Published:Updated:

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

Published:Updated:

புதுவையில் ’செல்நெட் - 2015!’

ருபத்தியோராம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் பாய்ச்சலில், செல்போன் மற்றும் இன்டர்நெட்டின் பயன்பாடு அளவிட முடியாதது. இந்த டெக் உலகத்தில் இளம் வயதினர் எக்கச்சக்க சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தவறான பயன்பாட்டால் அதில் பிரச்னைகளை பெருக்கிக் கொள்கிறவர்களும் அதிகம்.

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்போன் மற்றும் இன்டர்நெட்டை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் வழிகளை எடுத்துச் சொல்லி, எதிர் விளைவுகள் தரும் பயன்பாடுகளில் இருந்து இளம் வயதினரை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன்... அவள்விகடன், புதுச்சேரி, முத்து சில்க் ஹவுஸுடன் இணைந்து, புதுச்சேரியில் உள்ள இதயா மகளிர் கலைக் கல்லூரியில் மார்ச் 2 மற்றும் 3-ம் தேதி 'செல்நெட் - 2015’ என்ற விழிப்பு உணர்வு மற்றும் தொழில் ஆலோசனை முகாமை நடத்தியது.

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியைகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் முதல் நாள்... ரங்கோலி, நடனம், மௌன நாடகம், ஓவியம், கட்டுரை, மாதிரி வடிவமைப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நானூறுக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்த... குறிப்பாக ஓவியப் போட்டியில் 'இயற்கையும் தொழில்நுட்பமும்’ என்ற தலைப்பில் மாணவிகள் தீட்டியிருந்த வித்தியாசமான, கருத்தோட்டமிக்க ஓவியங்கள், பாராட்டுகளைக் கொய்தன. ஃபேஷன் ஷோவில் 'தகவல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளில் மாணவிகள் அணிவகுக்க, 'ரோபோ’வாக வந்த மாணவி அப்ளாஸ் அள்ளினார்.

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

இரண்டாம் நாள் நிகழ்ச்சி கல்லூரி அரங்கத்தில் முதல்வர், சிஸ்டர் லிட்டில் ஃப்ளவர் வரவேற்புரையுடன் தொடங்கியது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சென்னை, முத்துக்குமரன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வரும், கணிப்பொறி அறிவியல் துறையில் முனைவர்பட்டம் பெற்றவரும், பல அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஆராய்ச்சியாளருமான முனைவர் சுரேஷ். செல்போன் மற்றும் இன்டர்நெட் குறித்த தகவல்களை அவர் இதிகாச கதைகள் மூலமாகவும், நடைமுறை வாழ்க்கை சம்பவங்கள் மூலமாகவும் தொடர்புபடுத்திப் பேச, சுவாரஸ்யமாக கவனித்தனர் மாணவிகள்.

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

''தொழில்நுட்பத் துறையில் இன்று பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். காரணம், அவர்களின் உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறனும், அப்படிக் கற்றுக்கொண்ட விஷயங்களை நேர்த்தியாக வேலையில் செயல்படுத்துவதும்தான். முன்பெல்லாம் படிப்பை முடித்தவுடன்தான் வேலைக்குச் செல்ல முடியும். ஆனால், இன்று செல்போன், இன்டர்நெட் உதவியோடு படித்துக்கொண்டே ஓய்வு நேரங்களில் வேலை செய்து சம்பாதிக்க முடியும். அப்படி ஜெயித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லும் அதே வேளையில், ஃபேஸ்புக், செல்போனுக்கு அடிமைகளாக இருக்கும் இளைஞர்கள் பற்றிய வருத்தத்தையும் பதிவுசெய்ய வேண்டும். இதனால் நேரமும், பணமும் வீணாவதோடு, அவர்களுக்குப் பல உடல்நல, மனநல மற்றும் சூழல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுகின்றன. விரல் நுனியில் உலகம் என்பதை, வெற்றிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; வீழ்வதற் காக இல்லை!'' என்று அறிவுறுத்தியவர், டிஜிட்டல் உலகத்தின் சவால்களையும், அதை எதிர்கொண்டு ஜெயிக்கும் வழிகளையும் சிநேகமாகச் சொன்ன விதம் மாணவிகளை ஈர்த்தது.

'செல்போன் மற்றும் இன்டர்நெட்... வரமா சாபமா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் களைகட்ட, இரு குழுக்களாகப் பிரிந்து சொற்போர் புரிந்த மாணவிகளை, நடுவராகப் பொறுப்பேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் சரஸ்வதி இன்னும் தட்டிக்கொடுத்து பேச வைத்தார். இறுதியாக, ''செல்போன் மற்றும் இன்டர்நெட் வரமே! ஏனெனில், மனிதர்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பது அழிவுக்காக அல்ல; வளர்ச்சிக்காக மட்டுமே. நாம்தான் அதை நல்ல விதத்தில் பயன்படுத்திப் பயன் பெற வேண்டும்!'' என்று சரஸ்வதி சொன்ன தீர்ப்பை, கைதட்டல்களால் கொண்டாடினர் மாணவிகள்.

தொழில்நுட்பம் அழிவுக்கல்ல!

கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட, நிகழ்ச்சியின் இறுதியாக, ''செல்போன் மற்றும் இன்டர்நெட்டை இனி அளவோடு பயன்படுத்துவோம். ஒருபோதும் அவை எங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்!'' என்ற உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர் மாணவிகள்.  

அதுதானே வேண்டும் 'அவளு’க்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism