Published:Updated:

சேமிப்பு உங்கள் சாய்ஸ்!

அஞ்சல்துறை பரிசு

''அஞ்சல்துறை என்பது அஞ்சல் அனுப்பும் வேலைகளுக்கு மட்டுமானது அல்ல. பணத்தை உங்களின் விருப்பத்துக்கேற்ற வட்டி, காலத் தவணைகளில் சேமிக்க பல பயனுள்ள திட்டங்கள் உங்கள் அருகில் இருக்கும் அஞ்சல் நிலையங்களில் இருக்கின்றன. அப்படிச் சேமிக்கும்போது, ஏஜென்ட்டுகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!''

சேமிப்பு உங்கள் சாய்ஸ்!

சென்னை நகர மண்டல அஞ்சல் ஆய்வாளர் சுபாஷினி, போஸ்ட் ஆபீஸ் ஏஜென்ட்டுகளில் இருக்கும் போலிகளிடம் ஏமாறாமல் இருக்க நிறைய அலர்ட் செய்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஏஜென்ட் மூலமாக பணத்தை டெபாஸிட் செய்யும்போது, அவர் அடையாள அட்டை வைத்திருக்கிறாரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ் வைத்திருக்கிறாரா, சான்றிதழில் வேலிடிட்டி தேதி முடிவடையாமல் இருக்கிறதா போன்றவற்றையெல்லாம்  சரிபார்ப்பது அவசியம். தெரிந்தவர்கள், உறவினர்கள் என உங்களிடம் வந்து போஸ்ட் ஆபீஸ் ஏஜென்ட் என்று கூறினாலும், சரிபார்க்க வேண்டியது கட்டாயம்.

ஏஜென்ட் மூலமாக பணம் செலுத்துபவர்கள், ரசீதை தவறாமல் கேட்டுப் பெறுவதோடு, தொகை அஞ்சல் நிலையத்தில் கட்டப்பட்டிருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். பாஸ்புக்கில் போஸ்ட்மாஸ்டர் கையெழுத்து,

அஞ்சலக முத்திரை சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பணம் எடுக்கும் விண்ணப்பத்தை, ஏஜென்டை விட்டே பூர்த்தி செய்துதரச் சொல்வதை தவிர்க்கவும். சிலர் 'ஸ்பெஸிமன் கையெழுத்தை’ பாஸ்புக் அல்லது சான்றிதழ்களில் ஒட்டி வைத்திருப்பார்கள்... மறந்துவிடாமல் இருக்க! இது மற்றவர்களின் கைகளுக்கு கிடைத்தால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பாகும் என்பதால், இதை தவிர்க்கவும்.

மேற்சொன்னவை எல்லாம், போலிகளிடம் ஏமாந்து போய் மக்கள் எங்களிடம் வந்து புகார் செய்யும் விஷயங்கள். எனவே, கவனம் தேவை. மற்றபடி, அஞ்சல் துறையின் சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு அரசின் பரிசு.

வயதானவர்களுக்கு அதிக வட்டி தரும் திட்டங்கள், மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு தரும் திட்டங்கள், தற்காலிகமாக பணம் டெபாஸிட் செய்து எடுக்கும் திட்டங்கள், சிறிது சிறிதாக பணம் செலுத்தும்படியான திட்டங்கள், மாத வருமானம் தரும் திட்டங்கள் என பல பயனுள்ள சேமிப்புத் திட்டங்கள் இங்குள்ளன!'' என வரவேற்கும் சுபாஷினி, அவை பற்றிய விவரங்களையும், அதில் இணைவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் மார்ச் 24 முதல் 30 வரை பேசுகிறார் 'வழிகாட்டும் ஒலி’யில். கேளுங்கள், பயன்பெறுங்கள்!

நீங்கள் டயல் செய்ய வேண்டிய எண் 044 - 66802912*

கே.அபிநயா, படங்கள்: ஆ.முத்துக்குமார்