Published:Updated:

ஸ்மார்ட் பார்ட் டைம் ஜாப்ஸ்

ஸ்மார்ட் பார்ட் டைம் ஜாப்ஸ்

ஸ்மார்ட் பார்ட் டைம் ஜாப்ஸ்

ஸ்மார்ட் பார்ட் டைம் ஜாப்ஸ்

Published:Updated:

குறுகிய கால கோர்ஸ் முடித்துவிட்டு, அதிலேயே பயிற்சியாளராக வகை செய்யும் ஸ்மார்ட் பார்ட் டைம் ஜாப்கள் இரண்டின் அறிமுகம் இங்கே!

ஸ்மார்ட் பார்ட் டைம் ஜாப்ஸ்

ஸும்பா பயிற்சியாளர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சி வகைதான், ஸும்பா. ஃபிட்னஸ் குறித்த அடிப்படை அறிவும், ஆர்வமும் இருக்கிறதா? ஸும்பா பயிற்சியாளராகலாம் வாருங்கள். பெரும்பாலும் பெருநகரங்களில் நடக்கும் இந்தப் பயிற்சி பற்றிய தகவல்களை, www.zumba.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பேஸிக், வெரைட்டி, வார்ம் அப், மராங்கே, சால்ஸா, ராகத்தான் உள்ளிட்ட அம்சங்களைக் கற்றுக்கொடுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி முடித்தால், ஸும்பா பயிற்சியாளருக்கான லைசென்ஸ் வழங்கப்படும். கூடவே, மெட்டீரியல்களும், சி.டி-யும் வழங்கப்படும். இதற்கான கட்டணம் 12 ஆயிரம் ரூபாயில் தொடங்குகிறது.

ஸும்பாவின் வரலாற்றில் இருந்து, ஒவ்வொரு பயிற்சியின் போதும் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படும் என்ற விவரங்கள் வரை மெட்டீரியல்களில் விவரங்கள் இருக்கும்.
சி.டி-யில் பத்துக்கும் மேற்பட்ட கொரியோ கிராஃப் செய்யப்பட்ட நடனங்கள் இருக்கும். மாதம் ஒருமுறை, ஸும்பா உலகின் அப்டேட் கள் சி.டி-க்களாக வந்துகொண்டே இருக்கும்.

இரண்டு நாட்கள் பயிற்சியின்போது கொடுக்கப்படும் லைசென்ஸ் ஒரு வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், வருடத்துக்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தவறினால், மீண்டும் முதல் நிலையில் இருந்து பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சி முடித்து, ஸும்பா லைசென்ஸ் பெற்றவுடன், ஃபிட்னஸ் ஸ்டூடியோக்களில் காலை அல்லது மாலை நேர வகுப்புகள் எடுக்கலாம். மொத்தமாக ஸ்டூடியோவிடமோ, அல்லது ஒவ்வொரு மாணவரிடமோ கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்.  

 
காலிகிராஃபி

எழுத்துக்களையே ஓவியங்கள் போல ரசிக்கும் விதமாக எழுதுவதுதான், காலிகிராஃபி (Calligraphy) இதனை இணையம் வழியாகவே, http://calligraphyforbeginners.com/ என்ற வலைதள முகவரியில் கற்றுக்கொள்ளலாம். உலகிலேயே வெஸ்டர்ன் காலிகிராஃபிக்கான சிறந்த இடமான கிளாஸ் (CLAS - The Calligraphy and Lettering Arts Society)-ல் உறுப்பினரானால், காலிகிராஃபியின் வகைகள், எடுத்துக்காட்டுகள், நவீன ஐடியாக்கள் உள்ளடங்கிய கலர் மேகஸின் ஒன்று வழங்கப்படும். அது இந்தத் துறையில் இன்னும் மெருகேற்றும். தவிர, இ-மெயில் மூலமாகவும் காலிகிராஃபி தொடர்பான தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

சரி, இதற்கான வேலைவாய்ப்பு என்ன..?

காலிகிராஃபி கற்றுக்கொண்டவர்கள் தொடர் பயிற்சியும், கிரியேட்டிவிட்டியும் இருந்தால் விசேஷங்களுக்கான பத்திரிகைகளில் இருந்து வாழ்த்து அட்டைகள், சான்றிதழ்கள், லோகோ டிசைன்கள், மெனு கார்டுகள், பிசினஸ் கார்டுகள், போஸ்டர்கள், திரைப்படங்களுக்கான டைட்டில்கள் வரை நவீனமான காலிகிராஃப் எழுத்துக்களில் டிசைன் செய்து கொடுக்கலாம். புதிய ஃபான்ட்களைக்கூட கண்டுபிடிக்கலாம். ஒரு பத்திரிகையோ, சான்றிதழோ டிசைன் செய்ய அதிகபட்சமாக இரண்டு மணி நேரம். அல்லது, ஒரு பெரிய புராஜெக்ட்டை முடிக்க அதிகபட்சமாக மாதத்தில் நான்கு நாட்கள் உழைப்பைத் தர வேண்டி வரும். வாய்ப்பைப் பொறுத்து, சம்பாதிக்கலாம்.

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism