Published:Updated:

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

Published:Updated:

ம்ம ‘மானாட மயிலாட’ கீர்த்திக்கும், பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கும் ஆகஸ்ட் மாசம் 21-ம் தேதி டும்டும்டும்! கீர்த்திகிட்ட கல்யாணப் பேச்சு பேச வேண்டாமா?!

‘‘கீர்த்தி - சாந்தனு... காதல் கல்யாணம்தானே?!’’

‘‘இது ஃப்ரெண்ட்லி கல்யாணம் ரீட்டா!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இது என்ன, புதுசா இருக்கு?’’

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

‘‘எட்டு வயசுல இருந்தே நானும் சாந்தனுவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். சாந்தனு, என் அம்மாகிட்ட டான்ஸ் கத்துக்க வந்தாரு. அப்படி ஆரம்பிச்ச எங்க ஃப்ரெண்ட்ஷிப் நாளாக ஆக, ஃபேமிலி ஃபெரெண்ட்ஷிப்பா வளர்ந்துச்சு. ஒரு கட்டத்துல, எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சப்போ, எனக்கும் சாந்தனுவுக்கும் சொல்லத் தெரியாத ஒரு தவிப்பு. நாங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுனு நினைச்சோம். அதை வீட்டுல சொன்னோம். ரெண்டு வீட்டுலயும் எல்லாரைப் பத்தியும் எல்லாருக்கும் தெரியும். அதனால, பெரிய விசாரணை எல்லாம் இல்லாம, ரொம்ப சுமுகமா திருமணத் தேதி குறிச்சாச்சு!’’

டார்லிங் டார்லிங் டார்லிங்!

மது, புகை காட்சியில்லாமல் ஒரு சீரியல்!

‘‘ஒரு ஸீன்லகூட சிகரெட் புகைப்பதையோ, மது குடிக்கிறதையோ நீங்க பார்க்கவே முடியாது. ‘சிகரெட் / மது உடலுக்குக் கேடு!’னு கேப்ஷன் போடாத ஒரே சீரியல், எங்க ‘நிழல்’!’’ - பொதிகையில் சமீபத்தில் ஒளிபரப்பை ஆரம்பிச்சிருக்கும் ‘நிழல்’ நெடுந்தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சையத் ரஃபீக் பாட்ஷா உற்சாகமா பேசுறார். இவர், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘பாதைகள்’ தொடருக்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘சார்... இன்னிக்கு தேதியில சிகரெட், மது ஸீன் இல்லாத சீரியல்ங்கிறது... உண்மையிலேயே கிரேட்னு சொல்ற அளவுக்கு நிலைமை ஆகிப்போச்சு!’’

‘‘உண்மைதான் ரீட்டா. அதைவிடக் கொடுமை, வில்லன் கதாபாத்திரங்கள் அந்த மாதிரி ஸீன்களில் நடிச்ச காலம் போய், இப்போ சீரியல்களில்கூட ஹீரோயிஸமே மது, சிகரெட்தான்னு ஆகிப்போனது வேதனை!’’

‘‘உங்க ‘நிழல்’ எப்படி சார்?’’

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

‘‘ஆதரவற்றவர்கள் இல்லத்தில் இருந்து ஆரம்பிக்குது கதை. முழுக்க முழுக்க அன்பு, அரவணைப்பைச் சொல்ற சீரியல். குடும்ப வன்முறைகள் எல்லாம் தீண்டாத மென்மையான ஸ்கிரிப்ட். மனிதன் எத்தனையோ வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திச்சாலும், ‘இளைப்பாற ஒரு நிழல் கிடைக்காதா’னுதான் ஏங்குறான். அந்த நிழல் சிலருக்குக் கிடைக்குது, சிலருக்குக் கிடைக்காமப் போகுது. வாழ்க்கையின் பிடிமானத்தை அழுத்தமா பேசும் இந்தத் தொடரை, குடும்பத்தோட பார்க்கலாம்.

ஶ்ரீவித்யா, பெண் பத்திரிகையாளரா நடிக்கிறாங்க. சிவன் நிவாஸ், உதய், சேது டார்வின், தேசிகானு நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க. 350 எபிசோடுகள் வரை எடுக்கிறதா திட்டமிட்டிருக்கோம். ஒரு காட்சியோட தொடர்ச்சியை ஒரு வாரத்துக்கு இழுக்கிற வேலை எல்லாம் இருக்காது!’’

பார்ப்போம்!

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

மாலையிட்ட மங்கைஸ்!

சன் டி.வி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடிந்தது தெரியும். ஆனா, அதே நாளில் விஜய் டி.வி சூப்பர் சிங்கர் ராகினிக்கும் (‘துப்பாக்கி’ படத்துல காஜல் அகர்வாலுக்கு வாய்ஸ் கொடுத்தது அம்மணிதான்) பேஷா கல்யாணம் முடிஞ்சிருச்சு என்பது, ரீட்டா தரும் ஸ்கூப்!

என்சாய்ங்கோ!

‘டப்மாஷ்’ வைரலா பரவினாலும் பரவுது... கோலிவுட், டோலிவுட், பாலிவுட்னு எல்லா செலிப்ரிட்டிங்களும் வீடியோ ஷேர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம சின்னத்திரையில, எப்பவும் வெரைட்டியா யோசிக்கிற ‘மானாட மயிலாட’ சாண்டி, குரூப்பா டப்மாஷ் பண்ணி அசத்தினா, ‘கனா காணும் காலங்கள்’ ராகவ் ரவி அலைஸ் ‘புலிகேசி’யும் கலக்கியிருக்காரு. லிங்க் இங்கே... நீங்களும் என்சாய்ங்கோ!

ஃப்ரெண்ட்லி கல்யாணம்!

கின்னஸில்  ‘மானாட மயிலாட’!

``மானாட மயிலாட சீசன் - 9 நடக்கும்போதே இதுல ஏதாவது ஒரு சாதனை செய்யணும்னு தோணிட்டே இருந்துச்சு. நிகழ்ச்சியோட வெற்றியே, நாங்க போடும் செட்தான். `இதுல ஏதாவது புதுசா செய்தா என்ன’ன்னு தோணவும், `ஏம்ஸ் ரூம் இல்யூஷன் (AMES ROOM ILLUSION) என்கிற புதுவிதமான செட் ஐடியா கிடைச்சுது. இந்த ஐடியாவை கின்னஸுக்கு அனுப்பினோம். ஓ.கே. ஆகிடுச்சு. அடுத்து என்ன... `cubic' சைஸில ஒரு ரூம் அமைச்சோம். அதாவது, அந்த ரூமுக்குள்ள எனக்கு முன்னாடி நீங்க நின்னீங்கனா, சின்னதா தெரிவீங்க. நான் பெருசா தெரிவேன். இடம்மாறினா, நீங்க சின்னதா இருப்பீங்க, நான் பெருசா தெரிவேன். இப்படித்தான் அந்த ரூமை அமைக்கணும். அந்த ரூமை அமைக்க, அப்பப்பா... அவ்வளவு கஷ்டப்பட்டோம்! அந்த இடத்துலதான் 40 நிமிஷம் `மானாட மயிலாட’ நிகழ்ச்சியை லைவா செய்து காண்பிச்சோம். இதோ... இப்போ கின்னஸ் அவார்டு எங்க கையில!''

- நெகிழ்ச்சி குறையாமல் பேசுகிறார் கலா மாஸ்டர்.

சும்மா, அசத்திட்டீங்க மாஸ்டர்.

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

பார்க்கப் பார்க்க பரவசம்!

``தொலைக்காட்சிகளில் வரும் அமுல் ஐஸ்க்ரீம் விளம்பரம் பார்த்தேன். அதில், ஒரு தந்தை தன் பெண்ணுக்கு இரவில் ஐஸ்கிரீம் வாங்கித் தருகிறார். அப்போது, அந்தப் பெண்ணின் பேச்சு, முகபாவம், உணர்ச்சி வெளிப்பாடு போன்றவை பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது. அந்த சின்னப் பெண்ணின் நடிப்பு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது’’ என்று உள்ளம் நெகிழ்கிறார் விழுப்புரத்தில் இருந்து கிரிஜா மகாதேவன்.

அருமையான தீர்வுகள்!

``சமீபத்தில், தந்தி டி.வி-யில் ‘மனதோடு பேசலாம்’ நிகழ்ச்சி பார்த்தேன். அதில், மனநல மருத்துவர்கள் இருவர், நேயர்களின் மன நலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அருமையான தீர்வுகளைச் சொன்னார்கள். அனைவருக்கும் பயனளிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பிற டி.வி சேனல்களும் ஒளிபரப்பவேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார் கிருஷ்ணகிரியில் இருந்து வி.கலைச்செல்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism