டான 'குட்டித்தல’!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

அஜித்  ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது, அவருடைய ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ். 2008ல் இத்தம்பதிக்கு ஸ்வீட்டியாக பெண் குழந்தை (அனௌஷ்கா) பிறந்தாள். இப்போது இரண்டாவது குழந்தை. இதை, அஜித்தின் ரசிகர்கள் ஒரு நாள் முழுவதும் #KuttyThala என டிரெண்டை உருவாக்கிக் கொண்டாடினர். தனுஷ், ஜெயம் ரவி, அருண் விஜய், சிவகார்த்திகேயன், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் 'குட்டித்தல’யின் அப்பா  அம்மாவுக்கு வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

இதற்கடுத்த நாளில், இயக்குநர் சுசீந்திரனுக்கும் ஆண் குழந்தை பிறந்திருப்பது, அடுத்த ஸ்வீட் நியூஸ்!

வெல்கம் குட்டீஸ்!

சிலைக்கே சிலை!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்...

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஷாருக்கான், ஹ்ருத்திக் ரோஷன், சல்மான் கான் ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ள லண்டனில் உள்ள மடாமி துஷாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு நியூ என்ட்ரி ஆகிறார், பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப். அவருக்கான மெழுகுச் சிலையை நிறுவுவதற்காக சமீபத்தில் காத்ரீனாவின் அளவு எடுக்கப்பட்டிருந்தது. காத்ரீனா நடனமாடுவது போல மெழுகில் சிலை உருவாகப் போவதாக மடாமி துஷாட்ஸ் தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

சிலைக்கே சிலை!

ஷாலினி நியூட்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism