Published:Updated:

இது உப்பு மூட்டை சேலஞ்ச்!

இது உப்பு மூட்டை சேலஞ்ச்!

ரத் கட்டாரியா இயக்கத்தில், வெளியாகியிருக்கும் 'தம் லகா கே ஹைஷா’ எனும் பாலிவுட் திரைப்படம், குடும்பக் கவிதை!

இது உப்பு மூட்டை சேலஞ்ச்!

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பிரேம் (ஆயுஷ்மான் குரானா), பட்டதாரிப் பெண்ணான, குண்டான உடல்வாகுள்ள சந்தியாவை (பூமி பெட்னெகர்), தந்தைக்குப் பயந்து திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், அவள் மீதான வெறுப் பால், முதலிரவில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரக்கட்டையைப் போலவே நடந்துகொள்கிறான். ’எல்லாம் சரியாகிவிடும்' என்று அனுசரித்துப் போகும் சந்தியாவுக்கு, காத்திருக்கிறது அதிர்ச்சி. நண்பனின் திருமண விருந்தில் குடித்துவிட்டு, ''அவகூட கட்டில்ல படுத்திருக்கும்போது, ஆம்பள பக்கத்துல படுத்திருக்கிற உணர்வுதான் இருக்கு!'' என்கிறான். எதேச்சையாக இதைக் கேட்டுவிடும் சந்தியா, அங்கேயே அவனை ஓங்கி அறைகிறாள். அவனும் திருப்பி அறைகிறான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சந்தியா, டைவர்ஸ் முடிவை எடுக்கிறாள். படித்த பெண்ணை மகனுக்கு கட்டிவைத்தால், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத மகன் வாழ்க்கை பிரகாசமாகும் என்று நினைத்த தந்தை, மருமகளிடம் செருப்பைக் கொடுத்து, தன்னை அடித்து, அவனை மன்னிக்கச் சொல்லிக் கெஞ்சுகிறார். அவளோ, 'பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்ற அடிப்படை நாகரிகமே இல்லாமல் பிள்ளையை வளர்த்த உங்களையும் மன்னிக்க முடியாது!’ என்று சொல்லி தாய் வீடு திரும்புகிறாள்.

இது உப்பு மூட்டை சேலஞ்ச்!

விவாகரத்து வழக்கு காரணமாக, சில காலம் பிரேமுடன் வாழ வேண்டிய சூழல் சந்தியாவுக்கு. இதற்கிடையில் பிரேம் நடத்தும் கேசட் கடைக்குப் போட்டியாளராக இருக்கும் ஒருவன், 'தம் லகா கே ஹைஷா’ என்னும் போட்டிக்கு சவால் விடுக்கிறான்.  போட்டியின் விதிமுறை... மனைவியை உப்பு மூட்டையாக கணவன் தூக்கிக்கொண்டு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓடி வந்து எல்லைக்கோட்டை அடைய வேண்டும். பிரேம்  சந்தியா தம்பதிக்கு உறவினர்கள் தந்த ஆலோசனைகள், கொஞ்சம் கொஞ்சமாக அந்நியோன்னியத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்த வேளையில், இப்படி ஒரு சவால்.

க்ளைமாக்ஸ் ஓட்டப்பந்தயத்தில், கணவனின் முதுகில் இருந்தபடி, அவன் தளர்ந்துவிடாமல் இருக்க ஆலோசனை சொல்கிறாள். தள்ளாடும்போது ஈகோ உடைத்து, 'உங்களைவிட்டு எங்கே போகவும் எனக்கு விருப்பமில்ல!’ என்கிறாள். பிரேமின் மனதில் பொங்கும் சந்தோஷம் அவன் உடலுக்குள் சக்தி புகுத்தி இயக்க, வெல்கிறது ஜோடி.

பிரேமின் ஆதர்ச ஹீரோ, பாடகர் குமார் சானு பரிசு கொடுக்க வந்திருக்க, அதைக்கூட மறந்து, போட்டி எல்லையையும் மறந்து, மனைவியைத் தூக்கியபடி வீட்டுக்கே ஓடுகிறான்.

தொட்டதுக்கெல்லாம் விவாகரத்து என கோர்ட் வாசலில் நிற்பவர்களுக்கு, 'உடலளவில் பொருத்தம் இல்லா விட்டாலும் மனதால் பொருந்தி வாழலாம் அற்புதமாக' என்பதை,  சவாலோடு சொல்கிறது படம்.

இது தம்பதிகள் வாழ்ந்து காட்ட வேண்டிய உப்புமூட்டை சேலஞ்ச்!

பொன்.விமலா