Published:Updated:

"வாங்க... ரேஸ் போகலாம்!"

"வாங்க... ரேஸ் போகலாம்!"

"வாங்க... ரேஸ் போகலாம்!"

"வாங்க... ரேஸ் போகலாம்!"

Published:Updated:

‘‘சென்னையில பசங்க சேர்ந்து நிறைய ரேஸ் டீம் வெச்சிருக்காங்க. ஆனா, கேர்ள்ஸ் சேர்ந்து ரேஸ் டீம் வெச்சிருக்கிறது, நாங்க மட்டும்தான். பைக்கர் பேப்ஸ்  -  எங்க டீமோட பெயர்; வி ரைட் ஸ்மார்ட் அண்ட் சேஃப் - எங்க டீமின் மோட்டோ. எங்க டீமில் இப்போ ஆறு பேர் இருக்கோம். எங்களை அவள் விகடன்ல பார்த்துட்டு இன்னும் நிறைய பேர் கைகோப்பாங்கனு நம்புறோம்’’ - பெரிய பெரிய பைக்குகளில் அமர்ந்தவாறு பேசுகிறார்கள் சவுந்தரி என்ற சிண்டி, கீர்த்தி, பிரியா, ரிஹானா, பூரணி மற்றும் நிகிதா!

"வாங்க... ரேஸ் போகலாம்!"

‘‘பெரும்பாலும் பைக் ரைடர்ஸ் எல்லோரும் தங்களோட ஆனிவர்ஸரியைக் கொண்டாட, டீம்ல எல்லோரும் சேர்ந்து ரைடு போவாங்க. ஆனா, நாங்க எங்களோட முதல் வருட கொண்டாட்டத்தில் சந்தோஷத்தோட கொஞ்சம் சேவையும் இருக்க ஆசைப்பட்டோம். அதான் சென்னை மெரினா பீச்சில் ஆரம்பித்து திருவான்மியூரில் இருக்கும் `காக்கும் கரங்கள்’ மற்றும் பாரீஸில் இருக்கும் முதியோர் இல்லத்துக்கு ரைடு போய், அவங்களுக்கு எல்லாம் ஒருவேளை சாப்பாடு கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த உதவி மட்டுமில்ல, அப்போலோ மருத்துவமனையில் ரத்ததானம் செய்தது, சாலிகிராமத்தில் ஒரு பூங்காவை சுத்தம் செய்தது, பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைக்கு எதிரா ரைடு போனதுனு எங்க டீம் சார்பா சின்னச் சின்ன நல்ல விஷயங்கள் செய்திருக்கோம். எதுக்குமே ஸ்பான்சர் கிடையாது.

பைக் ரேஸில் பொண்ணுங்க அதிக அளவில் இல்லை. அப்படி ஆர்வத்துல வர்ற ஒண்ணு, ரெண்டு பேரும் ஜஸ்ட் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் வாங்கத்தான் நினைக்கிறாங்களே தவிர, பைக் ரேஸில் சாதிக்கணும் என்ற உந்துதல் இல்ல. ஃப்ரெண்ட்ஸ்... திறமையை வளர்த்துக்கோங்க. மோட்டார் ஸ்போர்ட்ஸ்ல ரேஸிங், ஸ்டன்ட்னு கலக்குங்க. இப்போ நம்ம தமிழ்ப் பொண்ணு அலீஷா அப்துல்லா, சர்வதேச அளவில் பைக் ரேஸிங்கில் இந்தியாவின் முகமா இருக்காங்க. அப்படி ஒரு ஸ்டாராகிற இலக்கோட பைக் ரேஸிங்க்குக்கு வாங்க... முன்பைவிட, இப்போ பெண் பைக் ரேஸர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்குது. வாங்க ரேஸ் போகலாம்!’’ - ஆறு பெண்களும் பைக் உறும உறும அழைத்தபோது, அட்டகாசமாக இருந்தது!

பைக் ரேஸ் என்றதும் நெரிசல் நிறைந்த சென்னை சாலைகளில் படுவேகமாக வாகனங்களில் செல்வோர் என்று நினைத்துவிடாதீர்கள். இவர்கள் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள டிராக்கில் மட்டுமே வேகமாக செல்வார்கள். மெரினா பீச்சில் இருந்து திருவான்மியூர் வரை மிதமாகவே பைக் ஓட்டிச்சென்றதாக அவர்கள் விளக்கம் தந்தது அப்ளாஸ்!

சியர்ஸ் கேர்ஸ்!

கே.அபிநயா  படம்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism