Published:Updated:

சுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்!

மலைக்க வைக்கும் மாற்றுத்திறனாளி மாணவிகள்

சுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்!

மலைக்க வைக்கும் மாற்றுத்திறனாளி மாணவிகள்

Published:Updated:

ன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு `சபாஷ்’ சொல்லிவிட்டோம். ஆனால், கொண்டாட மறந்துபோன மாற்றுத்திறனாளி சாதனையாளர்களையும் சந்திப்பது கடமை. தாங்கள் எடுத்த வெற்றி மதிப்பெண்களை வாயால் சொல்லவோ, கண்ணால் பார்க்கவோகூட முடியாத, சென்னை, சிறுமலர் காது கேளாதோர் மற்றும் பார்வை குறைபாடுள்ளோர் பள்ளி மாணவிகள் பேசுகிறார்கள் உங்களுடன்!

சுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்!

புவனேஸ்வரி (1118 / 1200 மதிப்பெண்கள்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பத்தாம் வகுப்புல தமிழ்வழியில் படிச்ச பார்வையற்ற மாணவர்களில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கினேன். இப்ப ப்ளஸ் டூ-வில் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கியிருக்கேன். வரலாறு பிரிவு எடுத்துப் படிச்சேன். பிரெய்ல் முறையில் படிக்கிறது கஷ்டம்தான். ஆனாலும் அது மட்டும்தான் வழிங்கிறப்போ, பழகிப்போயிருச்சு. பரீட்சை நேரத்துல மட்டும் யாராச்சும் படிச்சுக் காட்டினா சீக்கிரமா முடிச்சிடலாமேனு தோணும். கூலி வேலைக்குப் போற அப்பா, வீட்டு வேலை செய்யுற அம்மா ரெண்டு பேரும் என்னை நம்பிக்கையோட படிக்க வைக்கிறாங்க. எனக்கான அரசு சலுகைகள் எதையாச்சும் அவங்க வாங்கப்போனா, பல பேரோட காலைப் பிடிக்கிறதோட, கையையும் நிரப்ப வேண்டியதா இருக்கு. நான் பேங்க் ஆபீசரா வேலைக்குப் போய், அவங்க ரெண்டு பேரையும் நல்லா பாத்துக்கணும்!’’

சுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்!

அபர்ணா, (1077 / 1200 மதிப்பெண்கள்)

‘‘ஆங்கில வழியில் படிச்ச பார்வையற்ற மாணவர்களில் நான் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண்ணும், இப்போ ப்ளஸ் டூ-வில் பள்ளியில் இரண்டா வது மதிப்பெண்ணும் வாங்கியிருக்கேன். விதியை நினைச்சு எப்பவும் நான் வருந்தறதில்ல. இனி என்னனுதான் யோசிப்பேன். அதேபோல, படிக்கிறது நல்ல மார்க் வாங்கனு நினைச்சுப் படிக்காம, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிற சுவாரஸ்யமாவே படிப்பை நினைப்பேன். எங்க அப்பா, அம்மா... சுயபச்சா தாபத்தைவிட, தன்னம்பிக்கையைத்தான் எனக்குக் கொடுத்து வளர்த்திருக்காங்க. பி.ஏ., ஆங்கிலம் படிச்சு, சிவில் சர்வீஸ் எக்ஸாம்ஸ் எழுதணும்!’’

சுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்!

சங்கீதப்பிரியா, (965 / 1000 மதிப்பெண்கள்)

‘‘பத்தாம் வகுப்பில் செவிக்குறைபாடு உள்ள மாணவர்களில் மாநில அளவில் முதல் மதிப்பெண் வாங்கினேன். ப்ளஸ் டூ-வில் ஆயிர‌த்துக்கு 965 மார்க் எடுத்து ப‌ள்ளியில‌ முதல் மாண‌வியா வ‌ந்திருக்கேன். நான் மட்டுமில்ல, எங்க வீட்டுல எங்கப்பா, அம்மா, தம்பினு யாருக்குமே காது கேட்காது; வாய் பேச முடியாது. எங்க தாத்தா சுதர்சனம்தான் எங்களை எல்லாம் பார்த்துக்கிறார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நான் படிப்புக்காக சென்னையில ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். தீபாவளி, பொங்கல் லீவுக்குக்கூட ஊருக்குப் போகாம படிப்பேன். எங்க குடும்பத்துல யாருமே படிக்கல. நான் என்ன குரூப் எடுத்துப் படிச்சேன்னுகூட அவங்களுக்குத் தெரியாது. ‘அந்தக் குடும்பத்துக்கே வாய் பேச வராதுனு கேலி பேசினவங்களை எல்லாம் இப்போ நீ வாங்கியிருக்கும் மார்க் வாயடைக்க வெச்சிருச்சு!’னு எங்க தாத்தா சந்தோஷப்பட்டார். பி.காம் படிச்சு பேங்க் வேலைக்குப் போகணும். கூலி வேலை பண்றதெல்லாம் எங்கப்பாவோட போகணும்!’’

சுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்!

புனிதவதி (944 / 1000 மதிப்பெண்கள்)

‘‘பத்தாம் வகுப்பில் செவிக்குறைபாடு உள்ள‌ மாண‌வ‌ர்க‌ளில்  மாநிலத்தில் இரண்டாம் மதிப்பெண்ணும், ப்ளஸ் டூ-வில் பள்ளியில் இரண்டாமிடமும் வாங்கி இருக்கேன். வணிகவியலில் சென்டம் அடிச்சிருக்கேன். ஆனா, காமர்ஸில் சென்ட்டம் மிஸ் ஆனது பெரிய ஏமாற்றம். சிவகாசிதான் எங்களுக்கு சொந்த ஊரு. என் படிப்புக்காக குடும்பமே சென்னை வந்துச்சு. அப்பாவுக்கு பிரின்ட்டிங் பிரஸ்ல வேலை. பி.காம் படிச்சு சி.ஏ. ஆகணும்னு ஆசை!’’

சுயபச்சாதாபம் நோ... தன்னம்பிக்கை யெஸ்!

மீனா (924 / 1000 மதிப்பெண்கள்)

‘‘பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் செவி குறைபாடு உள்ள மாணவர்க‌ளில் மாநிலத்தில் மூன்றாம் இட‌ம்  வாங்கினேன். இப்போ ப்ளஸ் டூ-வில் பள்ளியில் மூன்றாமிடம். படிப்பு மட்டுமில்ல, விளையாட்டு, ஓவியம், நடனம்னு எல்லாத்துலயும் கலக்குவேன். குடும்பக் கஷ்டத்தால என் படிப்புக்குனு எங்கப்பா, அம்மாவால சிறப்பா எதுவும் செய்ய முடிஞ்சதில்ல. ஆனா, நான் பத்தாம் வகுப்புல மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கினதும், என்னைப் படிக்க வைக்கிறதுல ரொம்ப அக்கறை எடுத்துக்குறாங்க. சி.ஏ. ஆகணுங்கிறது என் எதிர்கால லட்சியம்!’’ (சங்கீதப்பிரியா, புனிதவதி மற்றும் மீனா ஆகியோர் சைகைகள் மூலமாகப் பேச, அவர்களின் பெற்றோர் பேச்சைப் புரிந்துகொள்ள உதவினார்கள்).

ஏன் இந்த பாரபட்சம்?

டியூஷன் பக்கம்கூடப் போகாத இந்தப் பெண்கள் அரசிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். ‘‘எல்லா மாணவர்கள் மாதிரிதான் நாங்களும் தேர்வு எழுதுறோம். தேர்வு முடிவுகள் நாளப்போ, மொழி வாரியா, மாவட்ட வாரியா, ஏன் சாதி அடிப்படையில் கூட ரேங்க் வரிசையை சொல்லிடறாங்க. ஆனா, மாற்றுத்திறனாளி மாணவர்களின் ரேங்க் லிஸ்ட்டை மட்டும் ‘தாமதமாதான் கிடைக்கும்’னு சொல்றாங்க. எங்க சாதனைகளை யாரும் கொண்டாடத் தேவையில்ல; அறிவிக்கக்கூடவா தகுதியில்லாதவங்க நாங்க?!’’

க.தனலட்சுமி படங்கள்:ச.வெங்கடேசன், தே.சிலம்பரசன், பா.அருண் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism