Published:Updated:

பணம் தரும் மண்புழு உரம்!

பணம் தரும் மண்புழு உரம்!

பணம் தரும் மண்புழு உரம்!

பணம் தரும் மண்புழு உரம்!

Published:Updated:

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் பாரம்பர்ய விவசாயத்துக்குத் தேவையான மண்புழு உரம், முட்டைக் கரைசல், மீன் அமினோ அமிலம், பஞ்ச கவ்யா என பயிர் வளர்ச்சி ஊக்கிகளை இயற்கை முறையில் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்திருப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார், காந்திமதி!

‘‘இயற்கை விவசாயம் சார்ந்து செயல்பட எனக்கு உந்துதலா இருந்த குரு.. பசுமை விகடன்தான்! பி.காம் படிச்சுட்டு, இயற்கை உரம், பூச்சிவிரட்டினு பரபரப்பா இருக்கேன்.

•  வீட்டில் உள்ள ரோஜா செடிகளுக்கு காய்கறி, உணவுக்  கழிவுகளை உரமாக்குறது எப்படினு தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  செடிகளில் பூச்சித்தாக்குதல் இருக்கா? அந்தப் பூச்சிகளுக்கு முக்கியத் தேவை இலைகள். இயற்கை பூச்சிவிரட்டியைத் தெளித்தா, பூச்சிகள் அண்டவே அண்டாது.

பணம் தரும் மண்புழு உரம்!

•  வீட்டில் 8 அடி நீளம், அகலம் உள்ள தொட்டியில் ஒரு டன் வரை மண்புழு உரம் தயாரிக்கலாம், தெரியுமா?

•  முழுமையான இயற்கை விவசாயத்துக்கு மண்வழி ஊட்டம் மட்டும் போதாது. இலை வழி ஊட்டமும் வேணும். இதுக்கு வாத்து முட்டை மற்றும் எலுமிச்சையில் இருந்து முட்டைக் கரைசல் தயாரிச்சு தெளிக்கலாம்... அது எப்படி?

•  மீன், வெல்லம் மற்றும் ஒரு பேரல் இருக்கா... மீன் அமினோ அமிலம் தயாரிக்கலாம் வாங்க.

•  மரங்களை ஒட்டுப் போடுதல் மூலம் புதிய கன்றுகளை உருவாக்குறது பற்றித் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கா, வாங்க!

•  உரங்கள், பூச்சிவிரட்டிகள் தயாரிச்சாச்சு. மார்க்கெட்டிங் எப்படி செய்றது? வழி சொல்றேன்.

தொழிலில் வாடிக்கையாளர்கள்கிட்ட நம்பகத் தன்மை சம்பாதிக்கிறது ரொம்ப முக்கியம். அதுக்கு, விவசாயிகள் விதைக்க ஆரம்பிக்கிறதில் இருந்து அறுவடை வரைக்கும் அவங்களுக்கான ஆலோசனைகளை வழங்கிட்டே இருக்கிறது அவசியம்’’ என்று கண்கள் கனியும் காந்திமதி, ‘வழிகாட்டும் ஒலி’யில், இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகள் தருகிறார். மே 5 முதல் 11 வரை 044 - 66802912* என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள். பயன் பெறுங்கள்!

பா.சிதம்பர பிரியா   படம்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism