Published:Updated:

அம்மா... மனைவி... மகள்..!

அம்மா... மனைவி... மகள்..!

அம்மா... மனைவி... மகள்..!

அம்மா... மனைவி... மகள்..!

Published:Updated:

அம்மா

அம்மா... மனைவி... மகள்..!

முந்தானை தூளியில் மூன்று குழந்தைகளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூங்கவைத்து

வெற்றிலை வாயால் தாலாட்டுப்பாடி

அப்பாவின் சாராய நெடியில் மூச்சுத் திணறி

விறகு அடுப்பில் கண்கள் புகைய இட்லி விற்று

வறுமையிலும் வாடகை கட்டி

பட்டினியைப் பங்கிட்டு பிள்ளைகளுக்கு ஊட்டி

அக்காவின் கல்யாணத்துக்கு தன் தாலியை விற்று

மாதம் ஒருமுறை மயிலம் முருகன் கோயிலுக்கு சென்று வந்து

சித்தாளு வேலையில் சிமென்ட்டு பாலில் குளித்து

மதிய உணவுக்காகவே

மாநகர் பள்ளிக்கு எங்களை அனுப்பி வைத்து

கிழிந்த புடவையில் கிழியாத மனசு கொண்டு

எறும்பைப்போல் சேமித்து

சீட்டு கட்டி வாடகை வீட்டையே தவணை முறையில் வாங்கி

கால் வயிறு கஞ்சி ஊற்றி என்னை

கல்லூரி வரை படிக்க வைத்த

புருவங்களே மீசையாய்க்கொண்ட ஆண்தாயே

இன்று லட்சங்கள் சம்பாதித்தும்

வாழத் தெரியவில்லையே எனக்கு.

உன்னை எரித்த நெருப்பின் வெளிச்சமாய்

உன் மூக்குத்தி மட்டும் மின்னிக்கொண்டிருக்கிறது

என் அலமாரியில்.

அம்மா... மனைவி... மகள்..!

மனைவி

இருபத்து மூன்று வயசு

கால் நூற்றாண்டு முடிவதற்குள்

கல்யாணம் முடிந்தது எனக்கு

எங்களை அடைப்புக்குறிக்குள் அடைகாக்க

வியப்புக்குறியாய் செயல்பட்டனர் நண்பர்கள்

மனைவியின் உறவும் என் உறவும் புறந்தள்ள

முந்நூறு ரூபாய் வாடகையில் முதல் குடித்தனம்

சுதந்திரமாய் திரிந்த வாழ்க்கை சேமிப்பு இல்லாத

சுருக்குப்பையாய் மாறியது

பண்டிகை தினத்திலும் பழைய சோறே உணவு

குறைந்த கூலியில் நிரந்தரமில்லா வேலை

என் சைக்கிளின் இருசக்கரங்களுக்குத் தெரியும்

நான் சுற்றித் திரிந்த உலகம்

ஒரு கௌரவ பிச்சைக்காரனாய் வாழும் அவலம்

காதலில் இருந்த மகிழ்வு

கல்யாணத்தில் தொலைந்தது

தேநீர் குடிக்கும்போதும்

மனைவியின் பசி நினைவுக்கு வரும்

முதல்தேதி சம்பளம் மறுநாளே வற்றிவிடும்

பனித்துளிமேல் பனிக்கட்டி விழுந்தாலும்

நசுங்கவில்லை நம்பிக்கை

கரையைக் கடக்க கடலையே குடித்திருக்கிறேன்

தாய் தந்தையை மறந்து என்

வறுமைக்கூட்டுக்குள் வாழ்ந்த

மனைவியை இன்னும் காதலியாகவே பார்க்கிறேன்

பதிவுத் திருமணம் முடிந்து பலநாள் கழித்து

சில வள்ளல்களின் உதவியால்

வரவேற்பு விழா நடத்தினேன்

அதன் அழைப்பிதழில் இவ்வாறு அச்சிட்டேன்

இது

இருவீட்டார் அழைப்பல்ல

இருவர் அழைப்பு.

மகள்

மகள் பிறப்பதற்கு முன்பே

தூரிகை என்று பெயரிட்டேன்

அழகான குழந்தை என் வாழ்க்கையை

அழகாக்கியது

எழுத்துப் பிழையோடு பேசும் அவள் தமிழில்

எதுகை மோனையைக் கண்டேன்

அவள் பாடிய அம்மா இங்கே வா வா பாடலில்

என் அம்மாவைக் கண்டேன்

அவள் பிறந்த பிறகுதான்

எனக்குப் பேர் பிறந்தது

என் கனவில் அவள் பேசும்போது

இரவு இன்னும் நீளாதா என நினைப்பேன்

பாவாடை சட்டையில்

பட்டாம்பூச்சியைப் பார்த்தேன்

கொலுசு ஓசையில் குயிலோசையைக் கேட்டேன்

என் ஐபேடை பார்க்கும்போது

அவளுக்கு வாங்கித்தந்த சிலேட்டு ஞாபகம் வரும்

அவள் விரல் பிடித்து நடக்கும்போது

என் பத்து விரலும் மோதிர விரலாகிவிடும்

பாடல் எழுதும்போது பல்லவி சரணத்தை

முதலில் உச்சரிப்பது அவள் முணுமுணுப்புதான்

வகுப்பறையிலும் என் வாழ்க்கை அறையிலும்

வளர்ந்து கொண்டிருக்கிறது ஒரு சீருடைச்செடி

இன்னும் நினைவிருக்கிறது

அவள் ஐந்து வயதில் சொன்ன ஹைகூ

'பெட்டு மேல

குட்டி பெட்டு

தலக்காணி!’

கபிலன், ஓவியம்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism