Published:Updated:

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

Published:Updated:

வள் விகடன் வாசகிகளின் திருவிழாவாக கொண்டாடப்படும் `ஜாலி டே’ இம்முறை நடந்தது, கோவையில்! அவள் விகடன் மற்றும் சத்யா நிறுவனத்தினர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஜுவல் ஒன் மற்றும் கோல்டு வின்னர் ஆகிய நிறுவனங்களும் கைகோக்க, பரிசு மழையில் நனைந்தனர் வாசகிகள்.

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம், குமரன் திருமண மண்டபத்தில் அரங்கேறிய `ஜாலி டே’ நிகழ்ச்சியின் முதல் நாளான சனிக்கிழமை முன்தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வழக்கமான போட்டிகளுடன், அடுப்பில்லாத சமையல் என்ற புதுப்போட்டி ஒன்றும் இணைக்கப்பட, டிரைஃப்ரூட் லாபிபாப், கேக், ஸ்வீட்ஸ் என்று அசத்தினர் கிச்சன் ராணிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அரங்கை நிறைத்த வாசகிகளின் உற்சாகத்துடன் தொடங்கியது `ஜாலி டே’. தொகுப்பாளர் சுபாஷினி மேடைக்கு வந்தபோது, கைதட்டலுடன் விசில் அடித்தும் வரவேற்றனர் தோழிகள். இளம் வாசகி பிரியதர்ஷினி வரவேற்பு நடனமாட,  தொடர்ந்து யு.கே.ஜி குட்டி தேவதைகள் சேன்னி ரோஸ், தேஜஸ் ஆகியோரின் நடனம் கியர் போட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது.

குழு நடனத்துக்கான இறுதிப் போட்டியில் போட்டியாளர்கள் மேடையில் ஆடியபோது, அவர்களுக்கு இணையாக அரங்கில் பார்வையாளர்களும் ஆடினர். எங்கு ஃபோகஸ் வைப்பது என திணறித்தான் போய்விட்டார் வீடியோகிராஃபர். போட்டிகள் கலகலப்புடன் தொடர... சர்ப்ரைஸாக மேடையில தோன்றிய ‘தெய்வமகள்’ சீரியல் புகழ் சுஹாசினி, ஹை பிட்சில் பாட, வாசகிகள் செம பிட்சில் ஆட... கலக்கல் கலாட்டாதான்!

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

ஆடிக் களைத்த வாசகிகளுக்கு நாம் அறுசுவை விருந்து படைக்க, உணவு இடைவேளைக்குப் பின் இன்னும் உற்சாகத்துடன் களைகட்டியது நிகழ்ச்சி. பாட்டு, நடனம், வினாடி-வினா போன்ற வழக்கமான போட்டிகள் தவிர, வாசகிகளில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ஒரு கேள்வி கேட்டு, 2,500 ரூபாய் மதிப்புள்ள பரிசை வழங்கிய சத்யா நிறுவனம், கூடவே, சத்யா நிறுவனம் பற்றிக் கருத்து தெரிவித்திருந்த வாசகிகளில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து 2,500 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கி அசத்தியது.

கோல்ட் வின்னர் நிறுவனத் தினர் நடத்திய சிறந்த ஸ்லோகன் போட்டியில் கலந்துகொண்ட வாசகிகளில், ஐந்து வெற்றி யாளர்களுக்கு சிறப்புப் பரிசு களை வழங்கி அசத்தியது அந்நிறுவனம். ஜுவல் ஒன் நிறுவனத்தினர், மேடையில் அதிர்ஷ்ட பெட்டி ஒன்றை வைத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகிகள் சிலர் மேடைக்கு வரவழைக்கப்பட, பல சாவிகள் இருந்த குடுவையில் இருந்து சரியான சாவியை எடுத்து பூட்டைத் திறப்பவர்களுக்கு தங்க நாணயங்களைப் பரிசாக வழங்கினர். வாசகிகள் பதற்றமும் பரவசமுமாக சாவியை எடுக்க... அதிர்ஷ்டக்கார வாசகிகள் ஐந்து பேருக்குக் கிடைத்தது தங்கக் காசு பரிசு. அரங்குக்கு வெளியே மழை ஆரம்பமாகி இருந்த மாலை வேளையில், அதற்கு இணையாக அரங்குக்குள்ளும் பரிசு மழை, அதுவும் தங்க மழை பொழிந்ததில் திக்குமுக்காடிப் போனார்கள் வாசகிகள்.

தங்க மழை பொழிந்த 'ஜாலி டே'!

போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டே இருந்ததால், நிகழ்ச்சியின் இறுதிவரை வாசகிகள் உற்சாகம் குறையாமல் இருந்தது. ஹைலைட்டாக, சத்யா வழங்கிய பம்பர் பரிசான ஃப்ரிட்ஜுக்கான வாசகியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்தபோது, வாசகிகளின் இதயத்துடிப்பு பெருகியது. கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திராணி, தட்டிச் சென்றார் ஃப்ரிட்ஜை!

‘‘ஹாலி டேயில் நடந்த இந்த ஜாலி டே, டபுள் டிரீட்தான்!’’ என்று கைகளிலும், மனதிலும் சந்தோஷத்தை அள்ளிச் சென்றனர் தோழிகள்!

ரா.ஆனந்தி படங்கள்:  தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism