Published:Updated:

சம்மர் கிளாஸீக்கு... சவகர் சிறுவர் மன்றம்!

சம்மர் கிளாஸீக்கு... சவகர் சிறுவர் மன்றம்!

சம்மர் கிளாஸீக்கு... சவகர் சிறுவர் மன்றம்!

சம்மர் கிளாஸீக்கு... சவகர் சிறுவர் மன்றம்!

Published:Updated:

யிரங்களில் செலவழிக்க வேண்டிய கோடை வகுப்புகள், எளியவர்களுக்கு எட்டாததாகிவிடுகிறது. ஆனால், தமிழக அரசின் தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் நடத்தும் கோடைகாலப் பயிற்சி முகம், குறைந்த கட்டணத்தில் மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.

சம்மர் கிளாஸீக்கு... சவகர் சிறுவர் மன்றம்!

1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னையில் செயல்பட்டு வரும் இந்த மன்றத்தின் கிளைகள், மாநிலம் முழுக்க 40 இடங்களில் உள்ளன. 5 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி சிறுவர், சிறுமியர்களுக்கும், இம்மன்றம் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால சிறப்புப் பயிற்சிகளை நடத்துகிறது. இவ்வருடம் ஏப்ரல் 22-ல் ஆரம்பித்து மே 11 வரை நடக்கின்றன வகுப்புகள்.
 
வீணை, பரதநாட்டியம், ஜிம்னாஸ்டிக், கராத்தே, கீ-போர்டு, தையல், சிலம்பம், டிரம்ஸ், ஓவியம், நாட்டுப்புற நடனம் என, சவகர் சிறுவர் மன்றங்களில் 16 கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. ஒரு கலைக்கு 100 ரூபாய்தான் பயிற்சிக் கட்டணம். இந்தப் பயிற்சியில் தங்கள் திறமைகளை நிரூபிக்கும் மாணவர்களை, பிற மாநில விடுமுறை முகாம்களுக்கு இலவசமாக அனுப்புவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த மன்றங்கள் செயல்படுகின்றன. சென்னையில் மயிலாப்பூர் - லஸ் அவென்யூ, வியாசர்பாடி - விஸ்டம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, தாம்பரம் - ஜியோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, மேற்கு தாம்பரம் - அவ்வை நடுநிலைப்பள்ளி, வில்லிவாக்கம் - சிங்காரம்பிள்ளை ஆரம்பப்பள்ளி, ராமாபுரம் - எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோர் பள்ளி என ஆறு இடங்களில் செயல்படுகின்றன. ஒவ்வொரு மன்றத்திலும் பயிற்றுவிக்கப்படும் கலைகள் மாறுபடும்.

சென்னை, மயிலாப்பூரில் கோடைகால பயிற்சி வகுப்புகள் மட்டுமல்லாது, ஜூன் முதல் தேதியில் இருந்து மார்ச் மாதம் கடைசி தேதி வரை தினசரி பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன. சென்னையின் மற்ற மையங்களில், கோடைகால பயிற்சி வகுப்புகள் மட்டுமல்லாது, வார இறுதி நாட்களிலும் நடைபெறும்.

கே.அபிநயா  படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism