Published:Updated:

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஸ்டைலோரி டாட்காம்!

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஸ்டைலோரி டாட்காம்!

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஸ்டைலோரி டாட்காம்!

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஸ்டைலோரி டாட்காம்!

Published:Updated:

ங்களுக்குப் பிடித்த நகைகளை ஆன்  லைனிலேயே ஆர்டர் செய்ய அழைக்கிறது, ஸ்டைலோரி.காம். பழமையில் புதுமையைப் புகுத்த விரும்பும் என்ஏசி ஜுவல்லர்ஸின் ஒரு புதிய முயற்சிதான், தினசரி பயன்பாட்டுக்கான ஃபேஷன் நகை களின் ஆன்லைன் நகைக்கடையான ‘ஸ்டைலோரி’!

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஸ்டைலோரி டாட்காம்!

சென்ற மாதம் மும்பையில் பரிநீத்தி சோப்ரா இந்த ஆன்லைன் வர்த்தகத்துக்கு பிள்ளையார் சுழி போட, சென்னையில் ஏப்ரல் 28 அன்று `ஸ்டைலோரி’க்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் பிரியா ஆனந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டைலோரியின் ப்ளஸ் என்ன?

தினசரி பயன்பாட்டுக்கான கம்மல், மோதிரங்கள் ஆகியவற்றோடு தங்க நாணயங்கள், சாலிட்டர் ஆபரணங்களையும் இங்கு வாங்கலாம். 50 சென்ட்டுக்கும் குறைவான வைரத்திலிருந்து 5 காரட் அளவுக்கும் அதிகமான வைரங்கள் வரை ஒரே இடத்தில் இருப்பது இதன் ப்ளஸ். 3000 ரூபாய் விலையில் இருந்து ஆரம்பமாகும் இந்த நகைகள் நடுத்தர வர்க்கத்தினரும் வாங்க ஏற்றது. ஆன்லைனில் நகைகள் வாங்கினாலும், வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க அனுபவம் கொண்ட அலுவலர்களுடன் உரையாடுவதற்கான வசதியும் இந்த வெப்சைட்டில் உள்ளது. இதனுடன், ஐஓஎஸ் மொபைல் பயனாளிகளுக்காக ஸ்டைலோரி மொபைல் செயலியும் (APP), அதைத்தொடர்ந்து விண்டோஸ் மொபைல்களுக்கான செயலியும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விசேஷ காலங்களில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் பெண்களை வித்தியாசமாக உணரவைப்பதுடன் தன் ஆடை அலங்காரங்களில் தனித்துவத்தை எதிர்பார்க்கும் இன்றைய நவீன பெண்கள் அனைவருக்கும் சிறந்த ஒரு அமைவிடமாக ஸ்டைலோரி இருக்கும் என உறுதிஅளிக்கிறார், என்ஏசி தலைமை செயல் அலுவலரான ஆனந்த ராமானுஜன். ஆர்டர் செய்த 24 மணி நேரத்துக்குள் நகையுடன் சேர்த்து ஜி.ஐ., ஜி.ஐ.ஏ., எஸ்.ஜி.எல் என்கிற மூன்று நகை தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் அளித்த ஒரு சான்றிதழும் வாடிக்கையாளர்களின் வாசற்படிக்கு வந்துவிடுமாம்.

க.தனலட்சுமி படம்: பா.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism