Published:Updated:

வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!

வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!

வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!

வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!

Published:Updated:
வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!

வீட்டை என்னதான் சுத்தமாகப் பராமரித்தாலும், எவ்வளவு பணம் செலவழித்து அலங்கரித்தாலும்... வீட்டுக்குள் ஒரு செடி இருந்துவிட்டால், அது கண்களுக்குத் தரும் குளிர்ச்சியே தனி! வீட்டுக்குள் செடிகள் வளர்க்கும்போது மண்ணிடுவது, உரமிடுவது போன்ற விஷயங்களைக் கையாள்வது தொடர்பாக வழிகள் பல சொல்கிறார் சென்னை, ‘ஹோம் எக்ஸ்னோரா’வின் பிரசிடென்ட் இந்திரக்குமார்...

வழி  1: வீட்டில் செடி வளர்க்கும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. கடையில் இருந்து வாங்கி வரும் செடியை தொட்டியில் நடுவதற்கு முன், அந்த மண்ணோடு கரும்புச்சக்கையையும் சேர்த்து கலந்து செடியை நட்டால், சில நேரங்களில் தண்ணீர் விடத் தவறினாலும், நீரை உறிஞ்சி தக்கவைக்கவல்ல கரும்புச் சக்கையால், செடிக்கு தொடர்ந்து நீர் கிடைக்கும். சாலையோரங்களில் இருக்கும் கரும்பு ஜூஸ் கடைகளில் கிடைக்கும் சக்கைகளே போதுமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டில் செடிகள்... வளர்க்க சூப்பர் வழிகள்!

வழி  2: செடிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வெளியில் வைத்து, இயற்கையான காற்றோட்டத்தில் தண்ணீரால் கழுவினால் அல்லது வாட்டர் ஸ்பிரே செய்தால்... செடியில் உள்ள தூசுகள் நீங்கி பார்க்கச் செழிப்பாக இருக்கும்.

வழி  3: சமையல் கழிவுகளை நேரடியாக தொட்டியில் போட்டால், கொசுத் தொல்லை ஏற்படும். மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளும் அதைக் கிளறிவிட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்கவும்.

வழி  4: வீட்டில் செடி வளர்ப்பது குறித்த தயக்கம், உரம். வீட்டிலேயே சமையல் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் செய்யலாம். இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்து, ஒன்றில் மக்காத குப்பைகளைச் சேருங்கள். மற்றொன்றில் காய்கறிக்கழிவுகளை இட்டு, மாட்டுச்சாணம் கலந்துவிட்டால்... உரம் ரெடி! மாட்டுச்சாணம் கிடைக்காத வர்கள் வறட்டிகளை வாங்கி தூள் செய்துகொள்ளலாம்.

வழி  5: மீன் கழிவை செடிக்கு உரமாக்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மீன் கழுவிய தண்ணீரையோ, மீன் கழிவுகளையோ நேரடியாக தொட்டியில் கொட்டினால் செடி கருகி இறந்துவிட வாய்ப்பிருக்கிறது. 100 கிராம் மீன் கழிவுடன் சம அளவு வெல்லம் (எந்த வெல்லமானாலும் சரி) கலந்து ஒரு தொட்டியில் வைத்துவிட வேண்டும். இதைக் கிளறிவிட அவசியம் இல்லை. 40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அது உரமாகி இருக்கும். ஒரு ஸ்பூன் உரத்துக்கு 50 ஸ்பூன் தண்ணீர் கலந்து செடிகளில் விட வேண்டும்.

வழி  6: செடிகள் செழிப்பாக வளர மற்றொரு வழி, மண்புழு உரத்தை தண்ணீரில் கலந்து கரைத்து செடிகளில் இடலாம்.

வழி  7: சூரிய ஒளி கிடைக்கும்படி செடிகளை ஜன்னல் அருகில் வைப்பது சிறந்தது. ‘வாஸ்து பிளான்ட்’ என்று அழைக்கப்படும் மூங்கில் செடிக்கு அதிகம் தண்ணீர் ஊற்ற வேண்டி இருக்கும். இதுவே, ‘அரிக்கா பாம்’ (Areca Palm) வகைச் செடிகள் மற்றும் மணிபிளான்ட் போன்ற செடிகளுக்கு மிகுதியான பராமரிப்பு தேவையில்லை என்பதால், இவையே இன்று பெரும் பாலானவர்களின் சாய்ஸ்!

- வீட்டுக்குள் பசுமையை அழைக்க பயனுள்ள வழிகள் சொல்லி முடித்தார் இந்திரக்குமார்.

வே.கிருஷ்ணவேணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism