Published:Updated:

பார்வை இல்லை மனபலம் இருக்கிறது!

பார்வை இல்லை மனபலம் இருக்கிறது!

பார்வை இல்லை மனபலம் இருக்கிறது!

பார்வை இல்லை மனபலம் இருக்கிறது!

Published:Updated:

“கஷ்டங்கள், சிரமங்கள், தடைகள், தோல்விகள் இந்த வாழ்க்கையில் எல்லோருக்கும் பொது. அவற்றை மன உறுதியோடு தாண்டுறவங்களுக்கு வெற்றி நிச்சயம்!’’

பார்வை இல்லை மனபலம் இருக்கிறது!

ராதாபாய்... புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர். கவனிக்கத்தக்க செய்தி: இவர் ஒரு மாற்றுத்திறனாளி. கை, கால் நலமுடன் இருக்கும் ஒருவர், வெற்றியைத் தொட இந்த வாழ்க்கை வைத்திருக்கும் முட்டுக்கட்டைகளே பல. ஒரு மாற்றுத்திறனாளியாக இந்த உயரம் தொட்டிருக்கும் ராதாபாய், நிச்சயம் தலைவணங்க வேண்டியவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சொந்த ஊர் உசிலம்பட்டி. அப்பா தமிழாசிரியர். அம்மா இல்லத்தரசி. ரெண்டு அண்ணன்கள், மூணு அக்கானு வீட்டில் மொத்தம் ஆறு பிள்ளைங்க. கண்ணில்லாம பிறந்தாலும், இந்தக் கடைக்குட்டியைச் சுமையா நினைக்காம, சென்னை பூந்தமல்லியில இருக்கிற பார்வையற்றோர் பள்ளியில படிக்க வெச்சாங்க. எங்க அக்கா, அண்ணா எல்லோரும் ஒவ்வொரு பாடப்புத்தகத்தையும் கேசட்ல பதிவு செஞ்சு உதவுவாங்க. ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கினேன். ஆனா, அதுக்கு மேல படிக்க வைக்க வீட்டுல வசதியில்ல. `இனி நாம படிச்சு என்ன ஆகப்போகுது'னு திருச்சி, மன்னார்புரத்துல இருக்கிற விழி இழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்துல ஒரு கைத்தொழிலைக் கத்துக்கிட்டு பிழைச்சுக்கலாம்னு, அங்க போனேன்’’ எனும் ராதாபாய்க்கு, அங்கு கிடைத்திருக்கிறது அக்கறையான பற்றுக்கொடி.

‘‘அந்த இல்ல நிர்வாகி ப்ரியா தியோடர், என்னோட மதிப்பெண்களைப் பார்த்துட்டு, ‘நான் உன்னைப் படிக்க வைக்கிறேன்’னு சொல்லி, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில பி.யு.சி சேர்த்துவிட, அங்கேயும் முதல் மதிப்பெண் பெற்றேன். அப்புறம் அதே காலேஜ்ல பி.ஏ., ஃபர்ஸ்ட் கிளாஸ், எம்.ஏ., யுனிவர்சிட்டி செகண்ட் ரேங்க்னு படிப்பு தொடர்ந்துச்சு. பாரதிதாசன் பல்கலைக் கழகத்துல, பிஹெச்.டி செய்தேன். டாக்டர் பட்டம் பெற்ற தென் இந்தியாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற பெருமையோடு 91-ம் ஆண்டு, அதை முடிச்சேன். இதனால 94-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சிறப்புத் தகுதியின் அடிப்படையில வேலை கொடுத்தாங்க. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில பேராசிரியையா வேலைக்குச் சேர்ந்தேன்!’’ எனும் ராதாபாய், திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, மகள் பிரபாவர்ஷியுடன் வாழ்ந்து வருகிறார்.

‘‘என் மாணவிகளுக்குச் சொல்றதைதான் இப்போ சொல்றேன். கஷ்டங்கள், சிரமங்கள், தடைகள், தோல்விகள் இந்த வாழ்க்கையில் எல்லோருக்கும் பொது. அவற்றை மன உறுதியோடு தாண்டுறவங்களுக்கு வெற்றி நிச்சயம்!’’

- கம்பீரமாகக் கைகுலுக்குகிறார் ராதாபாய்!

வீ.மாணிக்கவாசகம் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism