Published:Updated:

கோபக்கிளிகள்!

கோபக்கிளிகள்!

"நாங்கள்லாம் கோபமா பார்த்தா, குடிசை எரியும். கொடூரமா பார்த்தா, கோபுரமே எரியும்!''

இது வடிவேலு பன்ச்.

"ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது விஜய் பன்ச் இப்படி பன்ச் பன்ச்சாக பேசிவிட்டு அடுத்த கட்டமாக சினிமா காமெடியன், ஹீரோக்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

''எனக்கு மட்டும் கோபம் வந்துச்சுன்னா...'ங்கிற ஆக்‌ஷன் பன்ச் சிச்சுவேஷனுக்கு, நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?''னு தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மெர்சல் கேர்ள்ஸ்கிட்ட கேட்டோம்!

கோபக்கிளிகள்!

''நான் நானா இருக்க மாட்டேன். என்னைக் கோபப்படுத்தினவங்களோட ஏதாவது ஒரு பொருளைக் கீழே போட்டு உடைச்சுடுவேன். பெரும்பாலும் அது அவங்களோட மொபைலா இருக்கும். இதுல முக்கியமான விஷயம்... அந்த நேரம் பார்த்து அவங்க வேற யாரோட மொபைலையோ வாங்கி கையில வெச்சிருக்க, அதை நாம உடைக்க, அந்த மூணாவது நபருக்கும் நமக்கும் பஞ்சாயத்தாகனு... இந்த டிவிஸ்ட் எபிசோடுக்கும் இதுல வாய்ப்பிருக்கு. அதனால, எதிராளி கையில இருக்கிறது சொந்த மொபைல்தானானு உறுதிப்படுத்திக்கிறது அவசியம்!''னு ரொம்ப அலர்ட்டா பேசினாங்க பி.எஸ்ஸி., இரண்டாம் ஆண்டு படிக்கும் லாவண்யா.

''வீட்டுல யாராச்சும் என்னைய டென்ஷனாக் கினாங்கனா, அன்னிக்கு அவங்களுக்கு உண்ணா நோன்புதான் போங்க. அதாவது, வீட்டுல சமைச்சு வெச்சிருக்கிற சாப்பாட்டுல சாதம், குழம்பு, கூட்டு, காய் எல்லாத்தையும் ஒண்ணா கலந்து, உருட்டி உருட்டி எங்க வீட்டு நாய்க்கு வெச்சிட்டு, எல்லாரையும் பட்டினி போட்டுருவேன். இந்த ராஜலட்சுமி, அப்போ ஹேப்பி அண்ணாச்சி! இதை ஒரு தடவை நான் வெற்றிகரமா செயல்படுத்தி இருக்கிறதால, நான் கோபமா இருந்தா, உடனே வீட்டுல இருக்கிறவங்க உஷாராகி முதல் வேலையா சோறு, குழம்பு எல்லாத்தையும் பத்திரப் படுத்திடுவாங்க. அந்த பயம் இருக்கட்டும்!''

  'லகலக’னு சிரிக்கிறாங்க, பி.எஸ்ஸி., இரண்டாம் வருடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ராஜலட்சுமி.

''நம்ம கோபமா இருக்கும்போது, மத்தவங்க கண்டுக்காம டி.வி பார்த்துட்டு இருந்தா, அந்தக் கோபம் கிடுகிடுனு ரிக்டர் ஏறும் பாஸ். ரிமோட்டை கைப்பற்றுவதுதான் முதல் தாக்குதல். அப்புறமா, அவங்க ரசிச்சு பார்த்திட்டு இருக்கிற சீரியலை சடார்னு மாத்திட்டு, அவங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு சேனலுக்கு தாவிட்டு, மினி டிஜிட்டல் தியேட்டர் மாதிரி சவுண்டை அலற விட்டுட்டு, உறுமிகிட்டே சோபாவுல உட்கார்ந்திடுவேன். கிச்சனுக்கு போய் அவங்க சப்பாத்திக்கட்டை, தோசைக்கரண்டினு ஏதாச்சும் வெபன்ஸ் எடுத்துட்டு வர்ற கேப்ல, சட்டுனு ரூம்குள்ள போய் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு, 'எனக்கு சாப்பாடு வேண்டாம், நான் சாப்பிடவே மாட்டேன்’னு கத்திச் சொல்லிடுவேன். உள்ள கமுக்கமா, ஏற்கெனவே பதுக்கி வெச்சிருக்கிற பிரெட், பிஸ்கட்னு சாப்பிட்டு, ஏப்பம் விட்டு, நிம்மதியா தூங்கிட்டு, மறுபடியும் சாயங்காலம் 'உர்ர்ர்’னு மூஞ்சியை வெச்சிட்டு எக்ஸிட் ஆவேன். கோபமா இருக்கேனாமாம்!''னு செல்ஃப் மொக்கை கொடுத்துக்கிட்டாங்க, பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் ஜெயப்பிரியா.

பி.காம் முதலாண்டு படிக்கிற வெற்றிச்செல்வி சொன்னது, ஆக்‌ஷன்  எபிசோடு...

''என்னை யாராச்சும் வீம்புக்கு டென்ஷன் ஆக்கினாங்கனா, நின்னு, நிமிர்ந்து, கண்ணோட கண் பார்த்து முறைப்பேன். முறைச்சிட்டே இருப்பேன். அதுக்கும் அவங்க அடங்கலைனா, அந்த நேரத்துல கையில சிக்குற ஒரு ஆபத்தில்லாத பொருளை எடுத்து, ஜாகீர்கான் மாதிரி ஒரே த்ரோதான். எனக்கு கோபம் வந்தாலும், காளியை மலையேத்துறது ரொம்ப ஈஸி. ஒரு பனீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுத்தா போதும்! பனீர் பட்டர் மசாலா தேவைப்படுற மாதிரி இருந்தா... ஒரு டூப்ளிகேட் கோபமும் வரும் எனக்கு!''

"ஹைய்யோ... நீங்க நெனைக்கிற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லைங்க'னு அப்படியே தடார்னு காமெடி லைன் பிடிச்சு, அவங்களை ஓட்டு ஓட்டுனு ஓட்டி எடுத்துடுவேன். இப்போவெல்லாம் சினிமாவுலகூட 'டேய்.... எட்றா அரிவாள...’ எல்லாம் ஃபீல்ட் அவுட். காமெடி படங்கள்தான் ஹிட். அதனால, நோ ஆங்ரி, பீ ஹேப்பி!''

மெசேஜ் சொல்லும் கடமைக்கு, கடைசியா வந்து சேர்ந்துட்டாங்க பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் சன்யா!                                                            

ம.மாரிமுத்து, படங்கள்: வீ.சக்தி அருணகிரி