Published:Updated:

`செவி கொடு சமூகமே!’உருகவைக்கும் உரத்த குரல்

`செவி கொடு சமூகமே!’உருகவைக்கும் உரத்த குரல்

`செவி கொடு சமூகமே!’உருகவைக்கும் உரத்த குரல்

`செவி கொடு சமூகமே!’உருகவைக்கும் உரத்த குரல்

Published:Updated:

‘‘பார்வையற்றவர்களுக்கு கருவிழி அடையாளம் எடுக்க முடியாது என்பதாலும், தொழுநோயாளிகளுக்குக் கட்டைவிரல் பதிவு எடுக்க முடியாது என்பதாலும் இவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதே இல்லை!’’

`செவி கொடு சமூகமே!’உருகவைக்கும் உரத்த குரல்

- இதைக் கேட்பதற்கே வேதனையாக இருக்கிறதுதானே! அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதார் அட்டைக்கே இப்படி என்றால், மற்றத் தேவைகளுக்கு?

‘அனைத்து வகை மாற்றுத்திறன் மகளிர் மேம்பாட்டு அமைப்பு’ சார்பில், சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட, பெண்களுக்கான மாநில மாநாடு மற்றும் விழிப்பு உணர்வு பேரணியில், இத்தகைய வேதனைகளை மாற்றுத்திறனாளி பெண்கள் பட்டியலிட்டு பகிர்ந்தனர்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட மாநாட்டில், ‘‘மனவளர்ச்சி குன்றிய குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புகார் கொடுக்கச் சென்றால், தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று புகாரை வாங்கவே மறுக்கின்றனர். காதுகேட்காத, வாய்பேச முடியாத பெண்கள் பாதிக்கப்பட்டால், அவர்களின் சைகை மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று புகாரை ஏற்க மறுக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்காக சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய சிறப்பு கொள்கை வேண்டும்’’ என்று வலியுறுத்திய அமைப்பின் செயலாளர் அருணா,

‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்குவதிலும், மற்றவர்களைவிட அதிக நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில், எங்களுக்கு நிபந்தனைகளை தளர்த்த வேண்டுமே தவிர, பெருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகளால் தொழிலை வெற்றிகரமாக நடத்தி கடனை அடைக்க முடியாது என்று இவர்களாகவே முடிவு செய்துவிடுவதால், திறமையும் தகுதியும் இருந்தும் நிராகரிக்கப்படுகிறோம்’’ என்று ஆதங்கப்பட்டார்.

ஆதார் அட்டை பற்றி வேதனையுடன் பகிர்ந்த அமைப்பின் மதுரைக் கிளை செயலாளர் மோகனப்பிரியா, ‘‘பார்வையற்றோர் மற்றும் தொழுநோயாளிகளுக்கு ஆதார் அட்டை வழங்க மாற்று ஏற்பாட்டை அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்ததோடு, ‘‘தேசிய அளவிலான போட்டிகளில் எங்களில் பலருக்கும் பங்கேற்கும் வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது. அதை அதிகப்படுத்தினால் திறமை படைத்த மாற்றுத்திறனாளி மகளிர் பலரும் தங்களுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமையும்’’ என்றும் சொன்னார்.

இதெல்லாம் உரியவர்களின் செவிகளுக்கு சென்றடைய வேண்டும்!

வே.கிருஷ்ணவேணி, ந.ஆஷிகா  படம்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism