Published:Updated:

விளக்குமாற்றால் அடிக்கும் திருவிழா!

விளக்குமாற்றால் அடிக்கும் திருவிழா!

விளக்குமாற்றால் அடிக்கும் திருவிழா!

விளக்குமாற்றால் அடிக்கும் திருவிழா!

Published:Updated:
விளக்குமாற்றால் அடிக்கும் திருவிழா!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவப்பட்டியில் கொண்டாடப்படும் முத்தாலம்மன் கோயில் திருவிழா, மாமன் - மச்சான் ஸ்பெஷல்! வருடா வருடம் மே (சித்திரை) மாதம் 5,6,7 தேதிகளில் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா மூன்று நாட்கள் நடக்கும் என்றாலும், திருவிழாவின் இரண்டாவது நாள் மட்டுமே அம்மன் கொழுவில் (சந்நிதியில்) இருக்கிறது. அன்று காலையிலிருந்து ஊரில் இருக்கும் ஆண்கள் சிலர் ‘சேத்தாண்டி’ வேஷம் போடுகிறார்கள். அதாவது, உடல் முழுவதும் சேற்றினை பூசிக்கொண்டு வீதிகளில் நடனமாடி வருகிறார்கள். அப்போதுதான் திருவிழா களைகட்டுகிறது.

விளக்குமாற்றால் அடிக்கும் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சேத்தாண்டி’ வேஷம் போட்டு வருபவர்களுக்கு மாமன், மச்சான் முறை உள்ளவர்கள், தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களை விளக்குமாற்றால் (துடைப்பம்) செல்லமாக அடிக்கிறார்கள். இன்னும் சிலர், தங்கள் மச்சான்களின் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு, விளக்குமாற்றை சேற்றில்  முக்கி, ‘வாங்க மச்சான், ரெண்டு அடி வாங்கிட்டுப் போங்க!’ என்று அழைக்க(!), ‘உங்க விருப்பம் மாமா!’ என்று பணிவாக நிற்கிறார்கள் முறைக்காரர்கள். இப்படி செல்ல அடிதடியாக நடக்கும் விழாவின் இடையிடையே, பெண்கள் தங்களின் மாமன், மச்சான் உறவுமுறைக்காரர்களுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி, உரிமையை உறுதிபடுத்துகிறார்கள்.

இந்த மாமன்மார்களில் சிலர் தப்பித்துக் கொள்வதற்காக வீட்டுக்குள் மறைவாக இருந்தாலும், அவர்களை உரிமையுடன் வீடுதேடி வந்து வெளுக்கிறார்கள் முறைக்காரர்கள். ஒருபடி மேலே போய், பங்காளிகள் ஒன்றிணைந்து மாமன்மார்களை தெருவில் இழுத்துவந்து விளக்குமாற்றால் துவைப்பதும் சந்தோஷ வழக்கமாக இருக்கிறது. 

விளக்குமாற்றால் அடிக்கும் திருவிழா!

அன்று மாலை சந்நிதியிலிருந்து அம்மன் பூஞ்சோலைக்குச் செல்லும் வரை மேளதாளங் களோடு இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது. இப்பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பெரும்பாலும் உறவு முறைகளுக்குள் வருவதால், திருவிழாவன்று அந்த வட்டாரமே விளக்குமாறும், சேறுமாகக் கலகலக்கிறது. ‘‘மலையேறினாலும் மாமன், மச்சான் துணை வேணுமுன்னு சொல்லுவாக. அந்த உறவை பலப்படுத்தத்தான், இந்தத் திருவிழா விளையாட்டு!’’ என்கிறார்கள் ஊர்க் காரர்கள்.

அது சரி!

உ.சிவராமன்  படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism