Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

''தோ வர்றோம்!'' என்று மண்மணக்க வந்தாங்க, மதுரை, நாகமலைப்புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவிகள்... இந்த இதழ் 'கேர்ள்ஸ் புரொஃபைல்’லை சார்ஜ் எடுத்துக்க!

யோகா டீச்சர்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னையில இருந்து மதுரை போய் படிக்கிறாங்க, பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி அபிராமி அசோகன். ''நான் யோகா கிளாஸ் டிரெய்னர். அதனால, படிக்கும்போதே சம்பாதிக்கும் சமர்த்துப் பொண்ணு. இப்போ பரதம் கத்துட்டு இருக்கேன். கல்ச்சுரல்களில் எல்லாம் கலக்கி எடுத்துடுவேன். நல்லா பாடுவேன். ஆனா, ஒன்லி இங்கிலீஷ் சாங்ஸ். கேட்கிறீங்களா..? 'ஐ நோ யூ... ஐ நோ யூ..!''

தொர இங்கிலீஷ்லயே பாடுது!

இன்டர்வியூ பிரியம்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

இன்டர்வியூவுக்குப் போறதுன்னா அவ்ளோ இஷ்டம், பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படிக்கும் ஜெயலட்சுமிக்கு. ''ஃபைனல் இயர் வந்துட்டோம்ல, அதான். இப்போதைக்கு மட்டும் 12 இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி, செலக்ட் ஆகியிருக்கேன். ஏன் இந்தக் கொலவெறினு கேட்கிறீங்களா? எல்லாம் அனுபவம்தானே! கேரம் போர்ட்ல மூணு வருஷமா டிவிஷனல் லெவல் சாம்பியன், ஸ்டேட் லெவல் ரன்னர் என்பது, என்னோட ஸ்போர்ட்ஸ் புரொஃபைல்!''

இந்த இன்டர்வியூ போதுமா, இன்னும் கொஞ் சம் வேணுமா?!

மிமிக்ரியும் தெரியும்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கல்லூரி த்ரோபால் டீம் கேப்டன், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் பிரேமிகா. ''சமீபத்துல எங்க டீம் டிவிஷனல் லெவல் ஜெயிச்சது, பெரிய சந்தோஷம். டோர்ன மென்டுக்காகப் போகும்போது, ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் போட்டி டென்ஷன்ல இருந்தாங்கன்னா, அவங்க மைண்டை ரிலாக்ஸ் பண்ண, கைவசம் மிமிக்ரி திறமை இருக்கு எங்கிட்ட! என்னோட தமிழ் உச்சரிப்பும் வாசிப்பும், எல்லோரும் பாராட்டும் விதமா இருக்கும். நியூஸ் ரீடர் ஆகும் ஆசை இருக்கு!''

செய்திகள் வாசிக்க வாங்க பிரேமி!

கற்பது தமிழ்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு மாணவி, கமலி. ''பேச்சுப்போட்டி மேடைதான் எனக்கான அடையாளம். காலேஜ்ல சேர்ந்த ஒரு வருஷத்துக்குள்ள, ஏழு பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கியிருக்கேன். சமீபத்துல ஒரு போட்டியில பேசினப்போ, எல்லா பேச்சாளர்களுக்கும் ஐந்து நிமிடம்தான் கால அவகாசம். ஆனா, என்னோட பேச்சைக் கேட்டு, நடுவர்கள் எனக்கு மட்டும் எட்டு நிமிடங்களா கால அவகாசத்தை நீட்டிச்சாங்க. அந்தளவுக்கு தரமா, சிறப்பா பேசுவேன். ஒருமுறை ஆடிட்டோரியம் வந்து பாருங்க... ச்சும்மா அதிரும்ல!''

பேச்சு, கமலி மூச்சு!

நடுரோட்டுல டான்ஸ்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

பரதம், வெர்ஸ்டர்ன், ஃபோக்னு எல்லா ரிதத்துக்கும் அட்டகாசமா ஆடுது, பி.எஸ்ஸி., இறுதியாண்டு படிக்கும் ஜெயப்பிரதாவோட பாதங்கள். ''சாலை விதிகள் பற்றின ஒரு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக, எங்க காலேஜ் கல்ச்சுரல் டீம் மதுரை மாட்டுத்தாவணில பஸ் ஸ்டாண்ட்ல முகாம் நடத்தினோம். அதுல ஒரு அங்கமா, நடு ரோட்டுல நாங்க ஆடின டான்ஸுல மாட்டுத்தாவணியே அந்த முகாமை நின்னு கவனிச்சிச்சு. கல்ச்சுரல்ஸில் ஆடுறதைவிட, இப்படி சமூக அக்கறைக்காக நிகழ்ச்சி பண்றது இன்னும் சந்தோஷமா இருக்கு. விழிப்பு உணர்வு ஸ்லோகன் எழுதுறதும் ரொம்பப் பிடிக்கும்!''

நீ ஆடு ஆத்தா!

பறை அடிக்கும் பாவை!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

சவிதா படிக்கிறது பி.காம்., இரண்டாம் ஆண்டு. ஆனா, பல துறைகளிலும் கிளை பரப்பும் ஆர்வம் இவங்களுக்கு. ''பறை, கோலாட்டம்னு நம்ம பாரம்பர்யக் கலைகளை, நாகர்கோவிலுக்குப் போய் கத்துக்கிட்டு வந்தேன். நான் பறை அடிச்சா, பார்வையாளர்கள் நரம்பைச் சுண்டி இழுக்கும். 'கூத்துப்பட்டறை’யிலும் பயிற்சி பெற்றிருக்கேன். அதனால, கல்லூரி நாடகங்களில் பட்டையைக் கிளப்புவேன். வேஸ்ட் அண்ட் ஆர்ட்ல நேஷனல் லெவல் போட்டியில ஜெயிச்சிருக்கேன். ’ஹலோ எஃப்.எம்’ல ஷோ பண்ணியிருக்கேன். காலேஜ் கல்ச்சுரல் டீம் கோஆர்டினேட்டர் சவிதாதான் என்பது, டெயில் பீஸ்!''

வாங்க தல!

ஸ்டூடன்ட் கம் பியூட்டிஷியன்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

தினமும் காலேஜ் முடிஞ்சதும், பியூட்டி பார்லர்ல பார்ட் டைமா வேலை பார்க்கிறாங்க, பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் செடிபி மரியா கரோலின். ''என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், சீனியர்ஸ், ஜூனியர்ஸ் மூலமாவே பிரைடல் ஆர்டர் எல்லாம் பிடிச்சிருவேன். எங்க பார்லரோட ஃபேர்னஸ் கிரீம், ஃபேஷியல், ப்ளீச், ஹேர்ஸ்டைல்னு எல்லாத்துக்கும் நான்தான் விளம்பர மாடல். என்னைப் பார்த்து, 'ஏய் அழகா இருக்கே..!’னு சொல்ற பொண்ணுங்கள, 'பார்லருக்கு வாங்க!’னு பிராக்கெட் போட்டி ருவேன். பாடத்துல படிக்கிற மார்க்கெட்டிங் ட்ரிக்கை எல்லாம் இப்போவே அப்ளை பண்ணிப் பார்க்குறோம்ல. சந்தோஷமான விஷயம்... காலேஜ் ஃபீஸை என் சம்பாத்தியத்துல நானே கட்டிக்குவேன்!''

கஸ்டமர் பிடிக்கிறாக காலேஜுலயே!

தொகுப்பு: சி.சந்திரசேகரன்  படங்கள்: பா.காளிமுத்து