Published:Updated:

புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!

புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!

புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!

புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!

Published:Updated:

பொ றியியல் கல்லூரிகளில் புராஜெக்ட்டுக்காக மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், சில சமயம் அவற்றில் உள்ள சமூக அக்கறையால் கவனிக்க வைக்கும். சென்னை, முத்துக்குமரன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் இறுதியாண்டு மாணவர்கள், அப்படி தங்களின் அக்கறையான மூன்று கண்டுபிடிப்புகளால் கவனம் பெறுகிறார்கள்.

இ.சி.இ மாணவிகள் யமுனா, சுகன்யா மற்றும் வசந்தி ஆகிய மூவரின் புராஜெக்ட், ‘தானியங்கி பாதுகாப்பு பெட்டகம்’!

புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘வீட்டில் நடக்கும் திருட்டைத் தடுக்கும் கருவியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சேஃப்டி லாக்கரில் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை வைத்து, சுவருக்கு உள்ளே பொருத்திவிடுவோம். பாஸ் வேர்டு உள்ளிடும் கீ-பேட், கட்டைவிரல் பதிவு (தம்ப் இம்ப்ரஷன்) வைப்பதற்கான இடம், திறக்கும் லாக் மட்டுமே வெளியே தெரியும். கீ பேடில் சரியான பாஸ்வேர்டை உள்ளிட்டால் மட்டுமே, அடுத்த நிலையாக கட்டைவிரல் பதிவு வைக்கச் சொல்லிக் கேட்கும். இரண்டும் சரியென்றால், கதவு திறக்கும். அப்படியே கதவு திறந்தாலும், அங்கு வெற்றிடம்தான் இருக்கும். அதிலிருந்து இரண்டு அடிக்கு மேலேதான் பொருட்கள் வைக்கும் லாக்கரை செட் செய்துள்ளோம். ஒருவேளை திருடன் கீ-பேட், கட்டைவிரல் பதிவை உடைக்க நேர்ந்தாலும், வெற்றிடம் மட்டுமே தெரியும்; பொருட்கள் வைத்திருக்கும் லாக்கர் அவன் கண்களில் படாது.

லாக்கரில் ஒரு ஜி.எஸ்.எம் சிம் கார்டை  இணைத்து, அதில் குடும்ப உறுப்பினர்களின் மொபைல் எண்களைப் பதிந்து வைத்திருப்போம். ஒருவேளை திருடன் பாஸ்வேர்டு கொடுக்க முயன்று அது தவறானால், உடனடியாக அந்த மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் சென்றுவிடும். உடைக்க நேர்ந்தாலும், அந்த அதிர்வினை உணர்ந்து, சிம் கார்டில் பதிந்து வைத்துள்ள எண்களுக்கு அழைப்பு சென்றுவிடும். வெளியே சிறிய மைக் ஒன்றையும் அட்டாச் செய்துள்ளதால், அழைப்பை அட்டெண்ட் செய்தால், திருடர்கள் பேசுவது கேட்கும்!’’ ஏதோ த்ரில்லர் மூவி போல இருந்தது, மாணவிகள் விவரித்ததைக் கேட்டபோது!

புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!

இ.சி.இ படிக்கும் புவனேஸ்வரி, சுவேதா, மற்றும் பூமிகா பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் படிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

‘‘பார்வையற்றவர்கள் புத்தகங்கள் படிக்க இன்னொருவரின் உதவியோ அல்லது பிரெய்லி மொழியிலான புத்தகமோ தேவை. ஆனால், அனைத்துப் புத்தகங்களையும் பிரெய்லி மொழியில் மாற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல. நாங்கள் கண்டுபிடித்துள்ள மெஷினில் கேமரா, ஹெட்ஃபோன் அட்டாச் செய்துள்ளோம். மெஷினில் வைக்கும் புத்தகத்தின் எழுத்துக்களை கேப்சர் செய்து, வாய்ஸ் வடிவில் மாற்றி இது படிப்பவருக்குத் தெரிவிக்கும். பக்கம் முடிந்துவிட்டது என் றால் இண்டிகேஷன் சத்தம் கேட்கும். அதனைக் கேட்டு பட்டனைத் தட்டினால் போதும்... தானாகவே அடுத்த பக்கத்தைத் திருப்பிக்கொள்ளும்’’ என்று சொல்லி ஆச்சர்யம் கூட்டுகிறார்கள் தோழிகள் கைகோத்து!

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் வனிதா, ஷர்மிளா மற்றும் ஶ்ரீதா கண்டுபிடித்திருப்பது ஒரு ஆப்ஸ். ‘‘காது கேட்காத, வாய் பேச முடியாத நபர்களுக்கு சைன் (சைகை) மொழி தெரியும். ஆனால், நமக்குப் புரியாது. நாம் பேசுவது, அவர்களுக்குக் கேட்காது. இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன் இருப்பதால், இந்தப் பிரச்னைக்கு ஒரு ஆப்ஸ் உருவாக்க முடிவெடுத்தோம்.

புராஜெக்ட் கண்டுபிடிப்புகள்... புத்துணர்வு மாணவிகள்!

இது ஒரு ஃப்ரீ ஆப்ஸ். ஆப்ஸில் ஒவ்வொரு சைனுக்கும் அதற்குரிய வார்த்தைகளைப் பதிந்து வைத்திருக்கிறோம். அதேபோல வார்த்தைகளுக்கு உரிய சைன்களையும் பதிந்து வைத்திருக்கிறோம். சைன் மொழி பேசுவோரை வீடியோவாக எடுத்தால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை வாய்ஸாகக் கேட்கமுடியும். அதே போல நாம் பேசும் வார்த்தைகளை ரெக்கார்ட் செய்து அதற்குரிய சைன்களை தெரிந்துகொள்ளலாம். எங்களின் இந்தக் கண்டுபிடிப்பு ஐ.ஐ.டி மெட்ராஸில் நடத்தப்பட்ட போட்டியொன்றில் ‘பெஸ்ட் இன்னொவேட்டிவ் ஐடியா’ விருதைப் பெற்றிருக்கிறது!’’ என்று வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் மூவரும்!

வெல்டன் கேர்ள்ஸ்!

ந.ஆஷிகா படங்கள்:எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism