Published:Updated:

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

Published:Updated:
சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

ன்றைய நவீன உலகில் திறமையாளர்களை அள்ளிக்கொள்ள நாலாபக்கமும் காத்திருக்கின்றன வளமான வேலைவாய்ப்புகள். அதற்குத் தகுதிப்படுத்தும் படிப்பு, வேலை விவரங்கள், சம்பளத் தகவல்கள் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வத்தின் அடிப்படையில் பிடித்ததைத் தேர்ந்தெடுங்கள், கற்றலில் மெருகேறுங்கள், உறுதியுடன் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். ஒரு நாள் உங்கள் காலடிக்குக் கீழ் இருக்கும்... உங்களை உயரத்தில் ஏற்றிய பல நூறு படிகள்!

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிளிர வைக்கும் மீடியா பணிகள்!

விரைவில் வெளிவரவிருக்கும் ‘வித்தையடி நான் உனக்கு’ திரைப்பட வேலைகளில் ஒரு பக்கமும், புதுயுகம் சேனலில் ‘சண்டே சண்டை’ மற்றும் ‘மனம் திரும்புதே’ நிகழ்ச்சிகளை வழங்குவது மட்டுமல்லாமல், சீனியர் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராகவும் இருக்கும் செல்வக்குமார், சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிச் சொல்கிறார்.

“சினிமாவைப் பொறுத்தவரை இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற அறியப்பட்ட பணிகள் தாண்டி, படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல்... அனுபவத்தின் அடிப்படையில் படிக்காதவர்களும் சாதிக்கவல்ல வேலைவாய்ப்புகள் பல இருக்கின்றன.

காஸ்டிங் டைரக்டர்

டத்துக்கான கதைக்களம் உருவானதும், முதல் வேலையாக கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர், நடிகைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் காஸ்ட்டிங் டைரக்டரின் வேலை. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மற்றும் தனியார் இன்ஸ்டிட்யூட்களில் இதற்கான சர்டிஃபிகேட் மற்றும் டிப்ளோமா கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன. சம்பளம்: ஒரு படத்துக்கு ஒப்பந்தத்தின் பேரில் 50,000 முதல் லட்சங்கள் வரை, நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

ஃபிலிம் பட்ஜெட்டிங் டீம்

கிராமத்துச் சூழலில் ஒரு படம் எடுக்க, சென்னையில் இருந்து மொத்தப் படக்குழுவும் கிராமம் சென்று, சாப்பாடு, தங்குமிடம் என்று செலவழித்து ஷூட் செய்தால், பட்ஜெட் எகிறிவிடும். அதனால், கிராமம் போல சென்னைக்கு அருகிலேயே இடம் தேடிப் பிடித்து, அல்லது செட் போட்டு பட்ஜெட்டைக் குறைக்கலாம். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் செலவைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகள் எடுக்க, பட்ஜெட் போடுவதில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் நிதித்துறை சார்ந்து படித்தவர்களின் தேவை அதிகம். சம்பளம்: மூன்று மாத படப்பிடிப்புக்கு மாதம் 1,00,000 -  2,00,000 வரை. அல்லது ஒரே பேமென்டாக 3,00,000 - 5,00,000 என, நிறுவனத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

மார்க்கெட்டிங் அண்ட் ரிசர்ச் டீம்

திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கார், கூல் டிரிங்க்ஸ், சாக்லேட் போன்றவை முக்கிய ஸீன்களில் இடம்பெறும். திரைப்படத்தின் வழியாக செய்யும் இந்த விளம்பரத்துக்குப் பெயர், ‘இன் ஃபிலிம் அட்வர்டைஸ்மென்ட்’. இதற்காக அந்தந்த நிறுவனங்களை அணுகி வாய்ப்பு கொணர்வதுதான் இதில் வேலை. இந்த வேலையில் டார்கெட்டும் உண்டு, வேலைக்கு டிமாண்டும் உண்டு. சம்பளம்: லட்சங்களில்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

ட வேலைகள் ஆரம்பித்ததுமே மொபைல், சமூக வலைதளங்கள், படத்துக்கான பிரத்யேக வெப்பேஜ் என்று டிஜிட்டல் உலகம் மூலமாக விளம்பரங்களை மேற்கொள்ளும் வேலைகள் இதில் அடங்கும். சம்பளம்: ஒரு படத்துக்கு 15,000 - 50,000 வரை.

இன்னும் லொக்கேஷன் பார்ப்பவர், டிஜிட்டல் இன்டர்ஃபேஸ், விஷுவல் எஃபெக்ட், அனிமேட்டர், கம்போஸிட்டர், காஸ்ட்யூம் டிசைனர் என பல வேலைவாய்ப்புகள் மீடியாவில் கொட்டிக்கிடக் கின்றன.

சேனல்களின் பெருக்கம், தொலைக்காட்சித் துறையில் வேலைவாய்ப்பு வாசலை அகலத் திறந்துவிட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். 

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

சீனியர் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் (சி.இ.ஓ)

வரின் வேலை எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்களைக் கண்காணித்து வேலையை சீராக முடிப்பது. சம்பளம்: 70,000 முதல் ஆரம்பம். அதற்காக எடுத்தவுடன் சி.இ.ஓ ஆகிவிட முடியாது. திறமையும் கடின உழைப்பும் இருப்பவர்கள் இந்த உயரத்தை உங்கள் இலக்காக்கி சேனலில் உழைப்பைக் கொடுங்கள்.

எக்ஸிக்யூட்டிவ் புரோகிராம் புரொட்யூசர்

ரு நிகழ்ச்சி நடத்துவதற்கான பட்ஜெட் நிர்ணயிப்பது, அந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர்களை வைத்து எப்படி நடத்துவது என மேற்பார்வை பார்ப்பது இந்தப் பணியின் இயல்பு. சம்பளம்: 50,000 முதல்.

புரோகிராம் புரொட்யூசர்

ரு நிகழ்ச்சிக்கான கான்செப்ட்டில் இருந்து, தொகுப்பாளர், லொகேஷன், செலவு என    ஏ டு இஸட் வேலைகளை இந்த புரோகிராம் புரொட்யூசர் முடிவெடுப்பார். சம்பளம்: 25,000 முதல்.

ஆர்ட் டைரக்டர்

ஸ்டுடியோ அல்லது அவுட்டோர் ஷூட் எதுவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கான செட் மற்றும் சூழலை உருவாக்குவது இவரின் வேலை. சம்பளம்: அனுபவம் மற்றும் திறனைப் பொறுத்து 75,000 முதல்.

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

டி.ஓ.பி  (டைரக்டர் ஆஃப் போட்டோகிராஃபி)

ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் லைட்டிங் செட் செய்வது, கேமராக்களை ஃபிக்ஸ் செய்வது, கேமராமேன்களை வழி நடத்துவது எல்லாமே டி.ஓ.பி-யின் வேலை. டிமாண்ட் இருக்கும் பணி இது. சம்பளம்: 75,000 முதல்.

சவுண்ட் இன்ஜினீயர்

மைக்கில் ஆரம்பித்து சவுண்ட் ரெக்கார்டிங் வரை ஒரு நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவு தொடர்பான பொறுப்புகள் அனைத்தும் இவர் வேலை. சம்பளம்: 12,000-த்தில் ஆரம்பம்.

ஆன்லைன் எடிட்டர்

நிகழ்ச்சி ஷூட் செய்யும்போதே எடிட் செய்பவர். இதனால் மொத்த நிகழ்ச்சியையும் எடிட் செய்யும் எடிட்டரின் வேலைப்பளு குறையும், நேரமும் மிச்சமாகும். சம்பளம் - 5 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம் (ஒரு நிகழ்ச்சிக்கு).

மேற்சொன்ன வேலைகளுக்கு எல்லாம் அசிஸ்டென்ட் புரொட்யூசர், அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டர், அசிஸ்டென்ட் டி.ஓ.பி என ‘அசிஸ்டென்ட்’ பணி வாய்ப்புகளும் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் அடிப்படைத் தகுதியாக விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பும், தவிர, மீடியா சார்ந்த தொழில்நுட்ப கோர்ஸ்களையும் படிக்கலாம். மேலும், சேனல் ஒரு ஆபீஸ் செட்டப் என்பதால் இங்கும் அட்மின், கஸ்டமர் சப்போர்ட், ஃபைனான்ஸ் டிபார்ட்மென்ட், ஹெச்.ஆர், மார்க்கெட்டிங் போன்ற வேலைவாய்ப்புகளும் உள்ளன.’’

டிக் செய்யுங்கள் டிசைனிங்!

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள `இமேஜ் இன்ஸ்டிட்யூட்'டின் மேனேஜர் கீதா, டிசைனிங் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிச் சொல்கிறார்.

“டிசைனிங் ஏரியாவைப் பொறுத்தவரை கிராஃபிக் டிசைனிங், வெப் டிசைனிங், 3டி அனிமேஷன், இன்டீரியர் டிசைனிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என நிறைய ஏரியாக்கள் உண்டு.

கிராஃபிக் டிசைனிங்

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

கிராஃபிக் டிசைனர்களுக்கு வேலைவாய்ப்பு டி. டி.பி சென்டர்களில்தான் என்பது தவறான கான்செப்ட். இதில் விஷுவலைசர், கிராஃபிக் டிசைனர், டச் அப் ஆர்ட்டிஸ்ட், டிஜிட்டல் இல்லஸ்ட்ரேட்டர் என நிறைய பிரிவுகள் உண்டு. இவர்களுக்கு அட்வர்டைசிங் ஏஜென்சி, பப்ளிஷிங் கம்பெனி, டிசைன் ஸ்டுடியோ போன்றவற்றில் வேலைவாய்ப்பு உண்டு. சம்பளம்: 8,000 - 80,000 வரை.

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

விஷுவல் எஃபெக்ட்

சினிமாக்களில் ஹீரோ உயரத்திலிருந்து குதிப்பது போல் காட்சி எடுக்கும்போது, ஹீரோவை கயிறு கட்டி குதிக்க விடுவார்கள். ஆனால், பின்பக்கம் பச்சை நிற பேக் ட்ராப் செட் செய்து எடுத்த காட்சியை மலையிலிருந்து குதிப்பது போன்ற எஃபெக்ட்டில் உருவாக்கித் தருவது போன்ற வேலைகள், விஷுவல் எஃபெக்டருக்கு உரியது. அதுவே, பகல் காட்சியை இரவு போலக் காட்டும் வேலைகள், ஸ்பெஷல் எஃபெக்ட். சம்பளம்: 8,000 - 70,000 வரை.

வெப் டிசைனிங்

தில் வெப் டிசைனர், யு.ஐ டிசைனர், ஃபிளாஷ் அனிமேட்டர் என பல பிரிவுகள் உள்ளன. ஆன்லைன் ஷாப்பிங் ஏரியாவில் இவர்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. வெப் டிசைனர் என்பவர், ஒரு நிறுவனத்தின் வெப்சைட்டை பார்வையாளர்கள் பார்த்ததும் அவர்களுக்கு பிடிக்கும் அளவுக்கு தலைப்பில் இருந்து லிங்க் பட்டன்கள் வரை ஏ டு இஸட் கவர்ச்சிகரமாக டிசைன் செய்பவர். சம்பளம்: 12,000 - 1,00,000 வரை. யு.ஐ டிசைனர் என்பவர், வெப் டிசைனர் தயார் செய்யும் வெப்சைட்டை பார்வையாளர்கள் சுலபமாக கையாளும் விதத்தில் ‘யூஸர் ஃப்ரெண்ட்லி’யாக ரெடி செய்பவர். சம்பளம்: 8,000 -  50,000 வரை. ஃபிளாஷ் அனிமேட்டர், 2டி அனிமேஷன், குழந்தைகளுக்கான ரைம்ஸ் வீடியோ போன்றவற்றுக்கு அனிமேஷன் செய்பவர். வெப்சைட்டுக்கு சின்னச் சின்ன கார்ட்டூன் கேரக்டர், எழுத்துக்களுக்கு அனிமேஷன் போன்ற வேலைகள் இருக்கும். சம்பளம் 8,000 - 70,000 வரை.

3டி அனிமேஷன்

3டி அனிமேஷனுக்கு, சினிமா மற்றும் விளம்பரத்துறையில் தேவை அதிகம். இதில் ரிக்கிங், லைட்டிங், மாடலர், 3டி அனிமேட்டர் என நான்கு விதமான வேலை வாய்ப்புகள் உண்டு. ஒரு வீடு கட்டுவதற்கு முன் கட்டுமானக் கம்பிகள் எழுப்புவது போல, 3டி-யில் ஒரு மனிதனையோ மானையோ உருவாக்குவதற்கு முன், அதன் அனாடமிக்காக எலும்புக்கூட்டை உருவாக்குவதுதான் ரிக்கிங். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும், சூழலைப் பொறுத்து வெளிச்ச அமைப்புகள் தயார் செய்வது லைட்டிங். ஒரு கேரக்டரை உருவாக்குவது மாடலருடைய வேலை. மாடலர் ரெடி செய்த கேரக்டரை நடப்பது, ஓடுவது, குதிப்பது, சிரிப்பது என நகரச் செய்வது 3டி அனிமேட்டரின் வேலை. சம்பளம்: எல்லா பிரிவுகளிலும் 10,000 - 1,00,000 வரை சம்பளம் கிடைக்கும்.

இன்டீரியர் டிசைனிங்

டிசைனிங் துறையில் வளர்ந்து வரும் இந்தப் பிரிவிலும், பல கிளைப்பிரிவுகள் உண்டு. செட் டிசைனர் - ஒரு ஆபீஸ் செட்டப், சினிமா செட் வொர்க் இப்படி ஒரு முன்மாதிரி செட்டப்பை டிசைன் செய்வது இவருடைய வேலை. ஃபர்னிச்சர் டிசைனர் - எந்த இடத்துக்கு என்ன மாதிரியான ஃபர்னிச்சர் செட் செய்யலாம், அதன் அளவு, டிசைன், நிறம், மெட்டீரியல் என எல்லாவற்றையும் முடிவெடுப்பது இவர்தான். இன்டீரியர் டிசைனர் - ஒரு வீட்டின், அலுவலகத்தின், பெரிய ஹோட்டல்களின் இன்டீரியரை உருவாக்குபவர். இன்டீரியர் டெகரேட்டர் - இவர் விழாக்களுக்கு டிசைன் செய்பவர்.சம்பளம்: ஆர்டர், பட்ஜெட்டைப் பொறுத்து - 50,000ல் இருந்து.

ஃபேஷன் டெக்னாலஜி வரவேற்கிறது!

பேஷன் துறை பற்றி சொல்கிறார் கோவையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ருத்ரா.

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!
சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

பி.எஸ்ஸி ஃபேஷன் டிசைனிங், பிஎஸ்ஸி காஸ்ட்யூம் டிசைனிங், எம்.எஸ்ஸி ஃபேஷன் ரீடெய்லிங், எம்.எஸ்ஸி ஃபேஷன் மெர்ச்சன்டைசிங், பி.டெக் ஃபேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான படிப்புகள் உள்ளன. இத்தகைய படிப்புகளை முடித்தவர்கள் ஃபேஷன் துறையில் ஷோரூம்களில் ஸ்டோர் மேனேஜராகச் செல்லலாம்; ஒரு டிசைனருக்கு அசிஸ்டென்ட் ஆகச் சேர்ந்து நன்றாக பயிற்சி பெற்ற பின், தனியாக ஒரு பொட்டீக் ஆரம்பிக்கலாம். தற்போது ஆண்களுக்கான பொட்டீக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால் அதில் கவனம் செலுத்தலாம். மேலும் நகை கேலரி நிறுவுவது, பிரபலமான ஷோரூம்கள் அல்லது பிராண்ட்களில் டிசைனர் பணி வாய்ப்புகள், ஆடை இம்போர்ட், எக்ஸ்போர்ட், ஃபேஷன் ஷோக்கள் நடத்துவது, திரைப்படத்துறை என்று இது படர்ந்த ஏரியா.

ஃபேஷன் டிசைனிங்கில் ஆடைகள் மட்டுமல்ல, இன்டீரியர் டிசைனிங், நகை வடிவமைப்பு, சிலிப்பர் டிசைனிங், விஷுவல் மெர்சன்டைசர் (ஒரு ஷோரூமில் ஆடைகள் எப்படி அடுக்கியிருக்க வேண்டும், ஆக்ஸசரீஸ் எங்கு இருக்க வேண்டும் என்று டிசைன் செய்து கொடுப்பவர்கள்) என பணி வாய்ப்புகள் நிறைய. இதற்கான கோர்ஸில் ஹேர் டிரெஸ்ஸிங் என்பதை ஒரு பிரிவாகப் படிப்பார்கள். அதிலேயே மேலதிகப் பயிற்சி முடித்து, ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகலாம். சம்பளம் 10 ஆயிரத்தில் தொடங்கி பணி செய்யும் இடத்துக்கு ஏற்றவாறு வேறுபடும்.

இசை தரும் எதிர்காலம்!

சையில் என்னென்ன எதிர்காலம் இருக்கிறது என்பது பற்றி சொல்கிறார் பின்னணி பாடகி ஜனனி.

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!
சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

சிறுவயது முதலே கர்னாடக சங்கீதம் கற்று வருபவர்கள், இசையில் டிகிரி பெற்றால் (பி.ஏ., மியூசிக், எம்.ஏ., மியூசிக், எம்ஃபில், பி.ஹெச்டி)  இசைக்கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றலாம். அல்லது தனியாக ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்து வகுப்பெடுக்கலாம். அல்லது ஒரு ட்ரூப் உண்டாக்கி இசைக்கச்சேரிகள் நடத்தலாம். மேலும் ஆடியோ டிசைனிங், சவுண்ட் இன்ஜினீயரிங் போன்ற டிப்ளோமா படிப்புகள்  ஆடியோ ஸ்டுடியோக்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்தப் பிரிவுகளில் எல்லாம் வேலைவாய்ப்புகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.

மீடியாவில் திரைப்படங்கள், ஆல்பங்கள் என லைவ் சவுண்டு தேவைப்படும் இடங்களில், அவற்றை சாஃப்ட்வேர் உதவியுடன் புதுப்புது சத்தங்களாக நீங்களே உருவாக்கலாம். சினிமா, சீரியல், விளம்பரங்கள், குறும்படங்களில் பின்னணி, கோரஸ் பாடலாம். விளம்பரப்படங்கள், குறும்படங்கள், டாக்குமென்டரி ஏரியாக்களிலும் ஆடியோ பிரிவுகளில் பணியாற்றலாம். தனியாக ஆல்பங்கள் தயாரிக்கலாம். விளம்பரங்களுக்கு ஜிங்கிள்கள் உருவாக்கித் தரலாம்.

மியூசிக் மேனேஜர், மியூசிக் புரொட்யூசராக நிலைநிறுத்திக்கொள்ளலாம். பெரிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளை புரமோட் செய்யலாம்.

இசையை உருவாக்குவது மட்டுமின்றி விளம்பரம், மார்க்கெட்டிங், காப்பிரைட் என்றும் ஈடுபடலாம். இசைக் கருவிகள் விற்பனை செய்யலாம். தற்போது மியூசிக் தெரபி பிரபலமாகி வருகிறது. மியூசிக் ஜர்னலிசம் என்ற துறையும் இருக்கிறது. இவர்கள் பத்திரிகைகளில் இசை தொடர்பான கட்டுரைகள், விமர்சனங்கள் எழுத பணிவாய்ப்பு உண்டு. சம்பளம் அந்தந்த இடத்தைப்பொறுத்து  நிர்ணயிக்கப்படுகிறது.

நல்ல சம்பளம்... கேட்டரிங் துறையில்!

கேட்டரிங் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிச் சொல்கிறார் ‘செஃப்’ தாமு!

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!
சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

“கேட்டரிங்கை பொறுத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் மூன்று வருட பி.எஸ்ஸி., கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிப்பதுதான் வேலைவாய்ப்புக்குச் சிறந்தது. அப்போதுதான் பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை போன்றவை சாத்தியமாகும். படிப்பை முடித்தவுடன் பணியில் சேர முடியாது. முதலில் பயிற்சிக் காலம். கிச்சன், ஃபுட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ், ஹவுஸ்கீப்பிங், ஃப்ரன்ட் ஆபீஸ் போன்ற நான்கு டிபார்ட்மென்ட்களில், தேர்ந்தெடுக்கும் பிரிவில் ஒன்று, இரண்டு வருடப் பயிற்சி. பிறகு, பணி. 

ஃபுட் அண்ட் பிவரேஜ் சர்வீஸில் கேட்டரிங் அசிஸ்டென்ட், மேனேஜ்மென்ட் டிரெய்னி போன்ற பணிகள் ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும். கிச்சன் பிரிவில் கிச்சன் ஆபரேஷன் டிரெய்னியாக எடுப்பார்கள். இந்தப் பயிற்சியில் 10,000 வரை சம்பளம் கிடைக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் பணிவாய்ப்புகள் உண்டு. ஹவுஸ்கீப்பிங்கை பொறுத்தவரை நல்ல அனுபவம் இருந்தால், பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் மேனேஜர் நிலை வரை உயரலாம். நல்ல திறமை இருந்தால் உயர் பதவிகளுக்கு செல்லலாம்.

பி.எஸ்ஸி., கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்த பின் எம்.பி.ஏ-வில் ஏதாவது ஒரு பிரிவு எடுத்துப் படிக்கலாம். பி.ஹெச்டி-யும் முடித்தால் கேட்டரிங் கல்லூரியில் பிரின்ஸிபலாக பணியாற்றலாம். மேலும், கேட்டரிங் டீச்சிங் துறையில் பணிபுரியவும் முதுநிலைப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கேட்டரிங் படிப்புகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளும் உண்டு. ஏர்லைன்ஸ், நேவி, ரயில்வே, சுற்றுலாத் துறை போன்ற அரசுத் துறைகளுக்கான கேட்டரிங் பணியிடங்கள், அரசுத் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். இங்கெல்லாம் பணியில் முன்னேற ஆங்கில அறிவும், கடின உழைப்பும் அவசியம்.

ஸ்கல்ப்சர் துறை... ஃபுல்டைம், ஃப்ரீலான்ஸ் உங்கள் சாய்ஸ்!

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!
சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி  இன்ஸ்ட்ரக்டர் சதீஷ்: கிரியேட்டிவான உருவங்களை உருவாக்கும் இந்த துறையில் இளங்கலை, முதுகலை படிப்புகள் உள்ளன. சுற்றுலாதலங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், இன்டீரியர் டெகரேட்டர் போன்ற இடங்களில் புராஜெக்ட்டுகள் பெற்றுப் பணிபுரிவதால்,  விரும்பினால் ஃபுல் டைமாகவும், அல்லது குறுகிய காலத்துக்குள் வேலையை முடிக்கும் திறன் உள்ளவர்கள் பார்ட் டைம் ஆகவும் பணியாற்றலாம். மேலும் ஸ்கல்ப்சர் ஷோ நடத்துவது, ஆர்ட் டைரக்‌ஷன் துறை, அலங்காரப் பொருட்கள் டிசைனிங், ஃபர்னிச்சர்களுக்கு புது வடிவம் கொடுப்பது, சினிமா மற்றும் விளம்பரத்துறையில் செட் அமைத்துக் கொடுப்பது, ஆபரண வடிவமைப்பு என்று இதற்கான வாசல்கள் நிறைய.

அவர்கள் செய்யும் பொருளைப் பொறுத்து விலை மாறுபடும்.

பெயின்ட்டிங்... பேமன்ட்!

சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் அருளரசன்: ஓவியத்தில் ஆர்வமிருக்கும் மாணவர்கள் அது தொடர்பான  இளங்கலை, முதுகலை, எம்.ஃபில், பி.ஹெச்டி படிப்புகள் படித்து அனிமேஷன், 2டி, 3டி, மாயா சாஃப்ட்வேர் பயன்படுத்தும்போது இவர்களின் பங்கு டிசைனிங், கலர் காம்பினேஷனுக்குத் தேவைப்படும். தனியார் நிறுவனங்களுக்கு டிசைனர்களாகச் செல்லலாம். இல்லஸ்ட் ரேட்டர்களாகப் பணியாற்றலாம். ஸ்டோரி போர்டு ஆர்ட்டிஸ்ட்கள் வேலை உண்டு. கேலரி, எக்ஸிபிஷன்களுக்கு பெயின்ட்டிங் கொடுக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் டிராயிங், பெயின்ட்டிங் வகுப்புகள் எடுக்கலாம். வீடுகள், கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு கலர் செலக்‌ஷன் ஆர்டர் எடுத்துச் செய்யலாம். அலங்காரப் பொருட்களில் பெயின்ட்டிங் செய்து விற் கலாம். டிசைன் அப்ரூவ்மென்ட் சார்ந்து பணியாற்றலாம்.

பேராசிரியராகப் பணியாற்றலாம். இந்த பணிக்கு முதுகலை படித்திருக்க வேண்டும். சம்பளம் ஆரம்பம் 15 ஆயிரம்.

கே.அபிநயா,இந்துலேகா.சி,ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism