Published:Updated:

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

Published:Updated:

டுப்படியையும் ஆபீஸையும் மறக்கச் செய்து தோழிகளை ஆனந்தமாக்கும் அவள் விகடனின் ‘ஜாலி டே’ இந்த முறை நடந்தது... சிங்காரச் சென்னையில்! அவள் விகடனுடன், கோடையை குளிர்ச்சியாக்கும் குளுகுளு ‘சத்யா’வும் இணைந்து நடத்திய ‘ஜாலி டே’யை, பெண்களை பொன்னகையால் மிளிரச் செய்யும் ஜி.ஆர்.டி தங்கமாளிகையும், ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் தரும் ‘உதயம்’ பருப்பு நிறுவனமும் கைகோத்து மெருகேற்றின.

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

முன்தேர்வுப் போட்டிகள் கொளத்தூர் மற்றும் பெரியமேடு ஆகிய இடங்களில் நடக்க, ஜாலி டே நடந்த அரங்கம் கொளத்தூர், அன்னை ராஜம்மாள் பேலஸ்! கல்லூரி மாணவி வாலன்டினாவின் அசத்தலான வரவேற்பு நடனத்தை அடுத்து, தொகுப்பாளினி சுபாஷினி மேடையில் தோன்றியதும், “வர்ற தேர்தல்ல போட்டியிட்டா... பொண்ணுங்க ஓட்டு உங்களுக்குதாங்கோ!’’ என்று ஸ்வீட் சேட்டை செய்தனர் தோழிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழு நடனத்தில் நித்யாதேவி குழுவினர், பாட்டியை ஃபாரின் பியூட்டியாக்கி ஆடி ‘ஹேட்ஸ் ஆஃப்’ சொல்ல வைத்தனர். சின்னத்திரை நேயர்களின் செல்லம், ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் பெரிய பாப்பா சித்ரா, தோல் உரிக்கும் (பழத்தோட தோல்தான்!) போட்டி, ஆன் த ஸ்பாட் டான்ஸ் என சில போட்டிகளை கலகலவென நடத்தினார். அதில் ஹைலைட் ‘முத்தப் போட்டி’! டார்க் கலரில் லிப்ஸ்டிக் போட்டு, சார்ட் பேப்பரில் அழகாக, அதிகமாக முத்தம் கொடுக்கிறவர் வின்னர். ஒரே ‘உம்மா’ மழைதான்!

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

ஜோடி வளையல் மேளா, வினாடி-வினா, அவள் விகடன் குறித்த கேள்விகள், புதையல் பெட்டி என தோழிகளுக்கு விளையாட்டு உற்சாகங்களும், பரிசுகளும் குவிந்துகொண்டே இருந்தன. ‘அம்மா - பெண்’ போட்டியில், பால் புட்டியிலிருந்த ஜூஸை அடம்பிடிக்கும் குழந்தையாக மாறிப்போன தன் அம்மா பரமேஸ்வரியை சமாதானப்படுத்தி ஒரே நிமிடத்தில் குடிக்க வைத்த காயத்ரியின் கொஞ்சலில் நடுவர்களே உருகிவிட்டனர். ‘உல்டா புல்டா’ டான்ஸுக்கு மேடையில் ஆடியவர்களுக்குப் போட்டியாக கீழேயும் கேர்ள்ஸ் குத்து போட, அவர்களுக்குப் போட்டியாக இல்லத்தரசிகள் கும்மாங்குத்துக் குத்த... அதிர்ந்தது அரங்கம்!

மெகந்தி, வினாடி - வினா, ரங்கோலி, அடுப்பில்லா சமையல், ஆட்டம் பாட்டம் என எல்லா போட்டிகளிலும் பரிசுகள் வாங்கிக் குவித்தனர்  வாசகிகள். அவர்களை மேலும் திக்குமுக்காட வைக்கும் வகையில், சத்யா நிறுவனம் தொடர்பான கேள்விக்கு பதில் சொல்லிய தேவிபாலாவுக்கு, நிறுவனத்தின் ஏ.ஜி.எம் காந்தி 2,500 ரூபாய்க்கான பரிசை வழங்க, அதிக வளையல்களை சரியாக ஜோடி சேர்த்த நித்யாவுக்கு பரிசை வழங்கினார் ஜி.ஆர்.டி-யின் கிளை மேலாளர் ராஜன்.

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

சத்யா நிறுவனம் அறிவித்திருந்த பம்பர் பரிசான வாஷிங் மெஷினுக்கான அதிர்ஷ்டசாலி ‘வடபழனியைச் சேர்ந்த ஷர்புன்னிசா பேகம்’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, துள்ளி ஓடி வந்தார் அவர் மேடைக்கு! ‘‘ஜாலியா இருக்கும் வாடி!னு ஃப்ரெண்ட்தான் இங்க கூட்டிட்டு வந்தா. காலையில இருந்து சூப்பரா என்ஜாய் பண்ணினேன். இப்போ கூடுதல் சந்தோஷமா பம்பர் பரிசு வேற!’’ என்று திக்குமுக்காடிப் போனார் ஷர்புன்னிசா.

“எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசிலடிங்க!” என்று இறுதி நிமிடங்களில் ஒரு ஆனந்த ஆட்டம் போட்ட கேர்ள்ஸ், ‘சிரிச்சிக்கிட்டே இருக்கணுமா... ‘ஜாலி டே’க்கு வாங்க!’ என பன்ச் சொல்லி `பேக் அப்' செய்தனர்!

இதற்கிடையே, கொளத்தூர் சத்யா ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த புதையல் பெட்டி போட்டியில் வென்ற வாசகிகளுக்கு ` 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

நெகிழ்ச்சித் தருணம்!

ஜாலி டே... கவலைக்கு எல்லாம் ஹாலி டே!

‘சீரியலில் நடிக்கலாம் வாங்க’ போட்டியில், ஆணாதிக்கக் கணவனிடம் அடிமைப்பட்டுப் போன பெண்ணுக்கு துணிச்சல் வந்தால், அவள் எதையும் செய்வாள் என்ற கருத்தை நடித்துக்காட்டி முதல் பரிசை வென்ற புரசைவாக்கத்தைச் சேர்ந்த மாலதி ராஜகோபாலனுக்கு வயது... ஜஸ்ட் 80! ‘ஜாலி டே’ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வரும் இவர், அவள் விகடன் நடத்திய வேலைவாய்ப்பு தொடர்பான கேம்ப்களிலும் பயிற்சியாளராகப் பங்கேற்றுள்ளார். பரிசு வாங்க மேடையேறியவர் மைக் பிடித்தபோது, உருகிவிட்டனர் அத்தனை தோழிகளும். ‘‘என் கணவருக்கு 85 வயசு. எங்களுக்குக் குழந்தை இல்ல. இதுவரைக்கும் வாழ்க்கையை எப்படியோ கடத்திட்ட எங்களுக்கு, கடைசி காலத்தை நினைச்சா பயமா இருக்கு. எங்களுக்குக் கடவுள் அமைதியான முடிவைத் தரணும்னு எல்லோரும் பிரார்த்தனை பண்ணிக்கோங்க!’’ என்று அவர் அரங்கத்தை கையெடுத்துக் கும்பிட, அனைவரும் அவருக்காக கண்கள் தளும்ப எழுந்து நிற்க, `ஜாலி டே' வரலாற்றில் மறக்க முடியாத நெகிழ்ச்சித் தருணம் அது!

க.தனலட்சுமி, கு.முத்துராஜா

படங்கள்: எம்.உசேன், வீ.நாகமணி, ச.சந்திரமௌலி, ரா. வருண் பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism