Published:Updated:

படித்த படிப்பு ஒன்று... பார்க்கும் வேலை ஒன்று!

‘பட்டப்படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தம் உண்டா?’என்ற திரைப்பாடல், பலரின் வாழ்க்கைக்குப் பொருந்தும். அப்படி சிலரைச் சந்தித்தோம்.

படித்த படிப்பு ஒன்று... பார்க்கும் வேலை ஒன்று!

‘பட்டப்படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தம் உண்டா?’என்ற திரைப்பாடல், பலரின் வாழ்க்கைக்குப் பொருந்தும். அப்படி சிலரைச் சந்தித்தோம்.

Published:Updated:

ப்பா காலேஜ் பிரின்ஸிபால், அம்மா ஸ்கூல் பிரின்ஸிபால், அக்கா கோல்டு மெடலிஸ்ட் என படிப்பாளி குடும்பத்தில் இருந்து நடிப்பாளி ஆகியிருக் கும் தேவதர்ஷினி, ஆடிட்டர் ஆகும் ஆசையோடு படிப்பை முடித்தவர்.

படித்த படிப்பு ஒன்று...   பார்க்கும்  வேலை ஒன்று!

‘‘எத்திராஜ்ல காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன். சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட்தான் இலக்கு. பயங்கர படிப்ஸ் நான். ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தது போலவே, காலேஜ்லயும் ஃபைனல் இயர்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிட்டேன். கல்ச்சுரல் பக்கமெல்லாம் தலை வெச்சும் படுக்க மாட்டேன். திடீர்னு ஒரு வாய்ப்பா, ‘மர்மதேசம்’ சீரியல்ல நடிக்கக் கேட்டாங்க. அதை ஒரு ஹாபியா பண்ண ஆரம்பிச்சேன். டைரக்டர் நாகா சார், இந்தத் துறையில் அதிக ஆர்வம் ஏற்படக் காரணமா இருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பு, சினிமானு வாய்ப்பு கள் வர, படிப்பை விடக்கூடாதுனு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியில், கரஸ்ல எம்.காம் படிச்சேன். பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்துல, அஞ்சல்வழியில் எம்.எஸ்ஸி., சைக்காலஜி படிச்சேன்.   நிறைய விஷயங்கள்ல நாலெட்ஜ் வளர்த்துக்கிறதுக்காகத்தான் இதெல்லாம் படிச்சேன்!’’
 
‘கனா காணும் காலங்கள்’ காயத்ரி, மதுரைப் பொண்ணு. விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, இப்போது ஃபிட்னஸ், யோகா என்று புது ரூட்டில் பயணித்துக்கொண் டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படித்த படிப்பு ஒன்று...   பார்க்கும்  வேலை ஒன்று!

‘‘வீட்டில் அடம் பிடிச்சு, சென்னைக்கு வந்து டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். படிக்கும்போதே, ஹலோ எஃப்.எம்-ல இன்டர்ன்ஷிப், வெளி நிகழ்ச்சிகள் ஆங்கரிங்னு பண்ண ஆரம்பிச்சேன். லைவ் ஷோ, ரெக்கார்டட் புரோகி ராம்னு பிஸியானேன். விஜய் டி.வி ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் வாய்ப்பு கிடைச்சுது. ஆனா, என்னோட பெரிய கனவு, ஒரு டான்ஸ் ஸ்டுடியோ ஆரம்பிக்கறதா இருந்தது. தளராத முயற்சிக்குப் பின், அண்ணா நகர் மேற்குல ‘லெட்ஸ் டான்ஸ்’னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் ஸ்டுடியோவை ஆரம்பிச்சுட்டேன். ஆர்ட் அண்ட் போட்டோகிராஃபிதான் என் ஃபீல்டு. ஆனா, அதை அப்படியே விட்டுட்டு, டான்ஸ் கம் ஃபிட்னஸ், ஸும்பா, ஏரோபிக், யோகானு களம் இறங்கிட்டேன்!’’

ரு தமிழ் வாத்தியார், ஆங்கர் ஆன கதை... விஜய் டி.வி ‘ஈரோடு’ மகேஷுடையது!

படித்த படிப்பு ஒன்று...   பார்க்கும்  வேலை ஒன்று!

‘‘சின்ன வயசுல இருந்தே தமிழ் வாத்தியார் ஆகணும்ங்கிறதுதான் கனவு. காரணம், என்னோட தமிழ் வாத்தியார்கள். குறிப்பா, வஹாப் ஐயா. தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் பி.லிட் தமிழ் படிச்சேன். அங்க எங்க துறை ஆசிரியர் சிவச்சந்திரன் ஐயாதான் நான் தமிழை நேசிக்க காரணமாக இருந்தார். திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில எம்.ஏ., எம்.ஃபில் தமிழ் படிச்சேன். அப்போ எல்லாம் மேடைகளில் புரட்சிகரமா பேசுவேன். எக்கச்சக்கப் பரிசு வாங்குவேன். என்னோட நண்பர்கள் எல்லாம், ‘இவன் நிச்சயம் ஒரு பேச்சு டெரரிஸ்ட் ஆகப் போறான்டா’னு கேலி பண்ற அளவுக்கு ஆக்ரோஷமா இருக்கும் என் பேச்சு. அப்புறம் கத்திக் கத்திப் பேசுறதைவிட, சிரிக்க சிரிக்கப் பேசினா மக்களை சுலபமா சென்றடையலாம்னு புரிஞ்சுக்கிட்டேன். விசுவின் ‘அரட்டை அரங்கம்’, விஜய் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகள் எனக்கான வாசல்களைத் திறந்துவிட்டுச்சு. இப்போ அப்படியே சேனல்ல செட்டில் ஆயிட்டேன். பேராசிரியரா ஆக முடியலைங்கிற ஏக்கமும், வருத்தமும் ஒரு பக்கம் இருந்தாலும், வகுப்பறையில 40 பேருக்கு சொல்ற விஷயத்தை, கேமரா முன்னாடி மூணு லட்சம் பேருக்குச் சொல்லலாம்கிற நிறைவு இருக்கு!’’

படித்த படிப்பு ஒன்று...   பார்க்கும்  வேலை ஒன்று!

டிகை இனியா பைலட் ஆக ஆசைப்பட்டு, நடிகையாகி, இப்போது பி.பி.ஏ படித்துக்கொண்டிருக்கிறார். ‘‘சின்ன வயசுல வானத்துல குட்டியூண்டா தெரியுற ஃப்ளைட்டை அண்ணாந்து பார்த்து குஷியில் குதிச்சது இன்னும் ஞாபகம் இருக்கு. ‘டாக்டர் ஆகப் போறேன்’, ‘டீச்சர் ஆகப் போறேன்’னு சொல்ற அளவுக்கு விவரம் வந்த வயசுல, ‘பைலட் ஆகப் போறேன்!’னு சொன்னேன். நாட்களாக ஆக, பைலட் பைத்தியமே எனக்குப் பிடிச்சிருச்சு. பைலட் கோர்ஸ்கள், கல்லூரிகள்னு விவரங்கள் சேகரிச்சிட்டு இருந்தவ, திடீர்னு நடிக்க வந்துட்டேன். இப்போ பி.பி.ஏ., செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கேன். அடுத்து எம்.பி.ஏ படிக்கணும். நடிகைகளுக்கு எல்லாம் இங்க கேரியர் கிராயன்ட்டி இல்லையே..! அதனால இன்னும் 10 வருஷத்துல, ‘இனியாவா... அது யார்?’னு நீங்க கேட்கும்போது, நான் என்னோட எம்.பி.ஏ கேரியர்ல பிஸியா இருப்பேன்!’’

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: எம். உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism