Published:Updated:

கேம்பஸ் ஸ்டார்ஸ்!

கேம்பஸ் ஸ்டார்ஸ்!

ல்லூரியில் படித்துக் கொண்டே மீடியா உலகில் கால் பதித்திருக்கும் சென்னை கேம்பஸ் ஸ்டார்களின் 'வெல்கம் பேட்டி’ இது!

ராஜி,எம்.எஸ்ஸி., விஸ்காம், லயோலா கல்லூரி

கேம்பஸ் ஸ்டார்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. காம்பியரிங் ஆசை என்னை சிங்காரச் சென்னைக்கு கூட்டிட்டு வந்திருச்சு. எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல படிச்சப்போ ரேடியோ ஜாக்கியா முதல் அனுபவம். அப்புறம் விஜய் டி.வி. 'பெரிதினும் பெரிது கேள்’ நிகழ்ச்சியில டாப் 5 கல்லூரிகளில் மாஸ் காட்டிட்டு, அப்படியே ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் பொதிகை, ஜீ தமிழ், கலைஞர் டி.வி, மக்கள் டி.வினு வலம் வந்தாச்சு. இப்போ புதுயுகம் சேனல்ல 'இனியவை இன்று’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். விக்ரம், த்ரிஷா, விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, பிரபு சாலமன்னு கிட்டத்தட்ட 50 பிரபலங்களைப் பேட்டி எடுத்திருக்கேன். எனக்குப் பிடிச்ச ஆங்கர்... ஸ்வீட் 'டிடி'!''

பவித்ரா, பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆல்ஃபா கல்லூரி

கேம்பஸ் ஸ்டார்ஸ்!

''விஜய் டி.வி 'ஆபீஸ்’ சீரியல்ல என்னைப் பார்த்திருப்பீங்களே?! வெளிவரவிருக்கும் சில படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். எனக்கு நடிப்பு புதுசில்ல. குழந்தை நட்சத்திரமா சன் டி.வி சீரியல்கள் 'ஆசை’, 'பல்லாங்குழி’யில நடிச்சிருக்கேன். சன் டி.வியின் 'சிறந்த குழந்தை நட்சத்திர’ விருதுகூட வாங்கியிருக்கேன். ப்ளஸ் டூ முடிக்கிற வரைக்கும் மீடியாவுக்கு பை சொல்லியிருந்தேன். அப்புறம் விஜய் டி.வி நடத்தின 'விஜய் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில தமிழ்நாடு அளவில் டாப் லிஸ்ட்ல தேர்வாகி, மறுபடியும் சீரியல் என்ட்ரி கொடுத்தேன். நாமதான் அல்ரெடி நடிகையாச்சேன்னு கெத்துல போனா, முதல் ஷாட்லயே 83 டேக்ஸ் வாங்கி டைரக்டர்கிட்ட பரேடு வாங்கினேன். இட்ஸ் ஆல் இன் த கேம். இப்போ நடிகை, நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஆல் இந்தியா ரேடியோ ஸ்கிரிப்ட் ரைட்டர்னு ஓடிட்டிருக்கேன்!''

பவன், பி.எஸ்ஸி., விஸ்காம், லயோலா கல்லூரி

கேம்பஸ் ஸ்டார்ஸ்!

'''தலைவா’ படத்தில் விஜய் சாருக்கு நடனத்தில் தோள் கொடுத்த அதே பவன்தான், நான். ஒரு நிகழ்ச்சியில் என் நடனத்தைப் பார்த்த ஏ.எல்.விஜய் சார் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார். 'தமிழ் பசங்க’ பாட்டுக்கு என் டான்ஸ் பார்த்து விஜய் சார் பாராட்டினதும், என் பிறந்தநாளுக்கு நேரில் அழைத்து கிஃப்ட் கொடுத்ததும் ஹேப்பி மொமென்ட். இப்போ 'ஷட்டர்’னு ஒரு படத்துல நடிச்சிட்டிருக்கேன். ஜி.வி. பிரகாஷோட 'பென்சில்’ படத்துல வில்லன் மாதிரி ஒரு ரோல், சூப்பர் டான்ஸ் சாங்னு வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்!''

ஜெனிஃபர் கேரனாபுக், பி.எஸ்ஸி., விஸ்காம், லயோலா கல்லூரி

கேம்பஸ் ஸ்டார்ஸ்!

''இந்தியாவின் முதல் பெண் கலை இயக்குநராகும் கனவோட என் துறையில் வளர்ந்திட்டு இருக்கும் பொண்ணு நான். ஸ்கூல் படிக்கும்போது, வரையுற கேள்விகள்தான் எனக்குப் பிடிக்கும். சினிமாவில் ஆர்ட் டைரக்டராகணும்னு சொன்னதும், 'பெண்களுக்கு அது சரிப்பட்டு வராது, ரொம்ப கஷ்டம்'னு நிறைய அறிவுரைகள். அதையெல்லாம் கண்டுக்காம அனாடமி டிராயிங்ஸ், மினியேச்சர் கிரியேட்டிவிட்டினு இந்த ஏரியாவுக்கான விஷயங்களைக் கத்துக்கிட்டேன். நிறைய குறும்படங்களில் ஆர்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். கிடைச்ச அனுபவம், 'அருவி’ என்ற படத்துல 'எங்கேயும் எப்போதும்’ கலை இயக்குநர் சிட்டிபாபு சார் கிட்ட கலை உதவியாளரா வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது. அந்த டீம் வொர்க், அவ்ளோ சந்தோஷமா இருக்கு. பாலிவுட்லயும் சான்ஸ் தேடிட்டு இருக்கேன். சீக்கிரமே 'இந்தியாவின் முதல் பெண் கலை இயக்குநரா’ அறியப்படுவேன்!''

கார்த்திக், பி.இ., எம்.ஏ., மீடியா ஆர்ட்ஸ், லயோலா கல்லூரி

"என் படிப்பைப் பார்த்து குழப்பமாகி இருப்பீங்களே..? இன்ஜினீயரிங் படிச்சு, நல்ல சம்பளத்துல கேம்பஸ் இன்டர்வி யூவுல தேர்வானேன். மீடியா ஈர்ப்பால அதை விட்டுட்டு, இப்போ இங்க படிச்சிட்டு இருக்கேன். பள்ளி படிக்கும்போதே 'என்ன பிழை செய்தோம்’னு இலங்கைப் பிரச்னையை மையமா வைத்து நான் நடத்திய நாடகம், தமிழகம் முழுக்க எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. ஒரே நாளில் நான் எடுத்து முடிச்ச 'இனியாவது’ என்ற குழந்தைத் தொழிலாளர் பற்றிய குறும்படம் உட்பட, இதுவரை நான் இயக்கிய ஐந்து குறும்படங்கள் 'பளிச்' அறிமுகம் கொடுத்திருக்கு. எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்தின திருச்சி சினிமா கிளப்புக்கு நன்றி!''

கேம்பஸ் ஸ்டார்ஸ்!

தென்னரசன், எம்.ஏ., மீடியா ஆர்ட்ஸ், லயோலா கல்லூரி

''வாசிக்கிறது சினிமா, சுவாசிக்கிறது கவிதைகள். பி.எஸ்ஸி., மேத்ஸ் படிச்சப்போவே, என் கவிதைகளால் கல்லூரிப் பிரபலம் ஆனேன். வைரமுத்து சார்தான் என் ரோல் மாடல். அவரை மாதிரியே 19 வயசுக்குள்ள என் கவிதைத் தொகுப்பை புத்தகமா வெளியிட்டேன். 'சுதந்திரம் விற்பனைக்கு’ என்ற அந்தப் புத்தகத்தில் அரசியல், காதல், சமூகம்னு எல்லா தளங்களிலும் கவிதைகள் இருக்கும். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வென்ற முதல் பரிசு சின்ன ஊக்கம்னா... கவிஞர், பாடலாசிரியர் அறிவுமதி சார் என்னோட கவிதைகளைப் படிச்சிட்டு 'நான் உன்னிடம் தோற்க வேண்டும்’னு பாராட்டினது, பெரிய உற்சாகம். சினிமா பாடலாசிரியர் வாய்ப்புகள் தேடிட்டு இருக்கேன்!''

சி.மீனாக்‌ஷி சுந்தரம், படங்கள்: இரா.யோகேஸ்வரன், பா.அருண்